Published:Updated:

பிலவ புத்தாண்டு பொதுப்பலன்கள்! - ‘பயிர் செழிக்கும்... தொழில் சிறக்கும்!'

தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்

பிலவ வருடத்தின் மந்திரியாக புதன் அமைகிறார். ஆகவே, அறிவுசார் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்; புதிய கண்டு பிடிப்புகள் வியக்கவைக்கும்.

பிலவ புத்தாண்டு பொதுப்பலன்கள்! - ‘பயிர் செழிக்கும்... தொழில் சிறக்கும்!'

பிலவ வருடத்தின் மந்திரியாக புதன் அமைகிறார். ஆகவே, அறிவுசார் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்; புதிய கண்டு பிடிப்புகள் வியக்கவைக்கும்.

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்

சார்வரி வருடம் நிறைவடைந்து, 14.4.2021 புதன் கிழமை அன்று (13.4.2021 அன்று நள்ளிரவு 1.32-மணிக்கு), ஸர லக்னமாகிய மகர லக்னத்தில், சனி ஹோரையில் `பிலவ’ தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

பிலவ புத்தாண்டு பொதுப்பலன்கள்! - ‘பயிர் செழிக்கும்... தொழில் சிறக்கும்!'

மங்கலகரமான இந்தப் பிலவ புத்தாண்டில் சில பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். இந்த வருடத்தின் ராஜாவாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி மற்றும் சேனாதிபதியாகவும் செவ்வாய் பகவான் வருகிறார். கனிமப் பொருள்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ராணுவம் பாதுகாப்புத்துறை பலப்படும். நிலம்-மனை சார்ந்த தொழில்களில் சற்று உயர்வு உண்டு. சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால், கறுப்பு நிற பொருள்களின் மதிப்பு கூடும்.

பிலவ வருடத்தின் மந்திரியாக புதன் அமைகிறார். ஆகவே, அறிவுசார் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்; புதிய கண்டு பிடிப்புகள் வியக்கவைக்கும்.

பிலவ புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செயபுவனம் பாழ்!


அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாகவே பெய்யும். மழை நீர் வீணே கடலில் கலக்கும் நிலை உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர். மக்களுக்கு அதிக நன்மைகள் இல்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களுக்குப் பாதிப்புகள் நேரும். பால்பொருள்கள் உணவு தானியங்களும் பாதிப்பு அடையும் என்பது இப்பாடலின் கருத்து.

இந்தப் புத்தாண்டு பலன்களாக ஜோதிடக் கிரந்தங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

ந்த ஆண்டுக்கான உலக ஜாதக தேவதையாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விளங்குவதால், நெல் போன்ற பயிர்கள் நன்கு விளையும். சித்திரை முதல்நாள் புதன்கிழமையாக அமைவதால் நன்செய் - புன்செய் பயிர்கள் செழிக்கும். காப்பி, ஏலக்காய், மிளகு போன்றவற்றுக்கு விலை மதிப்பு உயரும்.

குறிப்பாக உளுந்து, எள் முதலான கறுப்பு நிற தானியங்களின் விலை அதிகரிக்கும். உற்பத்தியும் அதிகரிக்கும். தொழில்கள் செழிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அதன் மூலம் தனியார் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு பிறக்கும்போது செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றுச் சஞ்சரிப்பதால், புதிய நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உண்டு. குறிப்பாக கால்நடைகளைப் பாதிக்கும் வைரஸ் தோற்றுகள் உருவாகலாம். இந்த ஆண்டின் தான்யாதிபதியான குரு பகவான் லக்னத்துக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வியாபாரிகள் தங்களின் தொழிலில் பல மாற்றங்களைச் சந்திக்க நேரும். குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும்.

காய்கறி, பழங்கள், பால், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். எள், கடுகு, புண்ணாக்கு போன்ற எண்ணெய் வித்துக்களின் விலை கடுமையாக உயரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். பல அயல்நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யத் தேடி வரும். நாட்டில் போராட்டங்கள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு உண்டு. கல்விக்கட்டணம் போன்ற பல அத்தியாவசியக் கட்டணங்கள் அதிகரிக்கும். விபத்துகள் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ புத்தாண்டு, கடந்த கால தேக்க நிலைகளை மாற்றி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக அமையும். புதிய அனுபவங்களையும் மாற்றங்களையும் தருவதாகத் திகழும் என்கின்றன ஜோதிடசாஸ்திர நூல்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism