Published:Updated:

வாழ்வைத் தீர்மானிக்கும் புத்தி ரேகை!

புத்தி ரேகை
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தி ரேகை

ஜோதிடர் டி.எஸ்.என்

ஒருவரது அறிவு, புத்திக்கூர்மை, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் அமைப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உள்ளங்கையில் புத்தி ரேகையானது ஆழமாக, தெளிவாக, நீண்டு அமைந்திருந்தால், அந்த அன்பர் சிறப்பான அறிவாற்றலைப் பெற்றிருப்பார் என்கின்றன பஞ்சாங்குலி எனும் கைரேகை சாஸ்திர நூல்கள்.

புத்தி ரேகை
புத்தி ரேகை

சரி, நம் உள்ளங்கையில் புத்தி ரேகை எங்கு அமைந்திருக்கிறது?

உள்ளங்கையின் நடுவில் ஆயுள் ரேகைக்கு மேலும், இருதய ரேகைக்குக் கீழேயும் புத்தி ரேகை அமைந்திருக்கும் (படம் 1). பெரும்பாலும் குரு மேட்டில் இருந்தோ, செவ்வாய் மேட்டில் இருந்தோ இந்த ரேகை ஆரம்பமாகும். இந்த வகையில் ஆரம்பமாகும் புத்திரேகை நீண்டு அமைந்திருக்க, அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரர், சிறந்த உயர் கல்வியைப் பெறுவார்கள். அதன் மூலம் அவர்களுக்குச் செல்வ வளம் பொங்கிப் பெருகும். சிலருக்கு உள்ளங்கையின் மையப்பகுதியில் இருந்தும் இந்த ரேகை ஆரம்பமாகலாம் (படம் 2).

பொதுவாக புத்தி ரேகை கீழ்க்காணும் வகைகளில் அமையும்.

ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ, அல்லது வெட்டிக்கொண்டோ உள்ளங்கையின் மறுபக்கம் வரை நீண்டு செல்லும் (படம் 3). இந்த வகையிலான புத்தி ரேகையை உடையவர்கள் அறிவாற்றல் கொண்டவர்களாகவும் உணர்ச்சிவசப்படாமல் அறிவின் திறத்தினால் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

ஆயுள் ரேகை
ஆயுள் ரேகை


ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப்பகுதியோடு குட்டையான ரேகையாக முடியும் (படம் 4). இத்தகைய ரேகையை உடையவர்கள், நல்ல சிந்தனையாளர்கள்; அறிவும், அனுபவ அறிவும் உடையவர்கள். கல்வி வாய்ப்புகள் தடைப்பட்டாலும், இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம் (படம் 5). இப்படியான புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்ட வர்களாக இருப்பார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.

ஆயுள்ரேகையின் ஆரம்பப் பகுதியைத் தொடாமல், சற்றுத் தள்ளி ஆரம்பித்து நீளமாகவோ, குட்டையாகவோ, கிளை களாகவோ பிரிந்தும் புத்தி ரேகை செல்லலாம் (படம் 6).

இவ்வகையிலான புத்தி ரேகை அமைந்தவர்கள் அறிவாற்றலும், விவேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் போது செயல் திறன் சற்றுக் குறையும்; அனுபவ பூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் அதிகரிக்கும். இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உண்டு.

சூரிய மேடு
சூரிய மேடு
Maximkostenko


புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பிக்காமல், இருதய ரேகை ஆரம்பமாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக்கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால் (படம் 7), உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்குக் கல்வியில் விருப்பம் குறைவு. எதையும் திட்டமிட்டு செயல்பட விரும்ப மாட்டார்கள். இவர்கள் சாமர்த்தியமாக அறிவாற்றலை பயன்படுத்தும்போது விவேகியாகவும், உணர்ச்சி வயப்படும்போது உணர்ச்சிபூர்வமாகவும் செயலாற்றுவார்கள்.

பெரும்பாலும் தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள் ஆகியோருக்கு இத்தகைய அமைப்பு இருக்கும்.

மேலே குறிப்பிட்ட ஐந்து வகைகளைத் தவிர, வேறு வித்தியாசமான அமைப்புகளும் உண்டு. அவை பற்றியும் அறிந்துகொள்வோம்.

சூரிய மேடு

புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகை யிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் 8) தெளிவான புத்திமானாகவும் புகழ் பெற்றவராகவும், நீதிமானாகவும் திகழ்வார்.

புதன் மேடு

புத்தி ரேகையின் கடைசிப் பகுதி, புதன் மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் 9) தொழில் - வியாபாரத்திலும், அறிவாற்றலால் பொருளீட்டுவதிலும் திறமை அதிகமாக இருக்கும்.

சந்திர மேடு

புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந் திருந்தாலும், அல்லது புத்தி ரேகையிலிருந்து கிளை ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் 10) கலைகளில் ஈடுபாடு, சிறப்பான தொழில் கல்வி, வெளிநாட்டு பயணம், பெண்களால் மதிக்கப்படுதல், அகங்கார குணம் ஆகியன அமையும்.

செவ்வாய் மேடு

புத்தி ரேகை செவ்வாய் மேட்டில் முடிவடைந்தாலும், அல்லது கீழ் செவ்வாய்மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது ஒரு சிறிய ரேகை கீழ் செவ்வாய்மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் 11) தெளிவில்லாத அறிவு, திறமைக் குறைவு, அறிவைத் தவறாகப் பயன்படுத்துதல், முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம் ஆகிய பலன்கள் உண்டு.

இரண்டு புத்தி ரேகைகள் (படம் 12) ஒன்றுக்கொன்று இணை யாகச் செல்லுமானால், உலகம் போற்றும் அறிவாற்றலும் அதிர்ஷ்டமும், எதிர்பார்க்காத வெற்றிகளும் உண்டாகும்.

இன்னும் சில தகவல்கள்...

துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பம், தொடர் தோல்விகள் உண்டு.

குரு மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், தெளிவில்லாத புத்தி, குறுகிய காலத்துக்கு புத்தி பேதலித்தல், ஒரு முடிவு எடுக்கமுடியாத குழப்ப நிலை ஆகிய பலன்கள் உண்டு.

சனி மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால் விபத்துகளால் மூளை பாதிப்பு ஏற்படும்.

சூரிய மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், புத்திசாலித்தனமும், வெற்றி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். புதன் மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், மூளை பாதிப்பு, அகால மரணம் சம்பவிக்கலாம். நோயால் துன்பம் உண்டு. புத்தி ரேகை இருதய ரேகையை குறுக்கிட்டு சென்றால், கோழையாக வாழ்வார்கள்.

(3.3.15 இணைப்பிதழில் இருந்து...)