Published:Updated:

ராசி பலன்கள்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

டிசம்பர் 14 முதல் 27-ம் தேதி வரை

டிசம்பர் 14 முதல் 27-ம் தேதி வரையிலும் 12 ராசிகளுக்கான துல்லிய பலன்களை வழங்குகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.

ராசி பலன்கள்

மேஷம்:

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வீட்டின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்த சிரமங்கள் நீங்கும். தம்பதிக்கு இடையே பனிப்போர் குறையும்.

ராசி பலன்கள்

16-ம் தேதி முதல் பூர்வ புண்யாதிபதி சூரியன், கேதுவை விட்டு விலகுவ தால், பிள்ளைகளிடம் பிடிவாதம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். அரசாங்க விஷயங்கள் முடியும்.

ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருப்பதால் முதுகு, மூட்டு வலி, வீண் சந்தேகம், கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினருக்குப் புது சலுகைகள் கிடைக்கும்.

அலைச்சல் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் 9-ல் அமர்வதால் வீடு- மனை வாங்கவும் விற்கவும் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிதமாகும். கணவன்-மனைவிக் குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 16-ம் தேதி முதல் சூரியன் குருவின் வீட்டில் அமர்வதால் ஆரோக்கியம் கூடும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். புதன் 8-ல் நிற்பதால் பழைய நண்பர்கள் உதவுவார்கள்.

ராகுவும் கேதுவும் சரியில்லாததால் ஏமாற்றம், செலவு, தலை மற்றும் கை-கால் வலி வந்துபோகும். செவ்வாய் 7-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டியது வரும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நினைத்ததை முடித்து வெற்றிபெறும் நேரம் இது.

ராசி பலன்கள்

மிதுனம்:

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பதவிகள் தேடி வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் பண வரவு குறையாது. புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

16-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால் முன்கோபம் அதிகரிக் கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அசதி வந்து நீங்கும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களை யோசனையை ஏற்பர். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி காணும் தருணம் இது.

ராசி பலன்கள்

கடகம்:

சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம், சந்தேகம் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். 16-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கு சாதகமாகும். புதன் 6-ல் தொடர்வதால் சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்துபோகும். திடீர்ப் பயணங்கள் - அலைச்சல் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள்.

செவ்வாய் 5 -ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருள்களைச் சுமக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர் விமர்சனம், வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.

ராசி பலன்கள்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் 16-ம் தேதி முதல் குரு வீட்டில் அமர்வதால் அலுப் பும் சலிப்பும் விலகும். புதிய விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களுடனான மனக்கசப்பு நீங்கும். சுக்கிரன் 6-ல் மறைவதால் வீண் செலவு, விபத்து, டென்ஷன் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

புதன் சாதகமாக இருப்பதால், கடின வேலைகளையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில், நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத் தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

கன்னி:

சூரியன் சாதகமாக செல்வதால் செலவைக் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை கிடைக்கும். சுக்கிரன் 5-ல் அமர்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுட னான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சகோதரிக்குத் திருமணம் முடியும். புதன் 4-ல் நிற்பதால் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவதும் பழகுவதும் நல்லது. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி கனிவாக நடந்துகொள்வார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும் தருணம் இது.

ராசி பலன்கள்

துலாம்:

சூரியன் 16-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் இழுபறி நிலை மாறும். பேச்சில் நிதானம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் நன்மைகள் உண்டு. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஓரளவு பணவரவு உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல வரன் அமையும்.

3-ல் புதன் மறைந்து நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள் உதவுவார்கள். சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். மகான்களின் அருள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரைப் பழைய நிறுவனங்கள் அழைத்து பேசும்.

யதார்த்தமான முடிவுகளால் முன்னேறும் காலம் இது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சூரியன் 16-ம் தேதி முதல் ராசியை விட்டு விலகுவதால், தடைப் பட்டு நின்றிருந்த வேலைகள் மீண்டும் தொடங்கி முடியும். சிலருக்குப் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய கோணத்தில் சிந்தித்துப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்ந்திருந்தாலும் கேதுவுடன் இணைந்திருப்பதால் எதிலும் ஒருவித தயக்கம், நம்பிக்கை யின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்து போகும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில், சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.

கௌரவச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

தனுசு:

புதன் ராசிக்குள்ளேயே நிற்பதால் மனநிம்மதி கிட்டும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய சொந்த-பந்தங்களைச் சந்திப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. 16-ம் தேதி முதல் சூரியன் கேதுவை விட்டு விலகி ராசிக்குள் நுழைவதால், தந்தையின் உடல் நலம் சீராகும். ஆனால் வீண் டென்ஷன், காரிய தாமதம் வந்து செல்லும். பயணம் அலைச்சல் தரும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வர். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் புது வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

மகரம்:

சூரியன் 16-ம் தேதி முதல் 12-ல் மறைவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள், டென்ஷன் வந்துபோகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

செவ்வாயும் கேதுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். புதன் 12-ல் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் வீண் பேச்சு வேண்டாம்.அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அமைதியான அணுகுமுறையால் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

கும்பம்:

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்த்தவர்களும் நண்பர் களாவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால் பண வரவு திருப்தி தரும். மனைவி வழியில் மதிப்பு கூடும்.

புதன் வலுவாக நிற்பதால் நட்பு வட்டம் விரியும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 10-ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபம் அடை வீர்கள். எனினும், பங்குதாரர்களால் நிம்மதியை இழப்பீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

மீனம்:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், செயலில் வேகம் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். 16-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் சில விஷயங்களை உடனே முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். பாக்கி பணத்தைக் கொடுத்து புதிய சொத்துக்குப் பத்திரப்பதிவு முடிப்பீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். புது முதலீடுகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கூடும். கலைத் துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

நினைத்ததை முடித்து வெற்றி வாகை சூடும் காலம் இது.