Published:Updated:

9 கிரகங்கள்... 12 ராசிகள்... எளிய பரிகாரங்கள்!

கிரகங்களும் ராசிகளும்
பிரீமியம் ஸ்டோரி
கிரகங்களும் ராசிகளும்

விஞ்ஞான ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

9 கிரகங்கள்... 12 ராசிகள்... எளிய பரிகாரங்கள்!

விஞ்ஞான ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
கிரகங்களும் ராசிகளும்
பிரீமியம் ஸ்டோரி
கிரகங்களும் ராசிகளும்

ஜனன காலம் தொடங்கி மரண காலம் வரையிலும் ஒரு மனிதனின் வாழ்க்கை, நவ கிரகங்களின் செயற்பாட்டால் நடந்து வருவதாக ஜோதிடம் கூறுகிறது. நவகிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஜோதிடம் இயங்குகிறது. ஒவ்வொரு ஜாதகத்திலும் 12 வீடுகள். இந்த வீடுகள் கிரகங்களுக்கு உரியவை.

9 கிரகங்கள்... 12 ராசிகள்...
எளிய பரிகாரங்கள்!
adventtr

ன்னிரண்டு வீடுகள் இருந்தும் வசிப்பதற்கு ஒன்பதே பேர். 12 வீடுகள் 12 பேர் என்றால் குறையில்லாத அமைப்பு எனலாம். `12 வீடுகளில் 9 பேர் மட்டுமே என்றால் ஒரு ஜாதகன் மூன்றுவிதக் குறைகளோடு வாழ வேண்டும் என்பது இறைவன் விதித்த விதியோ' என்ற கேள்வி மனதில் எழுகிறது அல்லவா?

12 ராசிகளும் 12 விதமான அமைப்புகளில் ஜீவன், லாபம் - குடும்பம், சகோதரன், புத்திரப் பாக்கியம், தாயார், நோய் - கடன், களஸ்திர ஸ்தானம், ஆயுள், தகப்பனார், கர்மம், லாப ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என வரைமுறைபடுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் 9 கிரகங்களும் 9 விதமான காரகத்துவங்களைக் கொண்டு தகப்பனார், தாயார், சகோதரன், தொழில், லாபம், திருமணம், புத்திரப் பாக்கியம், ஆயுள், எதிரிகள் - கடன் தொல்லை- நோய் கொண்டு விளங்குகின்றன. இவற்றுள் உச்ச - நீச, நட்பு, ஆட்சி, பகை அமைப்புகள் வேறு.

27 நட்சத்திரங்களில் ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம் என்றும் தனித்தனியாக அடையாளம் காணமுடியும். இவற்றில் பெண் நட்சத்திரம் ஆணுக்கு இருந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் ஆண் நட்சத்திரம் பெண்களுக்கு வரும்போது அவர்களின் வாழ்க்கை ஓர் ஆணுக்கான குணாதிசயங்களைக் கொண்டே அமைகிறது என்று கூறிவிட முடியும்.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் மிகச் சிறந்தவன் சகாதேவன் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. அப்பேர்பட்ட சகாதேவனால், பஞ்ச பாண்டவர்களின் மூத்தவன் கர்ணன் என்று ஏன் கண்டுபிடிக்க இயலவில்லை. கர்ணன் இறந்த பிறகுதான் அவன் மூத்த சகோதரன் என்று தெரியவருகிறது. சகாதேவனால் ஏன் இந்தக் கூற்றை தனது ஜோதிட சாஸ்திர ஞானத்தால் கணிக்க முடியவில்லை? இந்தப் பிரபஞ்சத்தின் பரம்பொருள் ஜோதிடர்களின் அறிவுக்கும் திறமைக்கும் அப்பாற்பட்டது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

பிரம்மம் முடிவற்றது, விளக்கம் அற்றது, நீக்கமற நிறைந்திருப்பது. நம்மைப் படைத்த பரம் பிரம்மத்தைத் தேடிச் சென்று சரணாகதி அடைவதற்கு ஜோதிடமும் ஒரு மார்க்கமே. இதில் எதிர்காலத்தைச் சொல்வது என்பது ஒரு சிறு பகுதிதானே தவிர, அது மட்டுமே முழு ஜோதிடம் ஆகிவிடாது. மனிதன் குறைகள் இல்லாத வாழ்க்கையை வாழ என்ன வழி என்பதைக் கூறியது ஜோதிடம்.

ஒருவரின் ஜாதகத்தில் என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்பப் பரிகாரங்களை மேற்கொண்டால் குறையில்லாத வாழ்க்கையை ஒருவர் வாழமுடியும்.

சூரியன் - கண்ணுக்கு தெரியும் கடவுள். நவகிரகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். தகப்பனார் மற்றும் தகப்பனார் வழி உறவுக்குக் காரகத்துவம் பெற்றவர், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறிப்பவர். ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந் தால் தகப்பனார் தகப்பனார் சம்பந்தப்பட்ட சொத்துப் பிரச்னைகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிக்கும். இப்படியான ஜாதகம் அமையப்பெற்றவருக்கு எளிய பரிகாரம் உண்டு. அது, சூரிய பகவானை வேண்டி திரௌபதி அட்சய பாத்திரம் வாங்கிய ஓவியத்தை அடிக்கடிப் பார்ப்பதும் அந்தக் கதையைப் படிப்பதுமேயாகும். இது சூரியபகவானின் அருளை நமக்குப் பெற்றுத்தரும்.

சந்திரனின் பலம் குறைவாக இருந்தால் தாய், தாய்வழி உறவுகள், சொத்துகள் ஆகியவற்றில் பிரச்னை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் சந்திர அஷ்டோத்திரம் படிப்பதும் அந்த சந்திரனின் ஸ்தலமான திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரம்.

செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் குறைவாக இருந்தால் வீடு, மனை சம்பந்தப் பட்ட பிரச்னைகள், ரத்த சம்பந்தமான நோய்கள் ஆகியவை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள். அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்வதும், அவருக்குச் சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பணம் செய்து வழிபடுவதும், துவரம் பருப்பு தானம் செய்வதும் நன்று. இதனால் செவ்வாயின் அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

9 கிரகங்கள்... 12 ராசிகள்...
எளிய பரிகாரங்கள்!

சகல பிரச்னைகளையும் நீக்கி அருள்வது குருபார்வை. அப்படிப்பட்ட குருபகவான் ஜாதகத்தில் பலம் குன்றியிருந்தாலோ, அல்லது மறைவாய் இருந்தாலோ ஒரு காரியத்தை ஒருமுறைக்குப் பலமுறை முயன்று செய்யவேண்டியிருக்கும். காரியத் தடைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குடும்ப சந்தோஷத்தை, பொருளாதார முன்னேற்றத்தை, ஆபரண சேர்க்கையை அனுபவிக்க வேண்டும் எனில் எளிய பரிகாரம் உண்டு. அதாவது, பசுவை நமஸ்காரம் செய்து கோபூஜை அல்லது கோ சம்ரக்‌ஷணங்கள் செய்துவந்தால் குருவின் அருள் பார்வை அதிகம் கிடைக்கும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களிடம் ஆசிபெற்று வந்தால் மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும்.

சுக்கிரனின் பலம் குறைவாக இருந்தால், வாழ்வில் அவரவர் வயதுக்கு ஏற்ப அடையவேண்டிய சுகங்களை அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எப்போதும் அதுகுறித்த ஏக்கம் இருந்த வண்ணம் இருக்கும். இந்நிலை மாறி சுக்கிரனின் அருளைப் பெற திருவரங்கம் கோயிலில் ரங்கநாதர் விஸ்வரூப தரிசனம் செய்வதும், விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்பதும், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பது போன்ற ஓவியக் காட்சியைப் பார்ப்பதும் சிறந்த பரிகாரங்களாக அமையும்; நம் பாவங்களை நீங்கி செல்வ சுகத்தை அனுபவிக்கும் பேறு கிட்டும்.

புத பகவானின் தோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் கல்வியில் தடை, கலைகளில் முன்னேற்றமின்மை ஆகியன இருக்கும். அப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள் மகா விஷ்ணு மற்றும் மகாலட்சுமிக்கு துளசி மாலை மற்றும் பச்சை நிற பழங்கள் சமர்ப்பணம் செய்வதன் மூலம் புதன் பகவானின் அனுகிரகத்தை முழுமையாகப் பெறலாம். திருநங்கைகளுக்கு உதவுவதும் தானம் கொடுப்பதும் சகல தோஷங்களையும் நீக்கும்.

ராகு - கேதுக்களினால் ஒரு ஜாதகர் பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்தவண்ணம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு, உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவற்றைத் தானம் கொடுப்பதும் பால் மற்றும் தேன் ஆகியவற்றைக் குரு ஸ்தானத்தில் உள்ள ஒருவருக்கு தானம் கொடுப்பதும், விளக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாக விளங்கும்.

சனி பகவானால் துன்பப்படும் ஜாதகர்கள் அந்தக் குறை நீங்க சனிக்கிழமைகளில் உபவாசம் இருப்பதும், நல்லெண்ணெய் பயன்படுத்துவதும், நல்லெண்ணெயைத் தானமாகக் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும். அதிகாலை நேரத்தில் சுறுசுறுப்பாக எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் சனி பகவானுடைய பாதிப்பில் இருந்து விடுபட முடியும். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் கடன் உபாதைகள் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் பிறக்கும் என்றும் சொல்லலாம்.

9 கிரகங்கள்... 12 ராசிகள்...
எளிய பரிகாரங்கள்!

`சுக்கிர பார்வை!'

சுக்கிரதசை காலம்தான் மிக நீண்ட தசாகாலம் ஆகும் 20 வருடங்கள். நவ ரத்தினங்களில் வைரம் இவருடையது. வெள்ளி உலோகத்துக்கு அதிபதி.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங் களின் அதிபதி. லட்சுமி, வருணன் போன்றவர்கள் அதிதேவதைகள் ஆவர்.

சுக்கிரனின் பார்வை பட்டால் பாலை வனமும் சோலைவனம் ஆகும். இல்லறம் இனிக்கும். சுக்கிரனின் கருணையைப் பெற, ஆண்-பெண் இருபாலரும் இவரை வணங்குதல் நன்று.

சுக்கிரனுக்கு சிவ வழிபாடும், சிவன டியார்களைப் போற்றுவதும் மிகவும் பிடிக்கும்.

வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம். பூஜையின்போது மஹாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம், ஸ்ரீலட்சுமி துதி, கனகதாரா ஸ்தோத்ரம் போன்ற வற்றைக் கூறி வழிபட்டு, தீப ஒளியில் அம்பாளை நமஸ்கரிக்க, நற்பலன்கள் கூடும். வெண் பொங்கல், மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து, தாமரை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படி இருந்தாலும், சுக்கிரனுக்கு மிகவும் ப்ரீதியான பூஜைகளான சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பௌர்ணமி பூஜை, பஞ்சமி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜை போன்றவற்றில் ஒன்றைச் செய்து வழிபட்டால் சுக்கிரபகவானின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்; சகல செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.

-சி.சங்கரி. திருநெல்வேலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism