Published:Updated:

ராசிபலன்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை

ராசிபலன்

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

நவம்பர் 30 முதல் டிசம்பர் 13-ம் தேதி வரையிலும் 12 ராசிகளுக்கான துல்லிய பலன்களை வழங்குகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மேஷம்:

சுக்கிரன் சாதகமான வீடுகளில் நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது டிசைனில் நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார்.

ராசிபலன்

மகளுக்கு வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. கூடா பழக்க வழக்கங்கள் அவர்களைத் தொற்றிக்கொள்ளக் கூடும். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சுவலி வரக்கூடும்; அவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

புதன் வலுவாக நிற்பதால் பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத் தில், சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தும் பணி சிறப்பாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர் வீட்டுத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.

சுகாதிபதி சூரியன் கேதுவுடன் நிற்பதால் முதுகு வலி, ஹார்மோன் பிரச்னை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். புதன் ராசியைப் பார்ப்பதால் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். கலைத்துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

பலம் - பலவீனத்தை உணரும் நேரம் இது.

ராசிபலன்

மிதுனம்:

ங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் -மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்; நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு ஆரோக்கியக் கோளாறுகள் நீங்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

6-ல் சூரியன் வலுவாக நிற்பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 4-ம் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதால் செலவுகள், உறவினருடன் உரசல் போக்கு இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பையும் அதன் மூலம் ஆதாயமும் பெறுவார்கள்.

நினைத்ததைச் சாதித்துக் காட்டும் தருணம் இது.

ராசிபலன்

கடகம்:

புதன் 4-ம் தேதி வரை சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். யதார்த்தமான பேச்சால் சாதிப்பீர்கள். 5-ம் தேதி வரை 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், பிரிவு வந்து செல்லும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

5-ல் நிற்கும் கேதுவுடன் சூரியனும் அமர்ந்திருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். உறவினர் பகை வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புது ஒப்பந்தங்களை யோசித்து ஏற்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் காலம் இது.

ராசிபலன்

சிம்மம்:

சுக்கிரன் 5-ம் தேதி வரை 5-ல் நிற்பதால், பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். சிலருக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீட்டுக்கு மாறுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். பயணம் ஆதாயம் தரும்.

ராசிநாதன் சூரியன் கேதுவுடன் நிற்பதால் டென்ஷன், விபத்து வந்து போகும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில், புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வியக்கும்படி செயல்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன்

கன்னி:

ங்கள் தன-பாக்யாதிபதி சுக்கிரன் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்த பணம் வரும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழி சொத்து கிட்டும். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கேது 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். குருவும் செவ்வாயும் மறைந்திருப்பதால் ஒருவிதப் படபடப்பு வந்து போகும். சேமிப்புகள் கரையும். சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

கடின உழைப்பால் நினைத்ததைச் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக நிற்பதால், உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, அணிகலன்கள் சேரும். வாகனப் பழுதைச் சரி செய்வீர்கள். திருமணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

சூரியனும், புதனும் கேதுவுடன் நிற்பதால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் கருத்துமோதல்கள் வந்து செல்லும். கண், பல் வலி வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள். மனம் ஆறுதல் அடையும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

எதையும் சாதிக்கும் வல்லமையைப் பெறும் தருணம் இது.

ராசிபலன்

விருச்சிகம்:

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். ராசிக்குள் சூரியன் கேதுவுடன் நிற்பதால் சோர்வு வந்து நீங்கும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். உறவினர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். சுக்கிரன் வலுவாக நிற்பதால் இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்தப் பணத்தையும் நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உரும். கல்யாண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அதிகாரிகளிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங் களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

தனுசு:

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு; செலவுகளும் துரத்தும். குரு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பாக்கியாதிபதி சூரியன் கேதுவுடன் 12-ல் நிற்பதால், செலவுகளும் வீண் டென்ஷனும் இருக்கும். புதன் ஓரளவு சாதகமாக உள்ளார் என்றாலும் வாழ்க்கைத்துணைக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில், தேங்கிய சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினரைப் பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

கடின உழைப்பால் எடுத்த காரியத்தில் வெற்றி காணும் வேளை இது.

ராசிபலன்

மகரம்:

சூரியன், புதன், கேது ஆகிய மூன்றும் 11-ம் வீட்டில் நிற்பதால், கேட்ட இடத்தில் ஓரளவு பணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். மூத்த சகோதரர் உதவுவார். இளைய சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். உறவினர் வீட்டுத் திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். சக ஊழியர்களைக் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

கும்பம்:

சுக்கிரன் 11-ல் நிற்பதால் பணம் எதிர்பார்த்த வகையில் வரும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மூத்த சகோதரர்கள் மதிப்பார்கள்.

சூரியனும், புதனும் வலுவாக நிற்பதால் வேலையில்லாமல் தவித்தவர் களுக்கு வேலை கிடைக்கும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். பதவிகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடும் காலம் இது.

ராசிபலன்

மீனம்:

சூரியன் 9-ல் கேதுவுடன் நிற்பதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தந்தையாருடன் மனக்கசப்பு, அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். புதன் சாதகமான நிலையில் இல்லை. ஆகவே, வாழ்க்கைத் துணையுடன் விவாதம் வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உறவு, நட்பு மூலம் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும்.

சுக்கிரன் வலுவாக நிற்பதால் புது வேலை அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலை ஆள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். கலைத்துறையினருக்குச் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

வீண் செலவுகளைக் குறைக்க வேண்டிய காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism