ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

நவமியில் நவ நாழிகை

நவமியில் நவ நாழிகை
பிரீமியம் ஸ்டோரி
News
நவமியில் நவ நாழிகை

எஸ். புவனா, சென்னை 63

திதி என்பது பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறைக் காலத்தில் (சுக்ல பட்சம்) 14 திதிகளும், பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரை தேய்பிறைக் காலத்தில் (கிருஷ்ண பட்சம்) 14 திதிகளும் வருகின்றன.

இந்த இரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. அவை சம்ஸ்கிருதத்தில் ஒன்று, இரண்டு என எண்களுக்குரிய பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளன.

சாஸ்திர சம்பிரதாயங்களின்படி இந்தத் திதிகளுக்குச் சிறப்பு அல்லது குறைபாடுகள் உண்டு. பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திதிகளில் சில திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், புதுத்தொழில் ஆரம்பம் ஆகியவற்றுக்கு உகந்தவை என்பது சாஸ்திரக் கோட்பாடு.

அதேநேரம், அமாவாசைக்குப் பிறகு வரும் திதிகளில்... வானில் சந்திரன் நன்றாகத் தெரியும் நாளான பஞ்சமி முதலே வளர் பிறையின் அனுகூலங்கள் உண்டாகும் என்பது தத்துவம். அதுபோலவே, தேய்பிறையில் பௌர்ணமியில் இருந்து பஞ்சமி வரை வளர்பிறையாகவே எடுத்துக்கொள்ளும் வழக்கமும் உண்டு

நவமியில் நவ நாழிகை
நவமியில் நவ நாழிகை

அமாவாசைக்கு மறு நாளான பிரதமையை ‘பாட்டிமை’ என்பர். அன்று புதிய காரியங்கள், சுபகாரியங்கள் செய்தால் தடைகளும் தாமதமும், எதிர்ப்பும், ஏமாற்றமும் ஏற்படலாம். பௌர்ணமிக்கு மறு நாளான பிரதமைக்கு இந்தத் தோஷம் கிடையாது என்பார்கள்.

துவிதியையின் அதிதேவதை பிரம்மன். அரசாங்கக் காரியங் களைத் தொடங்க ஏற்றது. திருதியை வளர்ச்சியைக் குறிப்பது. சதுர்த்தி விநாயகர் வழிபாட்டுக்கு உகந்தது. பஞ்சமியில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். முருகனுக்கு உகந்த திதி, சஷ்டி. சப்தமியைப் பயணத்துக்கு உகந்த நாளாக நம் முன்னோர்கள் தேர்வு செய்வார்களாம். தசமி மதச் சடங்குகளுக்கும் ஆன்மிகப் பணிகளுக்கும் ஏற்றது.

ஏகாதசி பெருமாளை வழிபட்டு உபவாசம் இருப்பதற்கும், துவாதசி அதிதிகளை உபசரித்து உணவளிப்பதற்கும் உகந்த திதிகள். திரயோதசி சிவனுக்கு உகந்த பிரதோஷ நாளாகும். சதுர்த்தசியின் அதிதேவதை காளிதேவி. மந்திரம் மற்றும் புது வித்தைகள் பயில உகந்த நாள் என்பார்கள்.

திதிகளில் அமாவாசை நாள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. பௌர்ணமி திதிகளில் மிகவும் சிரேஷ்டமானது; சத்யநாராயண பூஜை செய்வதற்கும், தேவியின் நவாவர்ண பூஜை செய்வதற்கும் உகந்தது. இனி அஷ்டமி, நவமி குறித்த தகவல்களை அறிவோம்.

அஷ்டமி, நவமி திதிகள் தோஷமுள்ளவையாகக் கருதப் படுகின்றன. இதன் அடிப்படையில் சுபகாரியங்கள் செய்யவும், புதிய காரியங்கள் தொடங்கவும் இந்தத் திதிகள் தவிர்க்கப்படுகின்றன. அதேநேரம் நவமிக்கு மட்டும் ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நவமி, நவ நாழிகை மட்டும் தவிர்த்தால் போதும் என்ற விதி விலக்குத் தரப்படுகிறது. ஆனால், அஷ்டமி என்றாலே பலருக்கு புதுக்காரியங்கள் செய்ய பயம் ஏற்பட்டுவிடுகிறது!

- எஸ்.புவனா, சென்னை-65