Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி 2020: எந்த ராசிக்கு என்ன பலன்? சிம்மம் முதல் விருச்சிகம் வரை!

ராகு - கேது பெயர்ச்சி நேற்று நடைபெற்றது. ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேதுபகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிவிட்டனர். இதனால் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான நான்கு ராசிகளுக்கு என்ன பலன்கள் வாய்க்கும் என்று ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

ராகு - கேது பெயர்ச்சி 2020: எந்த ராசிக்கு என்ன பலன்? மேஷம் முதல் கடகம் வரை!

சிம்மம்

தைரியமாகவும் வீரமாகவும் எதையும் சமாளிக்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்குப் பூரண கும்ப முதல்மரியாதை இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கட்டாயம் உண்டு. கௌரவம் உயரும். சூரியனின் அனுக்கிரகம் பெற்றவர்கள் நீங்கள். இந்த முறை ராகு நீசமடைவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படப்போகின்றன. இதேபோன்ற நிலைமை மீண்டும் அடுத்த ஒன்பது ஆண்டுகள் கழித்து ராகு விருச்சிகத்தில் அதிகாரம் அடையும்போதுதான் அமையும். அசையும் அசையா சொத்துகளை வாங்கவோ நல்ல விலைக்கு விற்கவோ இந்தக் காலகட்டம் மிகவும் ஏற்றது. வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். ரகசியங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதுவே பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை மட்டும் தவிர்ப்பது நல்லது. மற்றபடி ஏற்றமான பலன்களே இந்த ராசிக்காரர்களுக்கு வாய்க்கும்.

ராகு - கேது  பெயர்ச்சி பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னி

இதுவரை, தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த கன்னிராசிக்காரர்கள், நிலைமைமாறி சாதகமான நிலையை இந்த ராகு கேது பெயர்ச்சி மூலம் அடைவார்கள். அனைத்துவிதத்திலும் முன்னேற்றமான பலன்களைக் காணமுடியும். தந்தை வழியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தந்தை வழி சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கி உங்களுக்கு உரிய பங்கு கைக்குவரும். கன்னி ராசியைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமண யோகம் கைகூடும் காலம் இது. அதிக உஷ்ணம் அடையக்கூடிய ராசி என்பதால் இந்தக் காலகட்டத்தில் உஷ்ணம் தொடர்பான உபாதைகள் அடிக்கடி வந்து நீங்கும்.

சின்னச் சின்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும் சீக்கிரம் சரியாகிவிடும். சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை இந்தக் காலகட்டத்தில் தவறியும் செய்துவிடாதீர்கள். அதனால் கட்டாயம் பாதிப்பு உண்டாகும். நேர்மையாக இருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் எந்தக் கவலையும் படத் தேவையில்லை. அவர்களுக்கு அனைத்தும் நல்லவிதமாகவே நடைபெறும். விநாயகர் வழிபாடு மிகவும் நல்ல பலன்களைத் தரும். விநாயகருக்கு இனிப்புப் பொருள்களை நிவேதனம் செய்து ராகு கால வேளைகளில் வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

எதையும் ஆராய்ந்துபார்த்து, அதன் ஆழங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு செயல்படும் துலாராசி அன்பர்களே, உங்களுக்கு அஷ்டமத்தில் ராகுபகவான் அமர்ந்து அருள்புரிய இருக்கிறார். அஷ்டம ராகு குறித்து நீங்கள் கவலைகொண்டிருந்தால் அது தேவையற்றது. அஷ்டம ராகு கஷ்டங்களைக் கொடுப்பார் என்பது பொதுவான விதி என்றாலும் அது துலாம் ராசிக்குப் பொருந்தது. இந்த ராசியில் இருக்கும் சுவாதி நட்சத்திரம் ராகு பகவானின் நட்சத்திரம். இதையும் தாண்டி, ராகு அஷ்டமத்தில் பலம்பெற்று அமராமல் நீசமடைகிறார். அதாவது பலம் இழக்கிறார். இதை விபரீத ராஜ யோகம் என்று சொல்லலாமே தவிர அஷ்டம ராகு என்று சொல்வது தவறு. இந்தக் காலகட்டத்தில் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்காளிகள் உங்களைப் புரிந்துகொண்டு இணக்கமாவார்கள். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாகும். குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும் நேரம் இது. குலதெய்வத்தைக் குடும்பத்தோடு சென்று வழிபட்டுவர அனைத்து நன்மைகளும் உண்டாகும். கோயில்களில் புறப்பாடு நடைபெறுகிறபோது சுவாமியைத் தூக்கிச் சுமப்பது நற்பலன்களை வழங்கும். இதுவரை இருந்த கனவுத் தொல்லைகள் நீங்கி நல்ல அமைதியான உறக்கமும் இனிமையான கனவுகளும் வாய்க்கும். மகான்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். ஏற்றமும் நற்பலன்களும் அதிகரிக்கும். அதேவேளையில் உறவுகளுக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களையும் சந்தேகங்களையும் தவிர்த்துவிடுவது நல்லது. குற்றம்பார்க்கில் சுற்றமில்லை என்கிற தத்துவத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் மிகவும் மகிழ்ச்சிகரமான காலகட்டமாக இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டம் அமையும்.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் மனோகாரகன். அவன் விருச்சிக ராசியில் நீசமடைவதால் எப்போதும் மன சஞ்சலத்திலேயே தவிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த ராகு - கேது பெயர்ச்சியில் கேது உங்கள் ராசியில் உச்சமடையப் போகிறார். இது மிகவும் அற்புதமான நிலை. இந்தக் காலகட்டத்தில் மனம் சஞ்சலமின்றிப் பொறுமையும் நிதானமும் பெறும். தனித்திருத்தல், தியானம் ஆகியவற்றில் மனம் ஈடுபடும். அதனால் செயல்களைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கேது உச்சமாக இருக்கும்போது உணவு சரியாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மருந்துவச்செலவுகள் அதிகரிக்கும். மருத்துவக் காப்பீடுகளை முறையாகப் புதுப்பித்துவிடுங்கள். மாற்று வைத்திய முறைகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். திருமணம் மற்றும் சுபகாரியங்களில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். கொள்ளினால் ஆன பிரசாதம் செய்து விநாயகப்பெருமானுக்கு சமர்ப்பியுங்கள். இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு