Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23.9.2020 புதன்கிழமை ராகுவும் கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிகழும் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் 1.9.2020 செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி - அவிட்டம் நட்சத்திரம், அதிகண்டம் நாமயோகம், பத்திரை நாமகரணம்; நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்த யோகத்தில், சூரியபகவான் ஹோரையில், பஞ்சபட்சியில் - மயில் அரசாட்சி செலுத்தும் நேரத்தில் மதியம் 2.10 மணிக்கு, மிருகசீரிடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ஸ்திர வீடான ரிஷப ராசியில் ராகு பகவானும், கேட்டை நட்சத்திரம் 4 - ம் பாதத்தில் ஸ்திர வீடான விருச்சிக ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 23.9.2020 புதன்கிழமை ராகுவும் கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ராகு

கரு நாகமாகிய ராகுபகவான் புதனின் வீடாகிய மிதுன ராசியில் கடந்த ஒன்றரை வருடகாலம் அமர்ந்து இனம் தெரியாத மனக்கவலைகளையும், உலகெங்கும் நுண்கிருமிகளால் தொற்று நோய்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் தந்தார். அப்படிப்பட்ட ராகு இப்போது மிதுனத்தை விட்டு விலகி அசுர குருவாகிய சுக்கிரனின் வீட்டில் அமர்வதால், உலகெங் கும் மக்களிடையே போராட்ட குணம் அதிகரிக்கும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றங் களின் கை ஓங்கும். வைரஸ் தொற்று நோய் குறையும். ஆனால் கண்நோய் அதிகரிக்கும். காலப் புருஷத் தத்துவப்படி 2-ம் வீட்டில் ராகு அமர்வதால் பொருளாதாரம் மோசமாகும். தனிமனித வருமானம் குறையும். பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் தேர்வு முறைகளிலும், பாடத்திட்டங்களிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும். வங்கிகளில் பணப் பரிமாற்றம் குறையும். பூச்சிகளாலும், சூறாவளிக் காற்றாலும், வெள்ளப் பெருக்கினாலும் விவசாயம் பாதிப்படையும்; அறுவடை நேரத்தில் மகசூல் பாதிக்கும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும். கிராமங் களிலும் நவீன வசதிகள் பெருகும். கால்நடைகளுக்கு விநோதமான நோய்கள் பரவி அவற்றின் எண்ணிக்கை குறையும். புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்களின் உடல்நிலை பாதிக்கும். சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி அடையும். புதியவர்கள் பிரபலமாவார்கள். திரையரங்கு, ஜுவல்லரி தொழில்கள், பால் பொருட்கள், அழகு சாதனங்கள், ஜவுளி உற்பத்தி பாதிப்படையும்.

ஆனால் 15.11.2020 முதல் 05.4.2021 மற்றும் 15.9.2021 முதல் 12.11.2021 வரை உள்ள காலகட்டத்தில், ராகுவை குருபகவான் பார்வையிட இருப்பதால், கெடு பலன்கள் குறைந்து யோகமான பலன்கள் அதிகரிக்கும். மக்கள் ஆரோக்கியத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள். கறுப்பு நிற தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேது

காலப்புருஷத் தத்துவப்படி இதுவரை 9-ம் வீடான தனுசில் அமர்ந்து உலகில் பணப் புழக்கமே இல்லாமல் எல்லாவற்றையும் முடக்கிய செந்நாகம் ஆகிய கேதுபகவான், இப்போது செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் வந்து அமர்கிறார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் நோய் களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் ஆரோக்கியம் அடைவார்கள். வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்ட வேதிப் பொருள்களை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள். அணு ஆராய்ச்சியில் இந்தியா சாதிக்கும். ரியல் எஸ்டேட் கொஞ்சம் சூடு பிடிக்கும். சொத்து வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ரத்தம் சார்ந்த நோய்கள் குணமாகும். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். செங்கல் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கும். விபத்துகள் பெருகும். பாலியல் பலாத்காரம் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். காவல்துறை, ராணுவம், உளவுத் துறை, தீயணைப்பு துறை ஆகியவை நவீனமாகும். ஆற்று மணல், மலை, குளங்கள், அருவிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதிப்படையும்; தொழிற்சாலைகள் உருவாகும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்:

கணபதி வழிபாடு மற்றும் ராகு காலத்தில் துர்கை வழிபாடு நன்மை அளிக்கும். பூமிகாரகனின் வீடாகிய விருச்சிகத்தில் கேது அமர்வதால் குட்டை, குளம், ஏரி, ஓடை, ஆறு, மலை உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அவசியம். சுக்கிரனின் வீட்டில் ராகு அமர்வதால், பண்டைய காலத்து மருத்துவ முறைகளையும் கலைப் பொக்கிஷங் களையும் பாதுகாப்பதுடன், பாரம்பர்ய உணவு முறையை மேற்கொள்வோம்.

மேஷம் - அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்

புதுமையாக சிந்திக்கும் உங்களுக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, சுற்றுச் சூழலுக்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்ளும் மனப் பக்குவத்தையும் தருவதாக அமையும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். பணவரவு திருப்திகரமாக இருக்கும்; என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அடுத்தடுத்து வரும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எல்லா வேலைகளையும் முன்னெச்சரிக்கையுடன் செய்ய பாருங்கள்.

வெற்றி நிச்சயம் என்றாலும் வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள். இளைய சகோதரருட னான மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

உங்களிடம் கடன் வாங்கிய ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. கண், காது, பல் சம்பந்தப்பட்ட உடல் ரீதியான பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக மற்றொரு மருத்துவரிடம் இரண்டாம் கருத்தையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது. அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

பத்திரங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் அலட்சியம், சோம்பல், பயம் ஆகியவற் றிலிருந்து விடுபடுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடக்கும். விலையுயர்ந்த தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 1.9.2020 முதல் 4.1.2021 வரை ராகுபகவான் செல்வதால், பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 5.1.2021 முதல் 12.9.2021 வரை ராகுபகவான் செல்வதால் மனத்தில் ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

ராகுபகவான் உங்களின் பூர்வ புண்யாதி பதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் 13.9.2021 முதல் 21.3.2022 வரை செல்வதால், பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாள்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் மோதல்போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்பு உணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். உங்களின் ஆலோசனையையும் ஏற்பார். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்பு தேடி வரும். சம்பளம் உயரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்:

கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனத்தில் ஒரு பயம் வரும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். குறுக்குவழியில் சம்பாதிப்ப வர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

வாழ்க்கைத் துணைவருடன் விட்டுக் கொடுத்துப் போவதனால் பிரச்னைகள் விலகும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமை யையும் கடைப்பிடிப்பது நல்லது.

சமூக வலைத்தளங்களில் உங்களின் கருத்தைப் பதிவிட்டுப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர்கள் அவ்வப்போது தொந்தரவு தருவார்கள்.

கேது 8 - ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். அலைபேசியில் பேசியபடி வாகனங்களை இயக்க வேண்டாம். மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள்.

எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் திருதியாதி பதியும் சஷ்டமாதிபதியு மான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் 1.9.2020 முதல் 10.5.2021 வரை கேது பகவான் செல்கிறார்.

ஆகவே, எல்லாவற் றையும் சமாளிக்கும் மனோ பலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும்.

பாகப்பிரிவினை சம்பந்தப் பட்ட பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி, முன்கோபம் ஆகியன வந்து செல்லும். மிகுந்த கவனம் தேவை.

உங்கள் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் 11.5.2021 முதல் 16.1.2022 வரை கேது செல்கிறார்.

இந்தக் காலத்தில் வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பணப் பற்றாக்குறை ஆகியன உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கேது பகவான், பாக்கியாதிபதியும் விரையாதி பதியுமான குருபகவானின் விசாகம் நட்சத் திரத்தில் 17.1.2022 முதல் 21.3.2022 வரை செல்கிறார். அதன் பலனாக உங்களின் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

தாழ்வு மனப்பான்மை நீங்கி, மனத்தில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்தப் புதுப் புது முயற்சிகளை மேற்

கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும்.

பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானம் இவற்றுள் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பற்று- வரவு இல்லாவிட்டாலும் ஓரளவு லாபம் உண்டு. வேலையாள்களை அனுசரித்துச் செல்லவும். அவர்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள்.

உத்தியோகத்தில், உரிய நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியாதபடி அதிக வேலைச்சுமை உண்டு. எனினும் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்கும்.

பரிகாரம்:

புதுக்கோட்டைக்கு அருகே, திருமயத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர். ஒருமுறை இவ்வூருக்குச் சென்று அங்கே அருள் பாலிக்கும் ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம் பாளையும் வணங்கி வாருங்கள். ஏழைகளின் திருமணத்துக்கு உதவுங்கள்; வாழ்க்கை இனிக்கும்.

ரிஷபம் - கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

கொள்கையை விட்டுக்கொடுக்காத உங்களுக்கு, இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை வீண் சச்சரவுகளையும் செலவு களையும் ஏற்படுத்திய ராகு, இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

அவசரத்திற்குக் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். ஆனால் உங்கள் ஜன்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவோ, பழகவோ வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படிச் செய்வது நல்லது. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். இருப்பதைக் கொண்டு வியாபாரத்தை பெருக்கப் பாருங்கள். போட்டிகள் அதிகமாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாட் களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். மருந்து, கட்டுமானம், கன்சல்டன்ஸி, கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளைத் தூர்வாரிக் கொண்டிருக் காமல், தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடிப் பெறுவீர்கள். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் சப்தம மற்றும் விரயாதிபதியான செவ்வாயின் மிருக சீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, தலைச்சுற்றல், தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஆகியன ஏற்படலாம்.

வாழ்க்கைத்துணையுடன் ஈகோ பிரச்னை ஏற்படுவதைத் தவிருங்கள். அடகிலிருந்த நகையை மீட்க உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சகோதர வகையில் மோதல்கள் வந்தாலும் பாசம் குறையாது.

5.1.2021 முதல் 12.9.2021 வரை , ராகுபகவான் சேவாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்வதால் சவால்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு.

13.09.2021 முதல் 21.03.2022 வரை, உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் உட்கார்ந்து கொண்டு பலவிதமான இன்னல்களையும், அவஸ்தைகளையும், கொடுத்து வந்த கேது இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். வீண் பயம் விலகும். எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பை சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களின் ஆதரவு கூடும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் தனாதிபதியும் பூர்வ புண்யாதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேது பகவான் செல்வதால், வராது என்றிருந்த பணம் வரும். நகை வாங்குவீர்கள். பூர்விகச் சொத்தால் வருமானம் வரும்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை, உங்கள் பாக்கியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது பயணிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலை கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அரசாங்க விஷயம் உடனடியாக முடிவடையும். பழைய காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.

இயக்கம், சங்கம் ஆகியவற்றில் புதுப் பதவிகள் வரும். வேற்று மொழியினர், மாநிலத்தவரால் பயனடைவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேது பகவான் அஷ்டம மற்றும் லாபாதிபதியான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்கிறார்.ஆகவே, இக்காலக் கட்டத்தில் வீண் அலைச்சல், இரக்கப்பட்டு ஏமாறுதல், பண இழப்புகள், ஹார்மோன் பிரச்னை ஆகியவை வந்து செல்லும்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த உதவிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சொந்த பந்தங்களில் ஒருசிலரின் போக்கு, உங்களுக்கு மனவருத்தத்தைத் தரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

நாகப்பட்டினத்தில், ஸ்ரீஆதிசேஷனின் பூஜையால் மகிழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீகாயாரோகணேஸ்வரரையும், ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்களின் வாழ்க்கைக்கு உதவுங்கள்; நிம்மதி உண்டாகும்.

மிதுனம் - மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத்திறனும் கொண்ட உங்களை, இந்த ராகு கேது மாற்றம் புகழின் உச்சிக்குக் கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களைப் பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்தார் ராகு பகவான். யோசிக்கவிடாமல் ஒரு பதற்றத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

இப்போது ராசிக்கு 12-ம் வீட்டிற்கு வந்தமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்த விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் முகம் இனி மலரும்.

எல்லோருடனும் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலை உருவாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனி அடுத்தடுத்து நடந்தேறும்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். என்றாலும் விரய ஸ்தானத்தில் ராகு அமர்வதால், எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

சில நாள்களில் தூக்கம் குறையும். ஆன்மிக வாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். சில தந்திரங் களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிமுகப் படுத்துவீர்கள். உணவு, ஷேர், சிமென்ட், கல்விக்கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில், ஒதுக்கிவைக்கப் பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகளின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் சச்சரவு, வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வீண் சந்தேகம் வந்து செல்லும்.

புதுப் பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது. வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குங்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை தனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், தேங்கிக் கிடந்த வேலை களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகம் உழைப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும்.

கேதுவின் பலன்கள் :

இதுவரை உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து, கணவன் - மனைவிக்குள் பிரிவையும், கருத்துமோதல்களையும், மருத்துவச் செலவு களையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

ஆகவே, தடைகள் விலகும்; எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.

உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர் களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

பங்குதாரர்கள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். அழகு, அறிவு, ஆரோக்கியம் கூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். உங்களில் சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாகத் தீர்ப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் ஜீவனாதிபதியும் சப்தமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், வேலைச்சுமை வந்து செல்லும்.

தம்பதிக்கு இடையே வீண் மனஸ்தாபம் வர வாய்ப்பு உண்டு. ஆகவே, கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தைத் தவிர்க்கப்பாருங்கள். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

முக்கியமான விஷயங் களில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடுமுன் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம். வி.ஐ.பிகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்:

வேலூர், வாணியம் பாடிக்கு அருகிலுள்ள ஆம்பூரில் அருள்பாலிக்கும் அபயவல்லி சமேத நாக ரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்; வெற்றிகள் தொடரும்.

கடகம் - புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். மனத்துக்குப் பிடித்துவிட்டால் கணக்குவழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு இந்த ராகுப் பெயர்ச்சி, திடீர் யோகங்களைத் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது மனஇறுக்கத்தைத் தருவதாகவும் அமையும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 12-ல் அமர்ந்து கொண்டு அலைக்கழிப்புகளையும், செலவு களையும், தூக்கமின்மையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவ தால், உங்களின் செல்வம் - செல்வாக்கு கூடும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். பங்குச்சந்தை மூலம் லாபம் வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். அனுபவம் மற்றும் அறிவு பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூர்வீகச் சொத்தை மாற்றிப் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை அழகுபடுத்தி, நவீனமாக்கு வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தரகு, அழகு சாதனப் பொருள்கள், கணினி உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும். மதிப்பு கூடும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பதவி உயர்வுக் கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்குத் தகுதாற்போல் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், வேலை கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவு வீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மதிப்பார்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை ராசி நாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பேச்சில் கனிவு பிறக்கும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். அவர்வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த் திகை நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்ப்பு கள் அடங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகளின் பட்டியலில் உங்களை இடம்பிடிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். புதிய திட்டங்களை நிறைவேற்று வதில் தடை, தாமதங்கள் ஏற்படும்.

பூர்விகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். கணவன் -மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத் தில் கட்டுப்பாடு அவசியம்.

தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர் களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளை நினைத்துக் கலங்குவீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை, உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் மனோபலம் கூடும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். பயணங் களால் பயனடைவீர்கள். புதியவரின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், உள்மனத்தில் இனம்புரியாத பயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அந்தரங்க விஷயங் களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் பாக்கியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். பிதுர்வழிச் சொத் தைப் போராடி பெறுவீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். மறைமுக எதிரி களால் ஆதாயமடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

யிலாடுதுறை- தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரை வணங்கி வாருங்கள்.பழைய பள்ளிக்கூடம் அல்லது கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்யுங்கள்; வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோபாவமும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இந்த ராகு - கேது மாற்றம், ஓய்வெடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பையும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலையையும் தருவதாக அமைந்தாலும் அந்தஸ்தை உயர்த்துவதாகவும் இருக்கும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 11 - ம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும்.

தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அவசரத்திற்குக் கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். கமிஷன், துணி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேபோகும். மூத்த அதிகாரிகளைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். விமர்சனங்கள் அதிகமாகும்.

வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங் களும் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பது தாமதமாகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பாக்கியாதிபதியும் சுகாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், மனஇறுக்கங்கள் குறையும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை உங்களின் விரயாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத் திரத்தில் ராகுபகவான் செல்வதால், அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம்.

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களைக்கூட அனுபவிக்க விடாமல், பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்து, சொந்த பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்திய கேது, இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

புதிய முடிவுகள் எடுப்பதில் இருந்த தயக்கம் மாறும். வாழ்க்கைப் பாதையைச் சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். மகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத் தில் வேலை கிடைக்கும்.

கேது 4 - ம் வீட்டில் அமர்வதால் தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

எந்தச் சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தைச் சரி பார்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம்.

வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கும் கூடும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் தனாதி பதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பணவரவு திருப்தி கரமாக இருக்கும்.

குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். உறவினர்களில் ஒரு சிலர் உங்கள் நிலைமை புரியாமல் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். ஆன்மிகம், யோகா, தியானம் ஆகியவற்றில் மனம் லயிக்கும். வேற்று இனத்தவர், மாற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சஷ்டம சப்தமாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் வீண் விமர்சனங்கள், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைந்தாலும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திருமணப் பேச்சு வார்த்தை தாமதமாகும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு உயரும்.

இதுவரை நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்த தொகை, இனி உங்களைத் தேடி வரும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிலர், இப்போது உங்கள் பக்கம் ஆதரவாகத் திரும்புவர்.

கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கி, மனம் விட்டுப் பேசுவீர்கள். இல்லத்தில் நிம்மதி பெருகும். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பீர்கள்.

உங்களின் இந்த எண்ணம் நிறைவேற ஏதுவான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு-மரியாதை உயரும். உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். உங்களில் சிலர், புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள்.

பரிகாரம்:

திருவாரூர் - நாகை பாதையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து சுமார் 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங் குடி எனும் ஊரில், சுயம்பு லிங்கமாக அருளும் காளத்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். ஏழை தொழிலாளிக்கு உதவுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

கன்னி - உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

தியாக உணர்வும், திடசிந்தனையும் உள்ளவர் நீங்கள். இந்த ராகு - கேது மாற்றத்தில், ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு-மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 10 வது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான், இப்போது 9-ம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்!

தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். இனி குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். வீடு கட்டவும், வாங்கவும், தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். என்றாலும் ராகு 9 - ம் வீட்டில் நுழைந்திருப்பதால், தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கன மாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். சிலருக்குப் பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக், கன்சல்டன்ஸி வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஓர் அடிமைபோல் வேலை பார்த்தீர்களே... உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே... இனி, உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்து கொள்ளும் அதிகாரி வந்துசேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துகள் விலகும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புதிய வேலை அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, பயம், வீண் செலவுகள், முன்கோபம் வந்து விலகும்.

இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். கடன் தொகையில் வட்டிப் பணத்தை மட்டுமே தர முடிகிறது என்று ஆதங்கப்படுவீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, லாபாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர் வலிய வந்து பேசுவர்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை, ராகுபகவான் உங்களின் விரயாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் பயணங்களால் செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மனஉளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். அரசாங்க விஷயங்கள் அலைச்சலின் பேரில் முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

கேது பகவான் இப்போது 3-வது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மனோபலம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனத்தில் நிழலாடும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

சொந்த ஊரில் மதிப்பு கூடும்.சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

பாதிப் பணம் தந்து முடிக்கப் படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை, உங்களின் ராசி நாதனும் தசமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத் திரத்தில் கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

சாத்விகமான எண்ணங்கள் வரும். புது வேலை அமையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வழக்கு சாதகமாகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை, உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் சுக சப்தமாதிபதியான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், பண இழப்புகள், வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். தாயாருடன் கருத்து மோதல்களும் வரும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

வியாபாரம் செழிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர், மீண்டும் வந்து இணைவார். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உங்களுடைய கடும் உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். சக ஊழியர் கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துசேரும்.

பரிகாரம்

ரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊஞ்சலூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநாகேஸ்வரரை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.