Published:Updated:

மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மனிதர்களின் மனநிலையை நொடியில் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தருவார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், ராசிக்கு 4-வது வீட்டில் வந்து அமர்வதால் மன நிம்மதியைத் தருவார். பாதியிலேயே நின்று போன வேலைகளையெல்லாம் இனி பக்குவமாய்ப் பேசி முடிப்பீர்கள். ஏமாற்றிய உறவுகள் உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். வீட்டில் அமைதி திரும்பும்.

கணவன்-மனைவிக்கு இடையே கசப்பு உணர்வு நீங்கும். இருவரும் தங்களின் ரத்த சொந்தங்களைப் பற்றி பெருமை பேச வேண்டாம். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுப காரியங்கள் ஏற்பாடாகும். வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் வாங்கியிருந்த கடனைத் தீர்க்க, புது வழி பிறக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேரு வீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலர், குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வர்.

வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். எவராக இருப்பினும் கடன் கொடுக்கவேண்டாம். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்கு தாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில், மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினர் பற்றிய வதந்திகள் விலகும். பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மகரம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேது பகவான் பத்தாவது வீட்டில் வந்து அமர் கிறார். எந்த வேலையையும் திறம்பட செய்து முடிக்கும் மனோபலத்தைத் தருவார். ஆனாலும் பலமுறை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டி வரும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் வருங் காலத்தைக் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

மூத்த சகோதரருடனான கருத்துமோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஏமாற்றும் நபர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்து வந்த நெருடல் கள் நீங்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

வியாபாரத்தில் `பெரிய முதல் போட்டு வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம்' என்று கணக்குப் போட வேண்டாம். யோசித்து முடிவு எடுப்பது நல்லது. வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்த புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் காலநேரம் இல்லாமல் உழைக்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வைப் போராடிப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, தோல்வி பயத்திலிருந்து உங்களை விடுவிப்பதுடன், வெற்றிக் கனியைப் பறிக்கவைப்பதாக அமையும்.

மகரம் - நட்சத்திர சஞ்சாரம்
மகரம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism