Published:Updated:

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

எதிலும் பின்வாங்காத செயல்திறன் கொண்ட அன்பர் நீங்கள். ராகுவும், கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்குப் பணவரவு உண்டு.

இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமை யையும் கொடுப்பார். பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவு வார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறை யாவது சென்று வாருங்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளால் பற்று வரவை உயர்த்துவீர்கள். போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்குச் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளும் வசூலாகும். கடையை அழகுபடுத்தி அதிக வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். அதேநேரம் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வீண் பழியும் வரக் கூடும். திடீர் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

கணினித் துறையினருக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். கலைஞர்களுக்கு, வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த நிறுவனத் திலிருந்து புது வாய்ப்பு வந்து சேரும்.

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்கேதுவின் பலன்கள்

கேது, இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். நல்ல பக்குவத்தை நல்குவார். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவெடுப்பீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு அனுபவ அறிவு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக் கும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். நீண்டகால லட்சியமான சொந்த வீட்டுக் கனவு நனவாகும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடும்போது கவனம் தேவை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் வீண் வாக்கு வாதம் வந்து போகும். தேவையான பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்ட தொடங்கவும்.யாரையும் நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்க வேண் டாம். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. மாணவ மாணவியர் போட்டிகளில் வெற்றி பெறுவர். வியாபாரத்தில் உங்களின் அணுகு முறையை மாற்றிக் கொள்ளுவீர்கள். வேலையாட் களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, சிற்சில தடைகளைத் தந்தாலும் விடாமுயற்சியால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

கடகம் நட்சத்திர சஞ்சாரம்
கடகம் நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism