Published:Updated:

ராசி பலன்கள்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

மார்ச் 8 முதல் 21-ம் தேதி வரையிலும்

ராசி பலன்கள்

மார்ச் 8 முதல் 21-ம் தேதி வரையிலும்

Published:Updated:
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

மார்ச் 8 முதல் 21-ம் தேதி வரையிலுமான பன்னிரு ராசிகளுக்குமான பலன்களைக் கணித்துத் தருகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மேஷம்:

சூரியன் 14-ம் தேதிவரை லாப வீட்டில் நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். 15 - ம் தேதி முதல் ராசிக்கு 12 -ல் மறைவதால் வீண் அலைச்சல், செலவு, உடல் உஷ்ணத்தால் கட்டி வந்துபோகும். நீண்ட நாளாகப் போக நினைத்தும் முடியாமல் போன குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

ராசி பலன்கள்

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 10- ல் நிற்பதால் பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வியாபாரத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத் தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். கலைத்துறையினரைப் புதிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

அனைவராலும் மதிக்கப்படும் காலம் இது.

ராசி பலன்கள்

ரிஷபம்

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுக்கிரன் 9- ம் வீட்டில் நிற்பதால் வீடு கட்ட லோன் கிடைக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

செவ்வாய் 9-ல் நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். குலதெய்வ வழிபாடு மனநிறைவைத் தரும். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். புதுப் பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

புது பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும் நேரம் இது.

ராசி பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. 14-ம் தேதிவரை சூரியன் 9-ல் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு உடல் நல பாதிப்பு வந்து செல்லும். 15-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் நுழைவதால் பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்து, டென்ஷன், பண நஷ்டம் ஏற்படக்கூடும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில், உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக் கும். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். கலைத் துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

தடைகள் நீங்கி ஏற்றம் பெறும் தருணம் இது.

ராசி பலன்கள்

கடகம்:

சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம், தைரியம் கூடும். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். தந்தையுடன் மனக்கசப்பு, அவருக்கு வேலைச்சுமை வந்து செல்லும்.

புதன் 8-ல் நிற்பதால் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். செவ்வாய் ஒரளவு சாதகமாக இருப்பதால், `கோபப்படாமல் இருக்க வேண்டுமென நினைத்தாலும் முடிவதில்லையே' என அலுத்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் நன்றி மறந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பு எதுவாயினும் தக்க வைத்துக்கொள்ளப் பாருங்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் நேரம் இது.

ராசி பலன்கள்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ஓரளவு சாதகமாக செல்வதால் அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் கணவன் - மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு கரையும். 6-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.

புதன் வலுவாக நிற்பதால் கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களுடன் விவாதங்கள் வந்து போகும். கலைத் துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

கன்னி:

சுக்கிரன் 5-ல் நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. விலையுயர்ந்த தங்க நகைகள் சேரும். 14-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால் உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, வாழ்க்கைத் துணைக்கு உடல் நலக்குறைவு ஆகியன வந்து போகும்.

5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். குருவும், 17-ம் தேதி வரை புதனும் 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

மனோபலத்தால் வெற்றிகள் குவிக்கும் நேரம் இது.

ராசி பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். 15 - ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரி களின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கலைத்துறையினர், விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவார்கள்.

சிந்தித்து சாதிக்க வேண்டிய காலம் இது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சுக்கிரன் 3-ல் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். வாழ்க் கைத் துணைவர் வழியில் நல்ல செய்தி உண்டு. 14-ம் தேதி வரை 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. 15-ம் தேதி முதல் அவர் 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் உடல் நிலை பாதிக்கும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் வலுவாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். சகோதரிக்கு இருந்த பிரச்னையைத் தீர்த்துவைப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்து கொள்வார்கள். கலைத் துறையினருக்குப் புகழ், கௌரவம் உயரும்.

சவால்களில் வெற்றி பெற்று சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

தனுசு

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் உங்கள் நிலையறிந்து உதவி செய்வார்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால், வெளிவட்டாரத்தில் நிதானமாகப் பேச வேண்டும். வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். வாடிக்கையாளர் களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும். கலைத்துறையினருக்குப் புகழ் சேரும்; பிரபலமாவார்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரம் இது.

ராசி பலன்கள்

மகரம்:

ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி களால் வீடு களை கட்டும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஓரு தளம் கட்டுவீர்கள். சூரியன் 15-ம் தேதி முதல் 3 - ல் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. உடல் நலம் சீராகும்.

ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் சேமிப்புகள் கரையும். தாயாருக்கு மருத்துவச் செலவு உண்டு. சகோதரரின் வருங்காலம் குறித்த கவலை வந்து நீங்கும். புதனும் குருவும் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

தன்னம்பிக்கையால் தலைநிமிரும் காலம் இது.

ராசி பலன்கள்

கும்பம்:

சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்கப் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். 15-ம் தேதி முதல் ராசியை விட்டு சூரியன் விலகுவதால், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் பணம் பலவழிகளில் வந்தாலும் பற்றாக்குறைதான் நீடிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.

புதன் சாதகமாக நிற்பதால் இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யுங்கள்; அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களிடையே சலசலப்பு வந்து நீங்கும். உத்தியோகத் தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காகப் போராடுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குச் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

சிரமங்களைத் தாண்டி தனித் திறமையால் முன்னேறும் நேரம் இது.

ராசி பலன்கள்

மீனம்:

செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். சுக்கிரன் 11-ல் நிற்பதால் பணவரவு திருப்தி தரும். 12- ல் மறைந்திருக்கும் சூரியன் 15-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் கடன் பிரச்னை, கண் வலி, கனவுத் தொல்லை வந்து செல்லும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத் தைச் செலவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெரிவீர்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.