Published:Updated:

மிதுனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

மிதுனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

சுறுசுறுப்பும் சிந்தனையாற்றலும் மிக்கவர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன் களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் லாப வீடான 11-ம் வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிக்கும் அளவிற்குப் பணவரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் பெருகும். உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கூடும்.எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் அந்நியோன்யம் ஆவீர்கள். வீண் செலவு களைக் குறைத்துக்கொள்வீர்கள். குழந்தை வரம் வேண்டி வழிபட்டுக் கொண்டிருந்த தம்பதிக்கு, அழகான வாரிசு உண்டாக வாய்ப்பு உண்டு.

அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளின் கெட்ட சகவாசம் நீங்கும்; உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அவர்களின் தனித் திறமையைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை வரத்துக்காக குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டிருந்த பிரார்த்தனையைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலை, கூட இருந்தவர்களே குழிபறித்த சூழல் மாறும். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவசாலிகள் வேலைக்கு வருவார்கள். அதேபோல், விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுடனான மோதல் போக்கு விலகும். சம்பள உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை குறையும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்
மிதுனம்கேதுவின் பலன்கள்

கேது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். ஆனால் அவர்களால் வீண் அலைச்சலும், செலவும் உண்டு. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்வது நல்லது. தொலைதூர பயணங்கள் வேண்டாமே.

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்; உங்களின் சேமிப்பு அதற்கு உதவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீண் வதந்தி களிலிருந்து விடுபடுவீர்கள். ஆனாலும் உள்மனதில் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும், சந்தேகமும் வந்து நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும்.

மாணவ மாணவியர்களுக்கு மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர் களிடமிருந்து விலகுவார்கள். கேது 5-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஆனால் தாய்வழி உறவினர்களுடன் மோதல் வரும். கர்ப்பிணிகள்! எந்த விஷயத்திலும் உணர்ச்சிவயப்படுதல் கூடாது.

வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். தொழில் ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். பங்கு தாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, சிற்சில தருணங்களில் உங்களை உணர்ச்சிவயப் படவைத்தாலும், அதிரடி முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவதாகவும் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

மிதுனம் - நட்சத்திர சஞ்சார்ம்
மிதுனம் - நட்சத்திர சஞ்சார்ம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism