Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

2022 புத்தாண்டு பலன்கள்

இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத் திலும் ஆர்வம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்து இருக்கும் வேளையில் 2022 புத்தாண்டு பிறப்பதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். காரியவாதிகளை ஒதுக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 
மேஷ ராசிபலன்கள்

உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சேமிப்புகளைக் கரைக்க வேண்டாம். அரசாங்க விஷயம் சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். சொந்தபந்தங்கள் இணைவார்கள். ரியல் எஸ்டேட், கமிஷன் வகை களால் பணம் வரும். அரசியலில் செல்வாக்கு கூடும்.

13.4.2022 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக காணப்படுவதால் திடீர்யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள்.

14.4.2022 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள், வேலைப்பளு அதிகரிக்கும். புதியவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வருடம் பிறக்கும்போது 2-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். குடும்பத்தில் குழப்பம் வந்துபோகும். கேது 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். வெளி வட்டாரத்தில் அனுசரித்துச் செல்லுங்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. 21.3.2022 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேது வும் நுழைவதால் மனக்குழப்பம், எதையோ இழந்ததைப் போன்ற மனோநிலை வந்து நீங்கும்.

இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் உண்டு. பண பலம் கூடும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சாதகமான தீர்வு கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

வியாபாரிகளே! மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜனவரி, பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும். இரும்பு, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பர்.

உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு உண்டு. ஆனால் அந்தப் பதவியை காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் புது வேலை அமையும். ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஆகஸ்டு மாதங்களில் அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல் மற்றும் செலவைத் தந்தாலும் அதிரடி முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருச்சி- உறையூரில் அருளும் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை, சனிக்கிழமையில் சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.