Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு தனுசு ராசி பலன்கள்

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
News
தனுசு

2022 புத்தாண்டு ராசிபலன் தனுசு

கொள்கைப்பிடிப்பு மிக்கவர் நீங்கள். புதன் பகவான் சாதகமாக இருக்கும்போது, 2022-ம் ஆண்டு பிறப்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய சொத்தை விற்று, புது சொத்து வாங்குவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.

தனுசு
தனுசு

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். நவீன எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், தங்க ஆபரணம் வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்க வங்கி லோன் கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால், செலவுகள் துரத்தும். அலைச்சல்கள் உண்டு.

13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், புதிய முயற்சிகள் தடைப்பட்டு முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். 14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு 4-ம் வீட்டிலேயே அமர்வதால், இழுபறியான காரியங் கள் இனிதே முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும்.

20.3.2022 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால், குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாள்கள் தூக்கம் குறையும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடப்பீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளை களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணி பெண்கள் பயணங்களைத் தவிர்க்கவும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர் வதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப்போது அடிபடும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. எனினும் செலவு களும் தொடரும். முக்கிய விஷயங்களில் அறிவுபூர்வமாக முடிவெடுப்பது நல்லது. பணம், நகையைக் கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

வியாபாரிகளே! மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். சொந்த இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும்.

தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி, அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர், சிமென்ட், உணவு வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில், பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகளின் தொந்தரவுகள் நீங்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மே மற்றும் டிசம்பர் மாதத்தில் புது சலுகைகள், சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரியுடன் இருந்த கருத்துமோதல்கள் நீங்கும்; நட்புறவு மலரும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் தொடக்கம் உங்களைச் சற்று சிரமப்படுத்தினாலும் முடிவில் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: சனிக் கிழமையன்று கும்பகோணம் அருகில் திருபுவனம் தலத்தில் அருளும் சரபேஸ் வரரை வணங்குங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; மகிழ்ச்சி பெருகும்.