Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி 2020: எந்த ராசிக்கு என்ன பலன்? மேஷம் முதல் கடகம் வரை!

ராகு - கேது பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

ராகு - கேது பெயர்ச்சி 2020: மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று விவரிக்கிறார் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.

மேஷம்

முதல் ராசியான மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பதைப் பார்ப்போம். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள், உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள், ஒருவருக்கொருவர் தர்மசங்கடப்பட்டுக்கொள்ளும் நிலை, சொத்துகளில் இருந்த சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் விலகப்போகிற காலகட்டம் இது. வாழ்க்கையிலும் சரி வியாபாரத்திலும் சரி பங்குதாரர்களிடைய இருந்த சிக்கல்கள் தீர்ந்து 'போனதுபோகட்டும்' என்று விட்டுவிட்டு 'நடப்பவை நல்லதாக இருக்கும்' என்று தீர்மானித்துச் செயல்படும் காலகட்டம்.

மேஷம்
மேஷம்

இதுவரை துன்பப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு தற்போது நிலைமை மாறி தலைமைப் பதவியும் பண்பும் அதிகாரமும் இந்தப் பெயர்ச்சியினால் ஏற்படும். தங்கம் சேரக்கூடிய காலகட்டம் இது. மேஷ ராசிக்காரர்கள் செய்யக்கூடாதது தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது, யாரையும் தூக்கி எறிந்து பேசுவது ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் மேலும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ரிஷபம்

ரிஷபராசிக்குள்ளாக ராகு பகவான் வருகிறார். இதுவரை மருத்துவ செலவுகள், தேவையற்ற வீண் விரயங்கள், வாகனங்களால் விரையங்கள் ஆகியனவற்றால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். அவையெல்லாம் மாறும் காலகட்டம் இது. ராகு உங்கள் ராசிக்குள் வந்து நீசமாகிறார். அதாவது தன் பலத்தை இழக்கிறார். இது மிகவும் யோகமான அமைப்பு. வீண் விரையங்கள் எல்லாம் குறையும். இதனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதுமையான விஷயங்களை நாடிச் செல்வீர்கள். அசையும் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு காணப்படுகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

செப்டம்பர் 5-ம் தேதிக்கு மேலாகவே இந்த ராஜ யோக அமைப்பு காணப்படுகிறது. அனைவரோடும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தங்கம் வாங்குவீர்கள். ஆனாலும் அதை அடகுவைக்கும் சூழ்நிலை வந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம் சுபச்செலவுகள் ஏற்படும் காலகட்டமிது. உறவினர்களிடையே திருமணம் மற்றும் சுபச்செலவுகள் செய்யக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். அதன்மூலம் தெய்வ அருள் உங்களுக்குக் கிடைக்கும். ஏற்றமும் முன்னேற்றமும் மட்டுமே காணப்படுகிறது. ரோகிணி நட்சத்திரக் காரர்கள் திருச்சி ஶ்ரீரங்கத்தில் இருக்கும் பாதாள கிருஷ்ணரை தரிசனம் செய்தால் கூடுதல் நற்பலன்களைப் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 12 ல் ராகு பகவான் அமர்கிறார். இதனால் சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்துபோகும். தேவையற்ற மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். ஆனாலும் முயற்சிகளில் தோல்வி என்பது மிதுன ராசிக்கு இந்தக் காலகட்டத்தில் ஏற்படாது. சின்னச் சின்ன முயற்சிகளின் மூலம் இந்த வெற்றியை நீங்கள் பெறலாம்.

எனவே துணிச்சலோடு செயல்பட்டு வெற்றிபெற வேண்டிய காலகட்டமிது. மிதுனராசிக்காரர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். குறிப்பாக கடல் நுரை அல்லது சிப்பிகள் கொண்டு செய்த விநாயகப்பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் விசேஷமான பலன்களைப் பெறலாம். பார்வதி தேவி மடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டுவந்தால் ஏற்றமான வாழ்க்கையே இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அமையும். பெரிய குறைகள் ஏதுவும் ஏற்படாது. திருமண முயற்சிகள் 2021 தை மாதத்துக்கு மேல் கைகூடும்.

கடகம்

மகாலட்சுமியின் அனுக்கிரகம் நிறைந்திருக்கும் கடகராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சியினால் இதுவரை நீங்கள் கேட்டும் கிடைக்காத கடன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள், தொழில் முயற்சிகள் ஆகியவற்றுக்காகக் கடன் வாங்க நேரிடும். இந்தக் காலகட்டத்தில் திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் ஏற்படாமல் இருந்த தம்பதிகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

கடகம்
கடகம்
ராகு - கேது பெயர்ச்சி 2020 பொதுப்பலன்கள்: பயனடையும் நட்சத்திரங்கள் இவைதான்!

இந்த பெயர்ச்சியில் ராகுபகவான் லாபஸ்தானத்தில் நீசமடைந்திருப்பதால் ஏராளமான பொருள்வரவு ஏற்படும். இப்போது மிகவும் சாதாரணமான நிலையில் இருந்தீர்கள் என்றால் 2021 தை மாதத்துக்கு மேல் நல்ல நிலையை அடைவீர்கள். உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வதன் மூலம் நற்பலன்களை அதிகப்படுத்தலாம். வீட்டில் விநாயகப்பெருமானை தண்ணீருக்கு நடுவே இருக்குமாறு வைத்து வழிபடுவது விசேஷ பலன்களைக் கொடுக்கும். மிகவும் நல்ல பலன்களைத் தரும் பெயர்ச்சியாக இந்த ராகு கேது பெயர்ச்சி அமைகிறது.

அடுத்த கட்டுரைக்கு