Published:Updated:

ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். ராகு-கேது இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு எப்படிப்பட்ட பலன் களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு பலன்கள்

ராகு பகவான் இப்போது ராசிக்கு 12-ம் வீட்டில் வந்து அமர்வதால், நிம்மதி பிறக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். கோபம் மறைந்து மலர்ச்சி பிறக்கும். வீண் பயம் நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும். நிம்மதியான உறக்கம் வரும்.

மற்றவர்களுக்கு உதவியதால் சிக்கலில் சிக்கித் தவித்த நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சந்தேகத்தாலும் வாக்குவாதத் தாலும் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லதெல்லாம் நடக்கும். தூரத்து உறவுகளும் தேடி வரும். தாயாருக்கு இருந்துவந்த மூட்டுவலி, சர்க்கரை நோய் மட்டுப்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத் துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தைத் தொடர முடியாமல் திணறினீர்களே! இனி, புது முதலீடுகள் செய்ய பணம் வரும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள்.

அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்களை மாற்றிவிட்டுப் புதிய பணியாளர்களை அமர்த்து வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் கருத்துமோதல் ஏற்பட்டாலும் இறுதியில் உங்கள் வாக்குக்குக் கட்டுப்படுவர்.

உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்பு களால் புகழ் அடைவார்கள். பணவரவும் உண்டு.

ரிஷபம்
ரிஷபம்கேது பலன்கள்

கேது பகவான் இப்போது 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணும் சக்தியை அளிப்பார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இழந்த அமைதியை மீண்டும் பெறுவீர்கள்.

சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவர். எதிரிகள் பலவீனம் அடைவார்கள். வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தடைப்பட்டு நின்றுபோன காரியங்கள் இனி வேகம் எடுக்கும். நீங்கள் நினைத்தபடி நிறைவடையும். ஷேர் லாபம் தரும்.

வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்திற்கு மாற்று வீர்கள். வாடிக்கையாளர்களின் தேவை களுக்கு ஏற்பக் கொள்முதல் செய்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்; அவரால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும் பதவி மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். எப்போதும் உங்களைக் குறை கூறிக்கொண்டிருந்த சக ஊழியர்கள், இனி உங்களைப் புரிந்துகொள்வர். உங்களுக்காகப் பரிந்து பேசுவர். பணி நிமித்தமான வழக்குகள் வெற்றியடையும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒடுங்கி-ஒதுங்கியிருந்த உங்களை வெளிச்சத்துக் குக் கொண்டுவருவதாகவும் திடீர் யோகம் தருவதாகவும் அமையும்.

ரிஷபம் - நட்சத்திர சஞ்சாரம்
ரிஷபம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism