Published:Updated:

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.22 முதல் 8.10.23 வரை

Published:Updated:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படும் அன்பர் நீங்கள். ராகுவும் கேதுவும் இணைந்து 21.3.22 முதல் 8.10.23 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால் எதிலும் முன்னேற வைப்பார். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் விலகி, இனி சந்தோஷம் பிறக்கும். மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் கூடும். குடும்பத்தில் மறுமணத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். கடன் பிரச்னைகளில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகை களை மாற்றிவிட்டுப் புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

தந்தைவழி சொந்தங்களிடேயே மனஸ்தாபம் விலகும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உறவினர் களுடனான மனவருத்தங்கள் நீங்கும். உங்களைப் பற்றித் தவறாக நினைத்தவர்களின் மனது மாறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களின் ஆலோசனையால் இழந்தது கொஞ்சம் நஞ்சமில்லை; இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். புது அணுகுமுறையால், விளம்பர யுக்தியால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருந்து வகை, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி, இனி கனிவாகப் பேசுவார். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கலைத்துறையினருக்கு, வீண் வதந்திகள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவங்கள் அழைத்துப் பேசும்.

விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்

கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். பேச்சில் இனி தெளிவு பிறக்கும். மருந்து, மாத்திரையுடன் குடித்தனம் நடத்தினீர்களே! இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடி கோபப்பட்டு வீண் வம்பில் சிக்கிக் கொண்டீர்களே, இனி சாந்தமாக பேசும் அளவுக்குப் பக்குவம் அடைவீர்கள். வீட்டு சுப நிகழ்வு முதலாக சகல காரியங்களிலும் பிடிப்பு ஏற்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைப்பட்டிருந்த திருமணம் முடியும். சகோதர - சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்து சம்பந்தப் பட்ட பிரச்னைகள் தீரும். ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வாய்க்கும். நெஞ்சுவலி, கை-கால் வீக்கம் போன்ற குறைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள்.

உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப் படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் சகலமும் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, அடிமைப்பட்டுக் கிடந்த உங்களை ஏற்றம்பெற வைக்கும். திடீர் யோகங்களையும் வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

விருச்சிகம் - நட்சத்திர சஞ்சாரம்
விருச்சிகம் - நட்சத்திர சஞ்சாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism