Published:Updated:

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், ராசிக்கு 3-ல் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். சோம்பல், அலட்சியம் நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பர்.

கணவன்-மனைவிக்குள் கலகம் மூட்டியவர் களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அரைகுறை யாக நின்றுபோன பல வேலைகளையும் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவர். கடன்களையெல்லாம் அடைத்து விட்டு கம்பீரமாக வலம் வருவீர்கள். தாயாருக்கு உடல்நிலை சீராகும்.

பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களை மேற்படிப்பு, வேலை காரணமாக வெளி நாடு அனுப்பிவைப்பீர்கள். கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டிருந்த மகளுக்கு, நல்ல வரன் கூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகான பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். வாக்கை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர், ஆன்மிகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை, கனவுத் தொல்லை ஆகியவை விலகும். இளைய சகோதர வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.

வியாபாரத்தில், இதுவரையிலும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலியுங்கள். ஷேர், புரோக்கரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை அலட்ச்சியப் படுத்திய மேலதிகாரி இனி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பதவி உயர்வு உண்டு. கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேறுவர்.

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேது பகவான் ராசிக்கு 9-ம் இடத்தில் வந்து அமர்வதால், சாமர்த்தியமாகச் செயல்படவைப்பார். குடும்பத்தில் குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத் துணைவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். வருங் காலத்திற்காக சேமிப்பீர்கள். உடன்பிறந்தோர், நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். நெஞ்சு வலி, மூட்டு வலி, சளித் தொந்தரவு வரக்கூடும். அவருடன் வீண் வாக்குவாதங்களும் வரும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்கள். தந்தை வழி சொத்துக்களால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடிப் பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துப் கொள்வார்கள்.

வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கூடிவரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடிக்கப்பாருங்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சலுகைகளுடன் கூடிய வேறு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களை நிமிரவைக்கும்; சமூகத்தில் முதல் மரியாதையைப் பெற்றுத் தருவதாக அமையும்.

கும்பம் - நட்சத்திர சஞ்சாரம்
கும்பம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism