Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு மகர ராசி பலன்கள்!

மகரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகரம்

2022 புத்தாண்டு ராசிபலன் மகரம்

சாதுர்யமாகக் காய்நகர்த்தும் ராஜதந்திரி நீங்கள். உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் 2022 புத்தாண்டு பிறப்பதால், அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதிகள் பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் உதவிகள் கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு 
மகர ராசி பலன்கள்!

சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். செலவுகளைக் குறைப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பு கூடும். புதிதாக வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். 14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டில் அமர்வ தால், ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். முக்கியச் கோப்பு களைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

20.03.2022 வரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப வீட்டில் கேது இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக் கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். வீடு - வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றம் வந்து செல்லும். வாகனம் தொடர்பாக சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

ஆண்டு முழுக்க ஜன்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். இயன்றால், ஒருமுறை முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம். வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். செரிமானக் கோளாறு வரும்.

வாழ்க்கைத் துணைவர் வழியில் அலைச்சலும் செலவும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரும். பெரிதுப் படுத்த வேண்டாம். எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரிகளே! இந்த வருடம் பெரிய அளவில் முதலீடுகள் செய்யவேண்டாம். ஏப்ரல், மே மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வேலை ஆட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். ஜூன் மாதத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உணவு, மருந்து, இரும்பு, பிளாஸ்டிக் ஆகிய வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத் தைத் தவறவிடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச் சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. முக்கிய ஆவணங் களில் கையெழுத்திடுவதில் அவசரம் வேண்டாம். கவனத்துடன் செயல்படவும். சட்டத்திற்குப் புறம்பான வகையில் எவருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்று நாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகைகள் கூடும். சக ஊழியர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளைத் தருவதாகவும், சமூகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வகையிலான வழிகளைக் காட்டுவதாகவும் அமையும்.

பரிகாரம்: ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் திருச்செந்தூர் அருள்மிகு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டு வாருங்கள். பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கைகூடும்.