திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்

சென்னை சூர்யோதயத்தின்படி சுத்த வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்தவர்: `ஜோதிடஸ்ரீ’ முருகப்ரியன்

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்

இந்த வருடம் இப்படித்தான்!

மங்கலரகமான `பிலவ’ புத்தாண்டு, 13.4.21 அன்று நள்ளிரவுக்குப் பிறகு (14.4.21 அதிகாலை) 1:32 மணிக்கு சர லக்னமாகிய மகரத்தில், சனி ஹோரையில் பிறக்கிறது.

கிரக நிலைகள், பெயர்ச்சி நிகழ்வுகளின் அடிப்படையில் அனைத்து ராசியினருக்குமே ஏதோ ஒருவகையில் ஏற்றம் தரப்போகும் ஆண்டு இது. சிற்சில பாதிப்புகள் உண்டு என்றாலும் அவையும் சிறந்த அனுபவ பாடத்தைத் தருவதாகவே அமையும்.

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
Serg_Velusceac

புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் மற்றும் சுக்ர பகவான் இருக்கும் நிலைப்படி, நல்ல மழைப் பொழிவு உண்டு. எனினும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும். வெள்ளப் பெருக்கின் காரணமாக பாதிப்புகளும் ஏற்படலாம்.

கனிமச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும். சுக்ர பகவான் இந்தப் புத்தாண்டில் சஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் வருகிறார். ஆகவே, கல்வியில் நம் தேசம் முதன்மை பெற்றுத் திகழும்.

அதேபோல், பிலவ வருடத்தின் மந்திரியாக புதன் அமைகிறார். ஆகவே, அறிவுசார் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்; புதிய கண்டுபிடிப்புகள் வியக்கவைக்கும்.

புதிய விவசாய உபகரணங்கள் புழக்கத்துக்கு வரும். பழைய ஆலயங்கள் பலவும் பொலிவு பெறும். அதேநேரம் ஆன்மிகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.

தொழில் துறையைப் பொறுத்தவரையிலும் அந்நிய முதலீடுகள் எதிர்பார்த்தபடி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கணிசமான சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேயிலை, நறுமணப் பொருள்கள் அதிகம் விளைச்சல் காணும். கால்நடைகள் பாதிப்புகளைச் சந்திக்க நேரும். எண்ணெய் வித்துகள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்கள் - எலெக்ட்ரானிக்ஸ் உபகருவிகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம். பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும்.

ராணுவம், காவல்துறை உட்பட பாதுகாப்புத் துறைகள் நவீனமயமாகும். விண்வெளி ஆய்வு தொடர்பான முயற்சிகளில் சிரமங்களும் தடைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அண்டை நாடுகள் கடும் வீழ்ச்சியையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும். பெட்ரோல் முதலான எரிபொருள்களின் விலை, ஒரு நிலையில் இல்லாமல் மக்களைச் சிரமப்படுத்தும். கட்டுமானப் பொருள்களின் விலை சற்று குறையும்.

செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையின் காரணமாக ரத்தம் தொடர்பான புதிய நோய்கள் உருவாக வாய்ப்பு உண்டு. தொற்று நோய் பாதிப்பும் உண்டு. மக்களுக்கான இலவச காப்பீடு திட்டங்களில் அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்துவார்கள்.

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்

பிலவ வருட வெண்பா பலன்

பிலவ புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதிதுன்பம் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்!

கருத்து: பிலவ ஆண்டில் மழை குறைவாகவே பெய்யும். மழை நீர் வீணே கடலில் கலக்கும் நிலை உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர். மக்களுக்கு அதிக நன்மைகள் இல்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களுக்குப் பாதிப்புகள் நேரும். பால்பொருள்கள் உணவு தானியங்களும் பாதிப்பு அடையும்.

நவநாயகர்களின் நிலை...

செவ்வாய் - ராஜ்ஜியாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

புதன் - மந்திரி

குரு - தான்யாதிபதி

சுக்கிரன் - ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி

சூரியன் - ரஸாதிபதிராகு - கேது பெயர்ச்சி

இந்த வருடத்தில் கிரகப் பெயர்ச்சிகள்...

ராகு - கேது பெயர்ச்சி: பிலவ வருடத்தில் பங்குனி மாதம் ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பங்குனி மாதம் 7-ம் தேதி (21.3.2022), திங்கள்கிழமை அன்று மதியம் 2:52 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்கிறார். கேது பகவான் விருச்சிகத்திலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார்.

குருப்பெயர்ச்சி: குருபகவானின் வக்ர பெயர்ச்சி இந்த பிலவ வருடம் ஆவணியில் நிகழ்கிறது. அதாவது, ஆவணி மாதம் 29-ம் நாள் (14.9.2021) செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 9:48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசிக்கு (வக்ர பெயர்ச்சி) குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.

அதேபோல், ஐப்பசி மாதம்-27 (13.11.2021) சனிக்கிழமை அன்று மாலை 6:10 மணிக்கு, அவிட்டம் 3-ம் பாதம் கும்ப ராசிக்குப் பெயர்கிறார்.

அதேபோல், பங்குனி-30 (13.4.2022) புதன்கிழமை அன்று நள்ளிரவுக்குப் பிறகு (விடிந்தால் வியாழன்) 4:09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்கிறார்.

இந்தப் பிலவ வருடத்தில் சனிப்பெயர்ச்சி இல்லை.

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்
சென்னை - திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் சென்னை - திருவல்லிக்கேணி

இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

இன்பன் நல் புவிதனக்கு இறைவன்

தன் துணை ஆயர் பாவை நப்பின்னை

தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்

வன்துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி

வாய் உரை தூது சென்று இயங்கும்

என் துணை எந்தை தந்தை தம்மானை

திருவல்லிக்கேணிக் கண்டேனே

- திருமங்கை ஆழ்வார்

பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்
பிலவ வருட சக்தி பஞ்சாங்கம்