Published:Updated:

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

திடச்சிந்தனை கொண்டவர் நீங்கள். ராகுவும், கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரையிலும் உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் எட்டாம் வீட்டில் சென்று மறை கிறார். பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டுத் தவறான பாதையில் சென்று பல சிக்கல்களுக்கு ஆளானீர்கள் அல்லவா? இனி அந்த நிலை மாறும். நேர் பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைப்பட்டிருந்த வேலைகள் இனி சுமூகமாக முடியும். உங்கள் முகம் பளிச்சிடும்.

வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். தந்தையாருடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்; அவரின் உடல்நிலை மேம்படும். அப்பா-மகன் உறவு இனிக்கும். தந்தை வழிச் சொத்தில் சிக்கல்கள் விலகி, அது உங்கள் கைக்கு வந்து சேரும். ஆனால் எதிர்பாராத செலவுகளும், தேவையில்லாத பயணங் களும் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போகவும்.

கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல்களும் பெரிதாக வெடிக்கக் கூடும். உங்களின் அந்தரங்க விஷயங்களில் மூன்றாம் நபரை நுழைக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் அடையாதீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப் பையில் கட்டி வந்து நீங்கும். கொஞ்சம் பாசமாக நடந்துகொள்ளுங்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம். இருப்பதை வைத்து வணிகத்தைப் பெருக்கப் பாருங்கள். பழைய பாக்கிகளை கொஞ்சம் போராடித்தான் வசூலிக்க நேரிடும். கமிஷன், ஷேர், புரோக்கரேஜ் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள்.

உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே, இனி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். அவரின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கம் ஆவீர்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்பு களுக்குப் பரிசும், பணமுடிச்சும் உண்டு.

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது 2-வது வீட்டில் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்னைகளிலும் சிக்கிக்கொள்வீர்கள். வெளியிடங்களில் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிருங்கள். சிலருக்குப் பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிக மாகும். இடையிடையே பணவரவும் யோக பலன்களும் உண்டாகும்.

மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் வேண்டாம். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. வேலைச்சுமை அதிகரிக்கும். உடன் பணிபுரியும் அன்பர்கள் குறை கூறவே செய்வார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவைக்கும்; ஓரளவு வசதி வாய்ப்புகள் நிம்மதியைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

கன்னி நட்சத்திர சஞ்சாரம்
கன்னி நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism