Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

டிசம்பர் 28 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை

டிசம்பர் 28 முதல் ஜனவரி 10-ம் தேதி வரையிலும் 12 ராசிகளுக்கான துல்லிய பலன்களை வழங்குகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மேஷம்:

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும்.

8-ல் செவ்வாய் நிற்பதால் அலைச்சல், வேலைச்சுமை, சகோதர வகையில் டென்ஷன் வரக்கூடும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத் துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் நேரம் இது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ராசிபலன்

ரிஷபம்:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனித் தேடிவந்து பேசுவார்கள். சூரியன் 8-ல் நிற்பதால் முன்கோபம், சிறுசிறு காயங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்காலத்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிப்பால் விரும்பியப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய் 7-ல் நிற்பதால் ஒரு சொத்தை விற்றுப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத் துறையினரே! உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.

வி.ஐ.பிகளின் பாராட்டைப் பெறும் காலம் இது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசிபலன்

மிதுனம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் 7-ல் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். செவ்வாய் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்களால் மதிப்பு, மரியாதை கூடும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வராது என்றிருந்த பணம் வரும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பிச் சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

நினைத்ததை முடித்துக் காட்டும் காலம் இது!

ராசிபலன்

கடகம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள்.

செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் அறிமுகம், உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். மூத்த சகோதரர் உதவுவார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தொல்லை தந்த கடனில் ஒருபகுதியைத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத் துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணப் புழக்கம் அதிகரிக்கும் நேரம் இது!

ராசிபலன்

சிம்மம்:

சூரியன் 5-ல் நிற்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் சச்சரவு, விபத்து வந்து செல்லும். புதனும் 6-ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணம் உண்டு. செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் ஓயும்.

உடன்பிறந்தவர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைத் துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய தருணம் இது!

ராசிபலன்

கன்னி:

சுக்கிரன் 5-ல் நிற்பதால் சமயோஜிதமாக சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். சூரியன் 4-ல் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வீடு வாங்குவது, கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு.

செவ்வாய் வலுவாக 3-ல் நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கணவன்,மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத் துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

வாழ்வில் முன்னேறப் புதிய பாதை தெரியும் காலம் இது!

ராசிபலன்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். சூரியன் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

செவ்வாய் 2-ல் இருப்பதால் சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

புதிய பொறுப்புகள் தேடி வரும் நேரம் இது!

ராசிபலன்

விருச்சிகம்:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். சுக்கிரன் 3-ல் இருப்பதால் விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நாவடக்கத்துடன் செயல்பட்டு நல்லபெயர் எடுக்க வேண்டிய நேரம் இது!

ராசிபலன்

தனுசு:

சுக்கிரன் தனஸ்தானத்தில் இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் தந்தையின் உடல் நலம் சீராகும். வேலைச்சுமை, முன்கோபம், வீண் செலவுகள் வந்து செல்லும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். 12-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத் துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

திட்டமிட்டு சேமிக்க வேண்டிய தருணம் இது!

ராசிபலன்

மகரம்:

யோகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் தொடர்வதால் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். சூரியன் 12-ல் நீடிப்பதால் அரசால் பிரச்சனை, காரியத்தடைகள் வரக்கூடும்.

செவ்வாய் லாப வீட்டில் இருப்பதால் வரவேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்; புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

இழுபறியாய் இருந்த வேலைகளை முடிக்கும் காலம் இது!

ராசிபலன்

கும்பம்:

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. 12-ல் சுக்ரன் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம், கிரகப்பிரவேசம், காதுகுத்து நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். வீடு, மனை வாங்க, விற்க சுமுகமான நிலை காணப்படும்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வீண் பழி வந்து சேர வாய்ப்பு உண்டு. கலைத் துறையினரே! எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.

தைரியமாக முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றி பெறும் வேளை இது!

ராசிபலன்

மீனம்:

சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். சுக்ரனும், புதனும் லாப வீட்டில் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். செவ்வாய் 9-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், சகோதரர்கள் உதவுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

வெற்றிக் கனியை சுவைக்கும் காலம் இது!