Published:Updated:

வீட்டு மனை வாங்க உகந்த காலம்!

மனை வாங்க யோக காலம்
பிரீமியம் ஸ்டோரி
மனை வாங்க யோக காலம்

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வீட்டு மனை வாங்க உகந்த காலம்!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:
மனை வாங்க யோக காலம்
பிரீமியம் ஸ்டோரி
மனை வாங்க யோக காலம்

புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவம். பஞ்சபூதங்களில் நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றை முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண்பதே வாஸ்துவின் உபயோகம்.

வீட்டு மனை வாங்க உகந்த காலம்!
Esin Tellioglu

வ்வகையில் 12 ராசிக்காரர்களுக்கும் வீடு அமைவதற்கான வழிகாட்டல்களைத் தருகிறது வாஸ்து சாஸ்திரம். குறிப்பாக புதிதாக வீடு கட்டுவோர், ஊரின் எந்த பாகத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற விதிமுறைகளைச் சொல்கிறது.

தவிர்க்கவேண்டிய பகுதிகள்

மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது

ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது

கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.

கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.

துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.

விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.

தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.

கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.

மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.

வீட்டு மனை வாங்க உகந்த காலம்!

ஒருவேளை இந்த நியதிப்படி உங்களுக்கு மனை அமையவில்லை என்றால், நீங்கள் மனை வாங்கும் நேரம் உங்களுக்கு சுபம் அளிக்கலாம். ஆகவே குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கிட்டு மனை வாங்குவது சுபபலன்களை அளிக்கும்.

வீட்டுமனையை வாங்கும் காலம் கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு.

நட்சத்திர நாட்கள்

நீங்கள் வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்

மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்

வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்

கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம் மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அசுவினி, சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை. அதேபோல், சித்தயோகம், அமிர்தயோக காலங்கள் கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றவை.

வீட்டு மனை வாங்க உகந்த காலம்!
pixelfusion3d

திசைகளும் மாதங்களும்!

மேலும் புதிய வீடு எந்த திசையை நோக்கி அமையப் போகிறதோ, அதற்கேற்ற காலங்களைத் தேர்ந்தெடுத்து பணியைத் தொடங்க வேண்டுமாம்.

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும்.

மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்யவேண்டும்.

வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு.

தெற்கு திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களைத் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.