Published:Updated:

வியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா?

ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.

பிரீமியம் ஸ்டோரி

ன்றைக்கு, ‘ஆஹோ ஓஹோ என்றில்லா விட்டாலும், கையைக் கடிக்காத லாபம் வந்தாலும் போதும்’ என்று நினைப்பவர்களே அதிகம்.

ஆனால், அவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு லாபம் இரட்டிப்பானால்... ஒரே வருடத்தில் ஒன்றுக்கு மூன்றாக புதிய கிளைகள் துவக்கும் அளவுக்கு வியாபாரம் பெருகினால்... அவர்களின் நிலை எப்படியிருக்கும்?!

‘அட இதெல்லாம் சாத்தியமா. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல், சட்டுன்னு ஒருமாதம் உயரும்; அடுத்த மாதமே சட்டுன்னு படுத்துடும்’ என்று நீங்கள் பதில் தந்தால் அது தவறு. விதி கால் பங்கு, மதி முக்கால் பங்கு என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

பூர்வ ஜன்ம வினைக்கேற்ப இப்பிறவியில் நமக்கு அமைந்திருக்கும் ஜாதக நிலையை ஆராய்ந்து, ‘நமக்குத் தொழில் துவங்கும் யோகம் உண்டா, உண்டு எனில் என்ன தொழில் ஆரம்பிக்கலாம், தனியாகவா, கூட்டுத்தொழிலாகச் செய்யலாமா...’ என்பதையெல்லாம் ஆராய்ந்து தெளிவாகி இறங்கினால், எல்லாமும் ஜயம்தான். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

ங்கள் ஜாதகத்தில் வியாபார காரகனான புதன் இருக்கும் இடத்துக்கு, வியாழனின் பார்வை பரிபூரணமாக இருந்தால், தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.

ராசியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி, நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில், அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனாலும், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.

இந்தப் புதன், ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பது விதி.

னம் மற்றும் லாபாதிபதிகள் 1, 4, 7, 10 அல்லது 5, 9 ஆகிய இடங்களில் உச்சமாகவோ, ஆட்சியாகவோ வலுத்திருக்க, புதன் பலமும் கூடியிருக்குமானால், குறிப்பிட்ட அமைப்புள்ள ஜாதகருக்கு வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகளாகும். இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருக்க, புதனுக்குச் சுபக்கிரகச் சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகருக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியவரும். அதன்மூலம் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பார். லாபமும் பன்மடங்கு உயரும்.

தொழில் ஸ்தானம் என்பது 10-ஆம் இடம் ஆகும். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ, சூரிய ராசிக்கோ 10-ல் புதன் இருந்தால், மனத்தில் வியாபார சிந்தனை உருவாகும். 10-ல் புதன் வலுப் பெற்றிருந்தால், வியாபாரம் பிடித்த தொழிலாக அமையும். அதன் மூலம் அதிக லாபமும் பெறமுடியும்.

வியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா?

இப்படியான கணிப்பில் லக்னத்துக்கே முதலிடம் தரப்பட வேண்டும். அடுத்து சந்திர ராசி. அதன் பிறகு சூரிய ராசி. லக்னம் வலுத்திருந்தால் லக்னப்படி பார்ப்பதே சிறப்பாகும்.

சில ஜாதகத்தில் லக்னத்தைவிட சந்திர லக்னம் அதிக பலம் பெற்றிருக்கும். அப்போது சந்திர லக்னத்தை வைத்துப் பார்க்கவேண்டும்.

துலா லக்னத்தில் பிறந்து, பாக்கியாதிபதி புதன் லக்னத்திலோ, 9 அல்லது 10-ம் இடத்திலோ பலம் பெற்றிருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத் தில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார். தான் பெற்ற லாபத்தை அறப்பணிகளுக்காகவும் செலவிடுவார். காரணம், இங்கு பாக்கியாதிபதியே விரயாதிபதியாகவும் ஆகிறார்.

னுசு லக்னத்தில் பிறந்து, தொழில் ஸ்தானாதி பதியான புதன் 10-ல் வலுத்திருந்து, லக்னாதிபதி குருவின் பார்வையைப் பெற்றால், வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.

ன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதி பதியான புதன் பகவானே தொழில் ஸ்தானாதிபதியும் ஆவார். அவர் அஸ்தங்கதம், நீச நிலை, பாபக் கிரகச் சேர்க்கை பெறாமல், கன்னி அல்லது மிதுனத்தில் இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் திறம்பட ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார்.

வியாபாரகாரகனான புதனுக்குச் சுப ஆதிபத் தியம் ஏற்பட்டு, சுபக் கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்று, தொழில் ஸ்தானத்தோடும் (10-ம் வீடு), தொழில் ஸ்தானாதிபதியோடும் (10-ம் வீட்டோன்) தொடர்புகொண்டு, பலம் பெற்றிருந்தால், வியாபாரத்தில் ஈடுபட்டு, பன்மடங்கு லாபம் பெற இயற்கையாகவே வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் இல்லாதவர்கள் வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். புதன் பலம் உள்ளவர்கள் தொழில் தொடங்க முயற்சி செய்யும் பட்சத்தில், புதனுக்கு அதிதேவதையான திருமாலை புதன்கிழமைதோறும் வழிபடுவதன் மூலம் வியாபாரத்தில் அதிவேகமாக முன்னேறலாம். அதிக லாபமும் பெறலாம்.

- ராம் திலக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு