Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு விருச்சிகம் ராசிபலன்கள்!

விருச்சிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருச்சிகம்

2022 ஆங்கிலப்புத்தாண்டு விருச்சிக ராசிபலன்

தன்னம்பிக்கையால் முன்னேறுபவர் நீங்கள். புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும்போது 2022 புத்தாண்டு பிறப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு 
விருச்சிகம் ராசிபலன்கள்!

ங்கள் ராசியிலேயே புத்தாண்டு பிறப்பதால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும். எனினும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. எந்த விஷயத்தையும் ஆழ்மனதில் போட்டு வைக்க வேண்டாம்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல் லும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். இயலாத காரியங்களையும் சாமர்த்தியமான பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். செலவுகள் தொடர்ந்து வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம். அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று விட்டுப்பிடிப்பது நல்லது. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால், வேலை கூடும். தாயாருடன் மோதல், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டைச் சீர் செய்ய வேண்டி வரும்.

14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு 5-ம் வீட்டிலேயே அமர்வதால், மன இறுக்கம், பணப்பற்றாக்குறை அகலும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலர், புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும்.

20.3.2022 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற நினைப்பில் இருந்து விடுபடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். திருமணத் தடைகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய சொத்தை விற்பீர்கள். பிரச்னை களுக்கு யதார்த்தமாகத் தீர்வு காண்பீர்கள். வழக்கால் பணம் வரும். வெளிநாட்டவர், வெளி மாநிலத் தவருடன் இணைந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. அனுபவம் இல்லாத துறையில் இறங்கி கைப் பொருளை இழக்க வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஏப்ரலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் மதிப்பு - மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்கள் அழைத்துப் பேசும். இந்தாண்டு முழுக்க வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதி உங்களுக்கு முன்னேற்றம் தருவதாகவும் நிறைவில் அனுபவப் பாடங்களைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: உளுந்தூர் பேட்டைக்கு அருகில் - பரிக்கல் எனும் ஊரில் அருளும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.