தொடர்கள்
Published:Updated:

வாட்டும் வழக்குகள் தீர்வு தரும் வழிபாடுகள்!

வழக்குகளும் வழிபாடுகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வழக்குகளும் வழிபாடுகளும்!

ஜோதிடஶ்ரீ எஸ்.கண்ணன்

வாழ்வை கலங்கடிக்கும் பிரச்னைகளில் ஒன்று தீராத வழக்குகள். சொத்து, பங்காளிச் சண்டைகள், வியாபாரப் பிரச்னை, காப்புரிமை சர்ச்சைகள், குடும்பப் பிரச்னைகள், வீண் பழி என பலவிதத்திலும் வழக்குகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அன்பர்கள் பலர் உண்டு. இதற்குக் காரணம் நம் முன்வினைகளே என்பதை உணரவேண்டும்.

வாட்டும் வழக்குகள் தீர்வு தரும் வழிபாடுகள்!
imaginima

ம் வினைகளுக்கு ஏற்பவே, நம் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்து பலன் அளிக்கும். ஆகவே, ஜாதத்தில் கிரக நிலைகளை ஆய்ந்தறிந்து, உரிய வகையில் செயல்பட்டும், முறையான வழிபாடுகளைச் செய்தும் வழக்குகளில் இருந்து விடுபடவும் வெற்றிபெறவும் செய்யலாம்.

ராகுவும், சூரியனும் 7-ம் இடத்தில் கூடி யிருந்தால், பெண்கள் வழியாகத் தீராத வழக்குகள் ஏற்படலாம். சந்திரனோடு ராகுவோ கேதுவோ கூடியிருந்து, பாவ கிரகங்களின் பார்வையும் நிலைத்தால், செல்வம் வழக்குகளால் விரயமாகும் நிலை ஏற்படும். லக்னத்தில் பாவர் ஒருவர் அமர்ந்து, லக்னாதிபதி பலம் குறை வாக இருந்தால், வழக்குகளால் உடல் நலிவும் கவலையும் உருவாகும்.

3-ம் வீட்டுக்கு உடைய கிரகம் பலமில்லாமல் போய்விட்டால், அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலத்தில், உடன்பிறந்தோருடன் சொத்து விஷயமாக பிரச்னைகளும் பிரிவுகளும் ஏற்படலாம்.

அதேபோல், 4-ம் வீட்டுக்கு டையவன் பலவீனமாகி அவரது தசை நடக்கும் காலங் களில், சகோதரர் களுடன் சொத்துப் பிரச்னை, கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

6-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமடைந்து அவரது தசை நடக்கும்போது... அரசியல்வாதிகள், பகைவர்கள் மூலம் வீடு-வாகனம் ஆகியவற்றை வழக்குகளால் பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.

ஜாதகத்தில் 2-ஆம் வீட்டுக்கு உடையவன் குரு, புதன், சுக்ரனோடு ஒன்றுசேர்ந்து 6,8,12-ம் இடங்களில் இருந்தால், பொருள் மற்றும் பணம் குறித்த வழக்குகள் வரும்.

10-ம் வீட்டுக்கு உரியவன் பலவீனமாகி தீய இடத்தில் இருப்பார் எனில், அவரது தசை நடக்கின்ற காலகட்டங்களில் அண்டை வீட்டாருடன் பிரச்னைகள் ஏற்படும்.

9-ம் வீட்டோன் பன்னிரண்டில் அமர்ந்து, 12-ம் வீட்டோன் பலம் குறைவாகி, 2-ம் வீட்டிலும் 3-ம் வீட்டிலும் பாவர் இருந்தால், அந்த ஜாதகர் வழக்குகளுக்கு ஆட்பட்டு, கடன்பட்டு அதை நடத்திச் செல்லும் சூழல் உருவாகும்.

2-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமாகி, அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலங்களில் தேவையற்ற வழக்குகளால் பிரச்னைகள் ஏற்படலாம்.

இதுபோன்ற வழக்குப் பிரச்னைகளில் இருந்து விடுபட தெய்வ வழிபாடும் பிரார்த்தனையும் துணை நிற்கும்.

வாட்டும் வழக்குகள் தீர்வு தரும் வழிபாடுகள்!

ஞாயிற்றுக் கிழமைகளில், அம்பாளுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், வழக்குப் பிரச்னைகள் மெள்ள மெள்ள விலகும்.

திங்கள், வியாழக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜன்ம நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றிவைத்து அம்பாளை அல்லது மகாலட்சுமித் தாயாரை தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, `விஜயம் அளிப்பாய் தேவி’ என்று வேண்டிக் கொள்ளலாம். இதனால் சொத்து விரயம், வீண் வழக்குகள் போன்ற பிரச்னைகள் விலகும்.

காரைக்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள ஊர், கானாடுகாத்தான். இங்கு கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு பரமனூர் காளியம்மன் சாந்நித்தியம் மிகுந்தவள். `வழக்குகளில் நியாயமான தங்கள் தரப்புக்கு வெற்றி கிடைக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து, இந்த அம்மனுக்குப் புடவை சமர்ப்பித்து வழிபட்டால், நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோயில். இக்கோயிலில் தொடர்ந்து 16 வாரங்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், தீராத வழக்கு களும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.

திருச்சி- உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ளது குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம். இங்கே, நின்ற திருக்கோலத்தில் அருளும் தில்லைக்காளி சாந்நித்தியம் மிகுந்தவள்.

அமாவாசைதோறும் இந்த அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை அமாவாசை நாளில் இங்கு வந்து, காளிக்குப் புடவை சார்த்தி, நம் குறைகளை அவளிடம் முறையிட் டால், விரைவில் சிக்கல்கள் யாவும் தீரும்.

அன்றைய தினம் யாக பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால், சத்ரு பயம் நீங்கும்; வழக்குகளில் வெற்றி கிடைக்கும்; சகோதரச் சண்டைகள், கடன் பிரசனை கள் நீங்கும் என்பது நம்பிக்கை.