Published:Updated:

மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக்கவர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்வதால், இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள், இனி நல்லபடியாக நடந்தேறும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைவதால், பேச்சில் கவனம் தேவை. நீங்கள் நல்லதே செய்தாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். என்றாலும் செலவுகளும் துரத்தும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபம் வெடித்தாலும் சந்தோஷம் குறையாது. வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். பிள்ளைகள் உங்களைப் பார்த்துத் திருந்தும் அளவுக்கு உங்களின் பழக்கவழக்கங் களை மாற்றிக்கொள்வீர்கள். சகோதர - சகோதரிகளிடையே மனக்குறை நீங்கும். உங்களிடம் அன்பாகப் பேசி பணம் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தை இப்போது ஒப்படைப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் பழைய பிரச்னை களைத் தீர்க்கப் புது வழி கிடைக்கும். முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில், தொல்லை தந்துவந்த மேலதிகாரி இனி நட்புறவாடுவார். உங்களின் பொறுப்பு உணர்வைக் கண்டு புதிய பதவி, சலுகைகள் தருவார். ஆனால் சக ஊழியர்களிடம் மனஸ்தாபம் வெடிக்கும். கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். ஆனாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன புதிய வாய்ப்புகள் தேடி வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மீனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதி உண்டு. தன்னிச்சை யாக முடிவெடுக்காமல், குடும்பத்தாரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுங்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. பேச்சில் கடுமை வேண்டாம்.

வாழ்க்கைத் துணைவரிடம் விட்டுக் கொடுத் துப் போகவும். திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். இனம் புரியாத பயம் வந்து நீங்கும். எனினும் கெடு பலன்கள் குறைந்து, நல்ல பலன்கள் அதிகரிக்கும். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். செலவுகள் இரட்டிப்பாகும்.வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசுக் காரியங்களில் தடுமாற்றம் தாமதம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். வாடிக்கை யாளர்களிடம் கனிவு அவசியம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, செலவுகளையும் ஒருவித பதற்றத்தையும் தரும் என்றாலும், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தியை அளித்து சாதிக்கவைப்பதாகவும் அமையும்.

மீனம் - நட்சத்திர சஞ்சாரம்
மீனம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism