Published:Updated:

திதிகளும் தெய்வங்களும்...

திதிகள்
பிரீமியம் ஸ்டோரி
திதிகள்

ஸ்ரீபைரவ தாஸர் Dr. சு.ஐயப்ப தீக்ஷிதர்

திதிகளும் தெய்வங்களும்...

ஸ்ரீபைரவ தாஸர் Dr. சு.ஐயப்ப தீக்ஷிதர்

Published:Updated:
திதிகள்
பிரீமியம் ஸ்டோரி
திதிகள்

1. பிரதமை: அதிபதி-அக்னி பகவான். இந்தத் திதிநாளில் உலோகம், மரம் ஆகியவற்றில் சிற்ப வேலைகள், பாய் முடைதல், படுக்கைக்குச் சித்திர வேலை ஆகியவற்றைச் செய்யலாம்.

2. துவிதியை: அதிபதி - துவஷ்டா தேவதை. விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்காரியங்களுக்கான தொடக்கம், வீடு கட்ட ஆரம்பிப்பது ஆகியவற் றைச் செய்யலாம்.

3. திருதியை: அதிபதி - பார்வதி. வீடு கட்டுதல், கிரகப் பிரவேசம், பெண் பார்க்கும் படலம் ஆகிய வைபவங்களுக்கு உகந்தது.

4. சதுர்த்தி: அதிபதி - கஜநாதன் [விநாயகர்]. தெய்வக் காரியங்களுக்கு உகந்த நாள். மந்திரக்கட்டு செய்ய உகந்தது என்றும் சொல்வர். இந்தத் திதி நாளில் பெரும்பாலும் நற்காரியங்களைத் தவிர்ப்பார்கள் [சங்கடஹர சதுர்த்தி, ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி விதிவிலக்கு].

5. பஞ்சமி: அதிபதி- சர்ப்ப தேவதை. இந்தத் திதியில் செய்யும் காரியங்கள் நிலைத்து நிற்கும் என்பது ஐதிகம்.

6.சஷ்டி: அதிபதி-முருகன். புது வேலையில் சேர்வது, பசு மாடு வாங்குவது, வீடு-வாகனம் வாங்குவது, மருந்து தயாரிப்பது ஆகியவற்றைச் செய்யலாம்.

7. சப்தமி: அதிபதி - சூரியன். வீடு கட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஷ்டை, இடம் மாற்றம், விவசாயம் ஆகியவற்றுக்கு உகந்தது.

8.அஷ்டமி: அதிபதி - சிவபெருமான். தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம் ஆகியவற்றை விற்கவும் யுத்தம் தொடங்கவும் உகந்த திதி நாள். கோயில் வழிபாடுகளுக்கு உகந்த திதி இது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

9.நவமி: அதிபதி-பாராசக்தி. பகைவரைச் சிறைப்பிடிக்கவும் பகை வெல்லவும் உகந்த நாள்.

10. தசமி: அதிபதி-ஆதிசேஷன். தர்ம காரியங்கள் செய்யவும், ராகு-கேது பரிகாரம் செய்யவும், சரீர ஆரோக்கிய முயற்சிகளுக்கும், மங்களகரமான காரியங்களுக்கும், பெரியோர் களைச் சந்திக்கவும் உகந்த திதி.

11.ஏகாதசி: அதிபதி - தர்ம தேவதை. பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்தத் திதி. விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவற்றைச் செய்யலாம்.

12. துவாதசி: அதிபதி - விஷ்ணு.

விருந்து, தனம்-தான்யம் சம்பாதிப்பது, சுபச் செலவுகள், தர்ம காரியங்கள் ஆகியவற்றைச் செய்யலாம் [திருவோணம் இணையும் துவாதசியைத் தவிர்ப்பார்கள்].

திதிகளும் தெய்வங்களும்...

13.திரயோதசி: அதிபதி - மன்மதன். சகல செளபாக்கியமான மங்களகரமான காரியங்கள் செய்வது, ஆபரணம் வாங்க, நாட்டிய அரங்கேற்றம், வாகனப் பயிற்சி ஆகியவற்றுக்கு உகந்தது. நீண்ட காலமாகத் திருமண தடை உள்ளவர்கள், இந்தத் திதியில் பெண் பார்க்கச் சென்றால், திருமணம் சீக்கிரம் கைகூடும். திருமணத் தடையை நீக்கும் பரிகாரங்களைச் செய்ய உகந்த திதி.

14.சதுர்த்தசி: அதிபதி - கலி புருஷன். பல் சீரமைத்தல், தைலம் தேய்த்தல், யாத்திரை ஆகியவற்றுக்கு உகந்தது.

திதிநாள்கள் குறித்து பொதுவான சில வழிகாட்டல்கள் உண்டு.

வளர்பிறை திதி நாள்களில் நாராயணரையும் தேய்பிறையில் சிவபெருமானையும் வணங்கி வரவேண்டும்.

வளர்பிறை எனும் சுக்லபட்சத்தில் சுப காரியங் களைச் செய்வது விசேஷம். தேய்பிறையில், சுப காரியங்கள் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அன்று மூதாதையரை நினைத்து வழிபடுவ தால், நம் சந்ததி சிறக்கும்.

பௌர்ணமியில் கடவுள் வழிபாடு செய்ய வும், யாகம், மங்களகரமான காரியங்கள், மருந்து உண்ணல், திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை ஆகியவற்றைச் செய்யலாம்.

இருதய ரேகை... இனிக்கும் பலன்கள்!

ரு மனிதனுடைய அறிவாற்றல்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் உறுப்பு ‘மூளை’ எனில், அவனுடைய உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும், பரிமாணங் களையும் வெளிப்படுத்துவது ‘இதயம்’ ஆகும். நம் உள்ளங்கையில், இதயத்தின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க வும், தேக ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டவும் ஆதார மாக அமைந்துள்ளது, இருதய ரேகை அல்லது ஹார்ட் லைன் எனப்படும். புத்தி ரேகைக்கு மேலாகவும், விரல்கள் உள்ளங்கையை தொடும் பகுதிக்குக் கீழாகவும், புதன், சூரியன், சனி, குரு ஆகிய மேடுகளின் கீழே ஓடும் ரேகை இருதய ரேகை ஆகும்.

திதிகளும் தெய்வங்களும்...

இந்த ரேகை தெளிவாகவும், ஆழமாகவும், சிக்கல்கள் அல்லது சங்கிலி அமைப்பாக இல்லாமல் இருந்தால் வெகுசிறப்பு (படம்-1). இத்தகைய ரேகை அமைப்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டமானவர்கள். அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், தெளிவான மனமும், எழிலான தோற்றமும் அமைந்திருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

இருதய ரேகை விட்டு விட்டு அமைந்திருந் தாலோ, சங்கிலித் தொடர் போன்றோ, தெளிவு இல்லாமலோ அமைந்திருந்தால் (படம்2), உணர்ச்சிகளுக்கு அடிமைப் படுகின்றவர் களாகவும், ஆரோக் கியம் இல்லாதவர்களாகவும், குழப்பவாதி களாகவும், போதிய செல்வம் சேர்க்கமுடியாதவர் களாகவும், சிக்கலான வாழ்க்கைக்குள் தவிப்பவர்களாகவும் திகழ்வார்கள்!