Published:Updated:

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

நேர்வழியில் செல்லும் நீதிமான் நீங்கள்.ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும். தம்பதிக்கு இடையிலான சச்சரவுகள் விலகும். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால், எதையும் சந்தேகக் கண் ணுடன் பார்ப்பீர்கள். வீண் குழப்பம் மிகும்.

அதேநேரம் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. வீண் அலைச்சல், டென்ஷன், முன்கோபம் குறையும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வருக்கு தங்க ஆபரணங்கள், ரத்தினங் களை வாங்கித் தருவீர்கள். பிள்ளை களின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலம் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கர்ப்பிணி நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களை எதிர்த்தவர்கள் இனி அடங்குவார்கள். சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். என்றாலும் அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வக் கோயில் பிரார்த்தனைகளைச் செய்துவிட்டு வருவீர்கள்.

வியாபாரத்தில், அனுபவ அறிவால் சில மாற்றங் களைச் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை நவீனமயமாக்குவீர்கள். வேலையாட்கள் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார்கள். ஹோட்டல், இரும்பு, கமிஷன், எண்ணெய் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரியுடனான மோதல் போக்கு நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கைக்கு வரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கற்பனைத்திறனுக்குப் பாராட்டுகள் குவியும்.

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டிற்கு வந்து அமர்வதால், திடீர் பணவரவு உண்டு. வழக்குகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். மூத்த சகோதரர் உதவுவார். பிரபலங்களைச் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக்குறையால் கட்டட வேலை பாதியிலேயே நின்று போனதே, இனி வங்கியில் லோன் போட்டு வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள்.

உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். அடிக்கடி செலவுகள் வைத்த வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய ரக வாகனத்தில் வலம் வருவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் பயனடைவீர்கள். வெகுநாள்களாகப் போக நினைத்த வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக் குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதி களுக்குப் புதிய பதவிகள் தேடி வரும். உங்களைக் குறை சொன்னவர்களும் இனி புகழ்ந்து பேசுவர்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத் தில், உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பழகுவது நல்லது. கணினித் துறையினருக்கு வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, வாழ்வில் சரியான பாதையைக் காட்டுவதுடன் திடீர் யோகங்களைத் தருவாதாகவும் அமையும்.

தனுசு - நட்சத்திர சஞ்சாரம்
தனுசு - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism