Published:Updated:

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

நிர்வாகத்திறமை மிக்கவர் நீங்கள். ராகுவும், கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரையிலும் உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். கிடப்பில் கிடந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கை இனி பிரகாசிக்கும். கையில் பணம் தங்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும். உங்களின் ஆலோசனைக்கு மதிப்பு கூடும். வீட்டில் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.

குடும்ப வருமானத்தை உயர்த்தப் புது வழி காண்பீர்கள். கணவன்- மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். உங்களுக்கு இடையே கலகம் மூட்டியவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

பிள்ளைப் பாக்கியம் இல்லாத அன்பர்களுக்கு, விரைவில் அந்தக் குறை நீங்கும். குலதெய்வக் கோயிலுக் குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். நிம்மதியான உறக்கம் வாய்க்கும். அரசாங்க அதிகாரி களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகள் தளரும். தொழில் நுணுக்கங்களை அறிந்து பேசுவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப் படுத்தி வாடிக்கை யாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வந்துசேருவார்கள். ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்து பொருள்களால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

ராகு 9-ல் நுழைவதால் வேலைச்சுமை, வீண் பழி நீங்கும். மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவார். தள்ளிப்போன பதவி உயர்வு தேடி வரும்.

சிலருக்குப் புகழ்பெற்ற நிறுவனத்தில் தகுதிக் கேற்ற உத்தியோகம் கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வீண் வதந்திகள் விலகும்; எதிர்பார்த் திருந்த பாக்கித் தொகை வந்துசேரும்.

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்கேதுவின் பலன்கள்

கேது பகவான் 3-வது வீட்டிலே வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகளும் கருத்து வேறுபாடுகளும் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக் கும். வாழ்க்கைத் துணைவருக்குப் பரிசாக, தங்க ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள்.

இதுவரையிலும் சோம்பித் திரிந்த உங்களின் பிள்ளைகள் இனி, சுறுசுறுப்படைவார்கள்; பொறுப் புடன் நடப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெறுவர். தாயாருடனான மனக் கசப்புகள் நீங்கும். ஆனால் இளைய சகோதர வகையில், அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வியாபாரத்தில் முக்கிய பிரமுகர் களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங் களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப் படும். மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள்.

சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும்; உங்களிடம் நட்புறவாடு வார்கள்.

கணினித் துறையினருக்கு அதிக சம்பளம்- சலுகையுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, துவண்டு போயிருந்த உங்களை உற்சாகப் படுத்து வதாகவும், எங்கும் எதையும் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

சிம்மம் - நட்சத்திர சஞ்சாரம்
சிம்மம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism