திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

தர்மசாஸ்தா துதிப்பாடல்!

தர்மசாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
News
தர்மசாஸ்தா

உலகம் கஷ்டமான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், ஶ்ரீதர்மசாஸ்தாவை துதித்து வழிபடுவது மிகவும் அவசியம்.

கிரக சாரங்கள் பாதகமான நிலையில் அமையும்போது சொல்ல வொண்ணா துன்பச் சூழலைச் சந்திக்கிறது பூவுலகம்.

அப்படியான நிலையில் தெய்வ சக்தியே நமக்குக்காப்பு. கலியுகத்தில் அப்படி நமக்குக் காப்பாகத் திகழும் கண்கண்ட தெய்வம் ஶ்ரீதர்ம சாஸ்தா. சாட்சாத் பரமேஸ்வரரே சாஸ்தாவின் அருள்மகிமை குறித்து விளக்கியுள்ளார். `சத்ரு சேனைகளையெல்லாம் ஸ்தம்பிக்கச் செய்வது சாஸ்தாவின் காப்பு. துஷ்டச் சூழல்களை அடக்கியாளும் வல்லமை கொண்டது. சாஸ்தாவின் அனுக்கிரகத்தால் சிறந்த ஞானம் ஸித்திக்கும். மட்டுமன்றி, அவருடைய அருள்காப்பு சகல வியாதிகளையும் போக்கும். முக்கியமாக கலியால் ஏற்படும் தாபத்தைப் போக்கும்; பாவங்களைச் சிதறடிக்கும்’ என்பது சிவவாக்கு.

ஆக, உலகம் கஷ்டமான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், ஶ்ரீதர்மசாஸ்தாவை துதித்து வழிபடுவது மிகவும் அவசியம். அவ்வகையில், `ஶ்ரீதர்ம சாஸ்தா ஸ்துதி சதகம்’ எனும் மிக அபூர்வமான துதிப்பாடல்களில் ஒன்று இங்கே உங்களுக்காக. இதைப் படிப்பதால் தொற்றுநோய் முதலான சகல ஆபத்துகளும் நீங்கும்.

தர்மசாஸ்தா
தர்மசாஸ்தா

பூதேச பூரிகருணாம்ருத பூரபூர்ண

வாராம்நிதே வரத பக்தஜனைக பந்தோ

பாயாத் பவான் ப்ரணதமேன மபாரகோர:

ஸம்சார பீதமிஹமாமகிலா மயேப்ய:

கருத்து: ஓ... பூத நாயகனே! மிகுந்த கருணையாகிய அமிர்தப் பிரவாகத்துக்குச் சமுத்திரம் போன்றவரே. பக்தர்களுக்கு இஷ்டங்களை அளிப்பவரே. அவர்களுக்கு முக்கிய பந்துவாக இருப்பவரே. கரையற்றதும் மிக பயங்கரமானதுமான ஜனன-மரண துக்கத்தி லிருந்து... மிக பயந்தவனும் தங்களை வணங்குபவனுமான என்னை தாங்கள் எல்லாவித வியாதிகளிலிருந்தும் காத்து ரட்சிக்கவேண்டும்.

நோய் தீர்க்கும் திருப்புகழ்!

ருணகிரியாரின் திருப்புகழ் பாடல்கள் சகல பிணிகளுக்கும் தோஷங்களுக்கும் அருமருந்தாகத் திகழ்வன. அவற்றில் அதியற்புதமான... `இருமல் உரோகம் முயலகன் வாதம் எரிகுண நாசி’ எனத் தொடங்கும் பாடலைக் கேட்டு மகிழ இங்குள்ள Link - ஐ பயன்படுத்தவும்.

https://bit.ly/342j4UR