Published:Updated:

ராசிபலன்

ராசிபலன் 
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் கே.பி.வித்யாதரன்

மே 3 முதல் 16-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

ராசிபலன்

மே 3 முதல் 16-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

Published:Updated:
ராசிபலன் 
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் கே.பி.வித்யாதரன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த, மே 3 முதல் 16-ம் தேதி வரையிலும் பன்னிரு ராசிகளுக்கான துல்லிய பலன்கள்!

ராசிபலன்
ராசிபலன்

மேஷம்:

லாப வீட்டில் அமர்ந்ததால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவன் - மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். 14-ம் தேதி வரை சூரியன் ராசிக்குள் தொடர்வதால் தொண்டை வலி, காது வலி, காரிய தாமதம் வந்து செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பெற்றோரின் உடல் நலம் பாதிக்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செலவதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

ரிஷபம்:

புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சுகாதிபதி சூரியன் 12-ல் மறைந்ததால் வீண் செலவு, அலைச்சல், வேலைச்சுமை வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு கட்டவோ, வாங்கவோ வங்கிக் கடன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

செவ்வாய் வலுவாக நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வீடு - மனை விற்பது, வாங்குவது சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் ஓடி ஓடி உழைத்தும் அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

கடின உழைப்பால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

மிதுனம்:

புதனும் 14-ம் தேதிவரை சூரியனும் லாப வீட்டில் அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

செவ்வாய் 9-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு. பாக்கிப் பணத்தைத் தந்து புது சொத்துக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிட்டும்.

மாறுபட்ட அணுகுமுறையால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

கடகம்:

சூரியன் 10-ல் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் பலவும் பிரபலங்களின் உதவியால் முடிவடையும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆபரணம் சேரும்.

8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் கணவன் - மனைவிக்குள் வாக்கு வாதம் வந்து விலகும். சகோதர வகையில் வீண் செலவுகள் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்; வீண் டென்ஷன் வந்து போகும். கலைத்துறையினருக்குப் பழைய சம்பளப் பிரச்னை தீரும்.

எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

சிம்மம்:

சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணம் உண்டாகும். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். புதன் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. உங்கள் யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். அந்நிய நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.செவ்வாய் 6-ல் நிற்பதால் புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் வரும்.

சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டிய காலம் இது.

ராசிபலன்

கன்னி:

ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால், தன்னம்பிக்கை துளிர் விடும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

உங்களின் யோகாதிபதி செவ்வாய் 7 - ல் அமர்ந்திருப்பதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் காலம் இது.

ராசிபலன்

துலாம்:

சூரியன் 7-ல் தொடர்வதால் வீண் சந்தேகம், குழப்பம், டென்ஷன் வந்து போகும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதன் சாதக மாக இருப்பதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6 - ல் மறைந்திருப்பதால் வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

செவ்வாய் 5-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில், புது முயற்சி வெற்றி அடையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத் துறையினர் குறித்து வதந்திகள் வரக்கூடும்; கவனம் தேவை.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

விருச்சிகம்:

சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வீடு வாங்குவதற்கும் கட்டுவதற்கும் லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் பண இழப்பு, மறைமுகப் பகை வரக்கூடும். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு வேலை கிடைக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பழி வந்து செல்லும். தலைமைக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர், நட்பால் மகிழ்ச்சி அடைவார்கள்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் நேரம் இது.

ராசிபலன்

தனுசு:

சூரியன் 5-ல் நிற்பதால் வீண் டென்ஷன், உறவினர் பகை, காரிய தாமதம் வந்து செல்லும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனைக்கேற்றவாறு சொத்து வாங்குவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

செவ்வாய் வலுவாக அமர்ந்ததால் புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்குப் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.

சாமர்த்தியத்தால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

மகரம்:

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீண் டென்ஷன் விலகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவர். தந்தை வழியில் ஆதாயம் அடைவீர்கள். சூரியன் 4-ல் நிற்பதால், புதுத் திட்டங்கள் நிறைவேறும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். 2-ல் செவ்வாய் இருப்பதால் கண் வலி வந்து போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில், உயரதிகாரி ஆதரவு தருவார். கலைத் துறையினர், படைப்புகளை வெளியிடுவதில் சிரமம் இருக்கும்.

வெற்றிக்கனியைத் தட்டிப்பறிக்கும் நேரம் இது.

ராசிபலன்

கும்பம்:

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பழைய மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத் தைச் சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேற்று மொழிக்காரார்களால் நிம்மதி அடைவீர்கள்.

ராசிக்குள் செவ்வாய் தொடர்வதால் ஓய்வே இல்லாமல் உழைக்க வேண்டி வரும். சலிப்பு, சோர்வு வந்து போகும். உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூறாதீர்கள். கலைத் துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

பொறுமை மற்றும் நிதானத்தால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

மீனம்:

புதன் 2-ல் நிற்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிட்டும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். புது சொத்து சேரும். 2-ல் சூரியன் அமர்ந்திருப்பதால் கண் எரிச்சல், நெஞ்சு வலி, படபடப்பு, வீண் அலைச்சல் வந்து போகும்.

செவ்வாய் 12 -ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், மனஇறுக்கம் வந்து போகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போராட்ட நிலை மாறும். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில், பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் சம்பளம் உயரும்.

பணப் புழக்கம் அதிகரிக்கும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism