திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வாஸ்து ஹோமம் செய்ய எந்தப் பகுதி உகந்தது?

வாஸ்து விளக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாஸ்து விளக்கங்கள்

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாஸ்து பார்க்காமல் கட்டப்படும் வீடுகளில் ஆரம்பத்தில் எந்த மாறுதலும் தெரியாது. போகப் போகத்தான் தீவினைகள் சூழ்ந்து கொள்ளும். நல்ல நிகழ்வுகள் எதுவுமே நடக்காது. எத்தகைய காரியமும் இங்கு வெற்றி அடையாது.

வாஸ்து ஹோமம் செய்ய 
எந்தப் பகுதி உகந்தது?

திகபட்சம் ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் இத்தகைய வீடுகளில் எதிர்விளைவுகள் நிகழும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. ஆகவே, துன்பங்களைப் போக்கி, வளமான வாழ்வு வாழ்வதற்கு, நிலத்தை முறையாக ஆராய்ந்து, குறைகளைக் களைந்து நிவர்த்தி செய்து கொள்வது அவசியம். வாஸ்து தொடர்பான சில தகவல்கள் இங்கே உங்களுக்காக!

வாஸ்து பகவான் மேனியில் குடியிருக்கும் தேவர்கள்

பூமி முழுக்க வியாபித்துள்ள வாஸ்து பகவானின் உடலில் மொத்தம் 53 தேவர்கள் குடி கொண்டுள்ளனர். அவர்களைப் பார்ப்போம்:

வாஸ்து பகவானுக்குக் கிழக்கில் சர்வ ஸ்கந்தன், மேற்கில் ஜ்ரும்பகன், வடக்கில் பிரிபிஞ்சன், தெற்கில் அர்யமா, வடகிழக்கில் ஷரகி, தென்கிழக்கில் விதார்யன், வடமேற்கில் பாபராட்சசி, தென்மேற்கில் புனநீகன் என எட்டு தேவர்கள். தவிர, வாஸ்துவைச் சுற்றி முப்பத்திரண்டு தேவர்களும், வாஸ்துவை ஒட்டிய பிரதேசத்தில் பன்னிரண்டு தேவர்களும் நடுவில் ஒரு தேவரும் வீற்றிருக்கின்றனர்.

ஆக, மொத்தம் 53 தேவர்கள் வாஸ்து பகவான் உடலில் குடிகொண்டுள்ளனர். எனவே, வாஸ்துவை வழிபடுவதால், 53 தேவர்களையும் திருப்திப்படுத்தி நாம் நலம் பெறலாம்.

ஈசான்ய மூலையில் வாஸ்து ஹோமம்!

பொதுவாக, வாஸ்து ஹோமத்தை நாம் குடியேறப் போகும் இடத்திலோ அல்லது புதிதாகத் தொடங்கவுள்ள அலுவலகத்திலோ... சம்பந்தப்பட்ட நிலத்தின் வட கிழக்கு மூலையில் அதாவது ஈசான்ய மூலையில் நடத்த வேண்டும். வாஸ்து பகவான் அங்குதான் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

எனவே, இந்த மூலையில் ஹோமம் செய்யும் போது நாம் அவருக்குச் சமர்ப்பிக்கும் எந்த ஒரு பொருளும் நேராக அவரது வாய்க்கே சென்று சேர்ந்து நமக்கு பலன் கிடைக்கும். இப்படிச் செய்யப்படும் ஹோமத்தால் வாஸ்துவின் மேல் அமர்ந்திருக்கும் தேவர்கள் மகிழ்ந்து, நல்லருள் புரிவார்கள்.

வாஸ்து ஹோமம் செய்ய 
எந்தப் பகுதி உகந்தது?

வீடு கட்ட உகந்த நிலப்பகுதிகள்

வாஸ்து சாஸ்திரம் சொல்கிற முறைப்படிதான் வீடு கட்டுவதற்கு உரிய நிலத்தைத் தேர்ந் தெடுக்க வேண்டும்.

கிழக்கு மூலை (இந்திரன்) தாழ்ந்து, மேற்கு மூலை (வருணன்) உயர்ந்திருக்கும் நிலப்பகுதி கோவீதி எனப்படும். இது வீடு கட்ட உகந்த நிலம். இங்கு வீடு கட்டினால் அபிவிருத்தி கிடைக்கும். வளம் பெருகும்.

தெற்கு மூலை உயர்ந்திருந்து வடக்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப் பகுதி கஜ வீதி எனப்படும். இங்கு வீடு கட்டுவது மிகவும் நல்லது.

நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் இருக்கும் பூமி தான்ய வீதி எனப்படும். இது வீடு கட்ட உகந்தது.

தவிர்க்கவேண்டிய நிலப் பகுதிகள்

கிழக்கு மூலை உயர்ந்திருந்து, மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப் பகுதி ஜல வீதி. இங்கு வீடு கட்டும் முயற்சியில் இறங்கக் கூடாது.

வடக்கு மூலை (குபேரன்) உயர்ந்திருந்து தெற்கு மூலை (எமன்) தாழ்ந்திருக்கும் பகுதி எம வீதி. இந்த நிலத்திலும் வீடு கட்டக் கூடாது.

வடகிழக்கு மூலை (ஈசானம்) சற்று உயர்ந் திருந்தாலும், தென்மேற்கு மூலை (நிருதி) தாழ்ந் திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது உசிதமல்ல. இந்த நிலம் பூத வீதி எனப்படும்.

தென்கிழக்கு மூலை (அக்னி) உயர்ந்திருந் தாலும், வடமேற்கு மூலை (வாயு) தாழ்ந்திருந்தால் அங்கே வீடு கட்டுவது கூடாது. இது நாக வீதி.

வாயு மூலை உயர்ந்திருந்து அக்னி மூலை தாழ்ந்திருந்தால், அது அக்னி வீதி எனப்படும். இதுவும் கூடாது.