Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

பிப்ரவரி 8 முதல் 21-ம் தேதி வரை

ராசிபலன்

பிப்ரவரி 8 முதல் 21-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த பிப்ரவரி 8 முதல் 21-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்!

ராசிபலன்
ராசிபலன்

மேஷம்:

யோகாதிபதி சூரியன் 13 - ம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு புகுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் முடியும். பாகப்பரிவினை சுமூகமாக முடியும். குழந்தை பாக்கியம் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுக்கிரன் 9-ம் வீட்டில் சாதகமாக நிற்பதால் மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். குருவும் வலுவாக நிற்பதால் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களைக் கலந்தாலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் காலம் இது!

ராசிபலன்

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்து நிற்பதால் வீண் அலைச்சல், டென்ஷன், தூக்கமின்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். 12 - ம் தேதி வரை தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். 13 -ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலை அமையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

குரு 10-ல் தொடர்வதால் நெடுங்கால நண்பர்கள்கூட உங்களைக் குறை கூறுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியச் செலவுகள் மட்டும் செய்யப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். முரண்டு பிடித்த வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

பிரபலங்களின் ஆதரவால் மகிழ்ச்சி காணும் வேளை இது!

ராசிபலன்

மிதுனம்:

ராசிநாதன் புதன் 8-ல் இருப்பதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் 7-ல் நிற்பதால் தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

சூரியனின் போக்கு சுமாராக இருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குரு வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய நண்பர்களால் மறுமலர்ச்சி உண்டாகும் தருணம் இது!

ராசிபலன்

கடகம்:

புதன் 9 - ம் தேதி முதல் வலுவடைந்திருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். தந்தைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்து, வீண் டென்ஷன் வந்து போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

சூரியன் 13 - ம் தேதி முதல் 8-ல் நிற்கும் புதனுடன் சேர்வதால் கோபம் குறையும். புது முயற்சிகள் முடியும். பணத்தட்டுபாடு விலகும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குரு 8-ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களைத் தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினருக்குக் கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.

வேலை மாற்றம், இடமாற்றம் உண்டாகும் நேரம் இது!

ராசிபலன்

சிம்மம்:

சுக்கிரன் 5-ல் நிற்பதால் உங்கள் பேச்சில் கனிவுக் கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

உங்கள் ராசிநாதன் சூரியன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். குருபகவான் வலுவாக இருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத் துறையினர் புதுமையாக சில படைப்புகளால் கவனம் ஈர்ப்பர்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் அறியவரும் காலம் இது!

ராசிபலன்

கன்னி:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். யோகாதிபதி சுக்கிரன் 4-ல் இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. கல்யாண விஷயங்கள் சாதகமாகும். சூரியன் 13 - ம் தேதி முதல் 6-ல் அமர்வதால் மனம் தெளியும். இழுபறியான வேலைகள் முடியும். பிள்ளைகள் மீது இருந்த சலிப்பு, வெறுப்பு குறையும்.

குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால் வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத் தில் உயரதிகாரி சில நேரங்களில் உங்களைக் கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினர் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது!

ராசிபலன்

துலாம்:

குருபகவான் தொடர்ந்து வலுவாக இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிரடி முன்னேற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். 13 - ம் தேதி முதல் சூரியன் 5-ல் அமர்வதால் முன்கோபம், காரியத் தடை, தூக்கமின்மை, உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்து விலகும்.

புதன் வலுவாக இருப்பதால் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை நீங்கும். கண், காது வலி நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்குத் தேர்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்குப் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கலகலப்பாக பேசி காரியம் சாதிக்கும் காலம் இது!

ராசிபலன்

விருச்சிகம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அழகு, இளமை கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

குரு 4-ல் இருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். குறுக்கு வழியில் ஆதாயம் தேடவேண்டாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினருக்குக் கலைத்திறன் வளரும்.

பொறுமையுடன் பயணிக்க வேண்டிய நேரம் இது!

ராசிபலன்

தனுசு:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். 2-ல் அமர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக பேச வைக்கும் சூரியன் 13 - ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் இங்கிதமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட அரசுக் காரியங்கள் உடனே முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்பச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சில வேலைகளைப் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிள்ளைகளால் பெருமை சேரும் நேரம் இது!

ராசிபலன்

மகரம்:

புதன் ராசிக்குள் நுழைவதால் புத்துணர்ச்சி பெருகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். 13 - ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் சோர்வு, களைப்பு, வயிற்றுவலி நீங்கும். பார்வை யைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

குருபகவான் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

சோதனைகளைத் தாண்டி சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது!

ராசிபலன்

கும்பம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் லோன் கிடைக்கும். 13-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கார, வாயுப் பதார்த்தங்களை உணவில் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

ஜன்ம குருவும் நீடிப்பதால் சிறுசிறு அவமானம், வீண் விரையம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளைக் கையாளுவீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது!

ராசிபலன்

மீனம்:

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். புதனும், சுக்கிரனும் வலுவாக இருப்பதால் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

குருபகவான் 12-ல் மறைந்திருப்பதால் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள் இனிப் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நேரம் இது!