Published:Updated:

பானுமத்திம தோஷம் - யார்யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்?

சந்திரன் கேதுவுடன் சஞ்சரிக்கும்போதும், சூரியன் ராகுவுடன் சஞ்சரிக்கும்போதும்தான் கிரகணங்கள் ஏற்படும். இதனால்தான் தோஷங்கள் உண்டாகின்றன. சூரியபகவான், கடக ராசிக்குள் வரும்போதுதான் தட்சிணாயனம் தொடங்குகிறது.

பானுமத்திம தோஷம்
பானுமத்திம தோஷம்

ஆடி பௌர்ணமியான இன்று சந்திரகிரகணம் வருகிறது. சந்திரகிரகணம் முடிந்ததும் நாளை பானுமத்திம தோஷம் ஏற்படுகிறது. சூரிய பகவான் புதன் மற்றும் சுக்கிரனுக்கு இடையே பயணிக்கும்போது ஏற்படுவதே பானுமத்திம தோஷமாகும்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

பானுமத்திம தோஷம் குறித்தும் அதற்கான பரிகாரங்கள் குறித்தும் பாண்டிச்சேரி குருஜி. முத்துகுருக்களிடம் பேசினோம்...

`சந்திரன் கேதுவுடன் சஞ்சரிக்கும்போதும், சூரியன் ராகுவுடன் சஞ்சரிக்கும்போதும்தான் கிரகணங்கள் ஏற்படும். இதனால்தான் தோஷங்கள் உண்டாகின்றன. சூரியபகவான், கடக ராசிக்குள் வரும்போதுதான் தட்சிணாயனம் தொடங்குகிறது. தட்சிணாயனத்தில் நீட்சமாக இருக்கும் செவ்வாயுடன் சூரிய பகவான் சேர்கிறார். இதனால்தான் தோஷம் ஏற்படுகிறது.

சூரியன்
சூரியன்
https://pixabay.com

இந்த வேளையில் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் பரிகாரம் செய்வது நல்லது. மேலும், நாளை (17.7.19) சூரிய பகவான் புதன் சுக்கிரருக்கு இடையே பயணம் செய்கிறார். அதனால் இதற்குப் பானுமத்திமம் என்று பெயர். பானு என்றால் சூரியன். பானு இரண்டு கிரகங்களுக்கு இடையே இருப்பதால் ஏற்படும் தோஷத்துக்கு பானுமத்திம தோஷம் என்று பெயர்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், கடக ராசி மற்றும் கடக லக்னம் உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டும் சேர்ந்து இருப்பவர்கள் அனைவரும் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

சூரியபகவான்
சூரியபகவான்
Vikatan

சிவன் கோயில் மற்றும் முருகன் கோயிலுக்குச் சென்று வந்தாலே போதுமானது. பானுமத்திம தோஷத்திலிருந்து விடுபட்டுவிடலாம்' என்றார்.