Published:Updated:

துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கடந்தகாலத்தை மறக்காதவர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் 7- ம் வீட்டில் வந்து அமர்வதால் திக்கு திசையை அறிவீர்கள். மறைந்துகிடக்கும் திறமைகள் வெளிப்படும். மன உளைச்சல், தடைகள் ஆகியவை விலகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள்.

தம்பதிக்கு இடையே சந்தோஷம் நிலைக்கும். எனினும் களத்திர ஸ்தானமான 7-ல் ராகு அமர்வ தால் வாழ்க்கைத் துணைவருடன் சிறு சிறு விவாதங்கள் வந்துபோகும்; பெரிதுபடுத்த வேண்டாம். அவரின் ஆலோசனைகளை மனம் திறந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழி உறவுகளிடமும் பகைமை ஏற்படலாம். பிள்ளை இல்லையே என ஏங்கும் தம்பதிக்குக் குழந்தை வரம் கிடைக்கும். குலதெய்வ நேர்த்திக் கடனைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

அரசுக் காரியங்களில் தடுமாற்றங்கள் விலகும். முக்கிய விஷயங்களில் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய நிலை மாறும். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், கமிஷன், அரிசிக் கிடங்கு, உதிரிப் பாகங்களால் ஆதாயம் உண்டு. வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள்.

உத்தியோகத்தில், இதுவரையிலும் குறை கூறிக் கொண்டிருந்த அதிகாரி இனி நேசக் கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினர் போட்டி, பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவார்கள். உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
துலாம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேது பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் சூழலுக்குத் தக்கபடி பேசவைப்பார். தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தாருக்காக நேரம் ஒதுக்கி, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலை வந்துபோகும். மகளுக்காக வரன் தேடி அலைவீர் கள். மகனின் வேலை - படிப்பு விஷயத்திற்காக அதிகம் போராட வேண்டியது வரும். ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும், சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை நினைத்து அச்சப் படுவீர்கள்.

சகோதரர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்; விட்டுக்கொடுத்துப் போங்கள். திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக்காது. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்கு தாரர்களிடம் காரசாரமான விவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாகச் செலுத்திவிடுவது நல்லது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துவிடும். ஆகவே, மகிழ்ச்சிக்குக் குறை இருக்காது. மூத்த அதிகாரிகளின் நட்பும் அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடையே வாக்குவாதம் வந்து நீங்கும்.

மொத்ததில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, மனதளவில் ஒருவித சோர்வைத் தந்தாலும் கடின உழைப்பு மற்றும் சகிப்புத் தன்மையால் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

துலாம் - நட்சத்திர சஞ்சாரம்
துலாம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism