Published:Updated:

மேஷம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது  பெயர்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
ராகு - கேது பெயர்ச்சி

21.3.22 முதல் 8.10.23 வரை

மேஷம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு - கேது  பெயர்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
ராகு - கேது பெயர்ச்சி

புதுமையாக சிந்திப்பவர் நீங்கள். ராகுவும் கேது வும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரையிலும் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களைச் சிலர் அவமதித்துப் பேசினா லும் தக்க பதிலடி தருவீர்கள். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவர்கள் விரும்பாத பாடத் தில் சேரும்படி வற்புறுத்தாதீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கல்யாணத்தை உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள்.

பண வரவு அதிகரிக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். வீண் கெளரவத்துக்காகப் பணத்தை வாரி இறைக்காதீர்கள். தலை சுற்றல், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, வீண் சந்தேகம் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பிப்பெரிய முதலீடுகளைப் போட்டு நட்டப்படாதீர்கள். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தான் செய்யும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் சென்று உங்களை டென்ஷாக்குவார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் களை விட்டுப்பிடிக்கவும். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளைப் போராடிப் பெறுவீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காமல், முறையே செலுத்தி விடுவது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைப்பட்ட உரிமை களும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுடன் நெருக்கம் ஆவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் பரிசு, பாரட்டுகள் குவியும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

மேஷம்
மேஷம்கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைப்பதால், உங்கள் ஆழ் மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். குறை கூறியவர்களும் புகழ்ந்து பேசுவார்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப் படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

பிள்ளைகளின் வருங்கால நலனுக் காக முக்கியத் திட்டங்களைத் தீட்டு வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப் பார்கள். சகோதரியின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது காரசார மான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படு வதைத் தவிர்க்கவும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கைத் துணைக்கு முதுகுவலி வந்து நீங்கும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

7-ல் கேது அமர்வதால், வியாபாரத்தில் போட்ட முதலை எடுக்கவே போராட வேண்டியிருக்கும். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. உத்தி யோகத்தில் பதவி உயரும். எவர் வற்புறுத்தினாலும் குறுக்கு வழியில் செல்லாமல், நேர் பாதையில் செல்வது நல்லது. வேலைச்சுமை அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி விட்டுக் கொடுப்பதன் மூலம் வெற்றிகளைப் பெற வைப்பதாக அமையும்.

நட்சத்திர சஞ்சாரம்
நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism