ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

உச்சமும் நீசமும்!

நவகிரகங்கள
பிரீமியம் ஸ்டோரி
News
நவகிரகங்கள

1.நவகிரகங்களின் நிலைகள் 2.குழந்தை பாக்கியம் கைரேகை பலன்கள்

ஒருவரது ஜாதகத்தில் எந்த ராசியில் எந்த கிரகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. அதன்படி அந்த கிரகத்தின் உச்ச, நீச நிலைகளை அறிந்து, அந்த ஜாதகருக்குரிய பலன்களைச் சொல்ல வேண்டும்.

உச்சமும் நீசமும்!

உதாரணமாக, ஒருவரது ஜாதகத்தில் துலாம் ராசியில் சனி இருந்தால், அது சனி பகவானின் உச்சநிலை. அந்த ஜாதகருக்கு சனி தசை நடக்கும் காலத்தில் மிகச் சிறப்பான பலன்கள் ஏற்படும் என அறியலாம். இனி, கிரகங்கள் எந்தெந்த ராசியில் உச்ச, நீச, பகை நிலை பெறுகிறார்கள் என்பதை அறிவோம்

சூரியன்: சிம்ம ராசியில் ஆட்சி; மேஷ ராசியில் உச்சம்; துலாம் ராசியில் நீசம்; மகர, கும்ப ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

சந்திரன்: கடக ராசியில் ஆட்சி; ரிஷபத்தில் உச்சம்; விருச்சிகத்தில் நீசம்; மகரம், கும்ப ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

செவ்வாய்: மேஷம், விருச்சிக ராசிகளில் ஆட்சி; மகர ராசியில் உச்சம்; கும்பம், மிதுன, கன்னி ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

புதன்: மிதுனம், கன்னி ராசிகளில் ஆட்சி; கன்னி ராசியில் உச்சம்; மீன ராசியில் நீசம்; சிம்ம ராசியில் பகை; மற்ற ராசிகளில் நட்பு.

குரு: தனுசு, மீன ராசிகளில் ஆட்சி; கடக ராசியில் உச்சம்; மகர ராசியில் நீசம்; ரிஷப, துலா ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

சுக்கிரன்: ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி; மீன ராசியில் உச்சம்; கன்னி ராசியில் நீசம்; மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

சனி: மகரம், கும்ப ராசிகளில் ஆட்சி; துலாம் ராசியில் உச்சம்; மேஷ ராசியில் நீசம்; கடகம், சிம்மம் ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

ராகு, கேது: விருச்சிக ராசியில் உச்சம்; ரிஷப ராசியில் நீசம்; கடகம், சிம்மம், கும்பம், மேஷம் ஆகிய ராசிகளில் பகை; மற்ற ராசிகளில் நட்பு அல்லது சமநிலை.

ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில், அந்த கிரகம் தரும் சௌபாக்கியங்கள் ஜாதகனுக்குச் சாதகமாக அமையும். அது போல, கிரகங்களின் நீச நிலையால் அந்த கிரகம் தரும் பலன்கள் குறைவாக இருக்கும்.

- டி.எஸ்.என்.

உச்சமும் நீசமும்!

குழந்தைப் பாக்கியம் எப்படி?

ஒருவரின் குழந்தைப் பாக்கியம் குறித்து ஜாதகத்தை ஆராய்ந்து பலன் அறிவது போன்று, நம்முடைய உள்ளங்கையில் அமைந் திருக்கும் ரேகைகளை ஆராய்ந்தும் பலன் அறியலாம்.

ஒருவருக்கு உடனடியாக குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றால், அதற்கான அமைப்புகள் அவரது ஜாதகத்திலும், கைரேகையிலும் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில், குழந்தைச் செல்வத்தைக் காட்டும் கைரேகை அமைப்பு பற்றி இங்கே பார்ப்போம்.

தம்பதி இருவருக்கும் புத்திரக் காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

இதயரேகை நேர்க்கோடுபோல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்குக் கீழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளைக் கடந்து, குரு மேட்டின் மையப் பகுதியில் கிளையுடன் அமைந்திருக்க வேண்டும்.

திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ, அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தை ரேகைகள்) காணப்பட வேண்டும்.

சுக்கிரமேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்துவிரிந்து காணப்பட வேண்டும்.

இதுபோன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்துவிட்டால்... கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் மாறாத பாசத்துடன் இருப்பார்கள். அதோடு, அன்பின் அடையாளமாக அழகான, அறிவான, ஆரோக்கியமான குழந்தை பாக்கியத்தை உரிய காலத்தில் பெற்று, இன்புற்று வாழ்வார்கள்.