Published:Updated:

ராசி பலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மே 17 முதல் 30-ம் தேதி வரை

ராசி பலன்

மே 17 முதல் 30-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணிப்பில் மே 17 முதல் 30-ம் தேதி வரையிலும் பன்னிரு ராசிகளுக்குமான துல்லிய பலன்கள்!

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்:

ராசிக்கு 12-ல் முக்கிய கிரகங்கள் மறைந்திருப்பதால், திட்டமிட்ட காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். உறவினர்கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெகுநாள்களுக்குப் பிறகு பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் உண்டு. புது வேலை அமையும்.

சூரியன் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் நிற்பதால் வீண் செலவு, அலைச்சல், டென்ஷன், பேச்சால் பிரச்னைகள் யாவும் வரக்கூடும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பங்குதாரர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களை யாரேனும் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர் பற்றிய வதந்திகள் வரக்கூடும்.

பேச்சைக் குறைத்து செயலில் தீவிரம் காட்ட வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

ரிஷபம்:

குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் மதிப்பு கூடும்.

செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பதவி, புகழ் தேடி வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால் ராசிக்குள் சூரியன் நிற்பதால் உஷ்ணத்தால் வயிற்று வலி, நெஞ்சு வலி வந்து போகும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உங்கள் நிறுவனம் சார்ந்து புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். நவீனரக பொருள்களை வாங்குவீர்கள். செவ்வாய் 10-ல் நிற்பதால் சொத்து சேரும். வழக்குகள் சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

12-ல் சூரியன் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அனுபவம் உள்ள நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். குரு 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்

கடகம்:

குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். பழைய நகையை மாற்றிவிட்டுப் புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தனாதிபதி சூரியன் 11-ம் வீட்டில் இருப்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக் கும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவார்கள்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

சிம்மம்:

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் இனி விரைந்து முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதரப் பகை, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வழக்கில் அவசரம் வேண்டாம். ராசிநாதன் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசியலில் செல்வாக்கு கூடும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்க்கப் புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி பெறும் நேரம் இது.

ராசி பலன்

கன்னி:

குரு பகவான் 7-ல் அமர்ந்ததால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கூடா பழக்கம் விலகும். தூரத்து உறவினர்களைச் சந்திப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் வழியில் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சூரியன் 9-ல் நிற்பதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். அரசுக் காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். கலைத்துறையினர் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவார்கள்.

உங்கள் வாழ்வு துளிர்க்கும் நேரம் இது.

ராசி பலன்

துலாம்:

செவ்வாய் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பண வரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். யோகா, தியானம் செய்வதால் நிம்மதி கிட்டும்.

6-ல் குரு, சுக்ரன் மறைந்திருப்பதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சூரியம் 8-ல் மறைந்ததால் திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள், தலைச்சுற்றல், கண் வலி வந்து போகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத் துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் வரக்கூடும்.

கோபத்தைக் குறைத்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலம் இது.

ராசி பலன்

விருச்சிகம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வர். செவ்வாய் 5 - ல் நிற்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். சூரியன் 7-ல் அமர்வதால் கண் எரிச்சல், கோபம், டென்ஷன் வந்து நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சுமுகமாகக் கையாளுவீர்கள்.

6-ல் நிற்கும் புதனால் பழைய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். குரு 5-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப் படுவார். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.

குருவருளால் முன்னேற்றம் காணும் நேரம் இது.

ராசி பலன்

தனுசு:

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். கௌரவப் பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. செவ்வாய் வலுவாக இருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். தாய்வழி உறவினர் களால் நன்மை உண்டு. குரு 4-ல் இருப்பதால் கடுமையாக உழைக்கவேண்டி வரும்.

சூரியன் 6-ல் மறைவதால் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர் கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறும் காலம் இது.

ராசி பலன்

மகரம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உற்சாகம் அடைவீர்கள்.

செவ்வாய் வலுவாக நிற்பதால் உடன்பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். சூரியன் ராசிக்கு 5-ல் நுழைவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சல், செலவு வரக்கூடும். முன்கோபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். கேது 10-ல் நுழைந் திருப்பதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும் நேரம் இது.

ராசி பலன்

கும்பம்:

குரு 2-ல் வலுவாக இருப்பதால், மனதில் தெளிவு பிறக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு கட்டும் பணி முழுமையடையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், சொந்தங்கள் உங்கள் அருமையை உணர்வார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சூரியன் 4-ல் அமர்வதால், குழப்பங்கள் தீர்ந்து தெளிவாக முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக முதலீடு செய்வீர்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப் படுவார்கள்.

அமைதியாக இருந்து சாதித்துக் காட்டும் நேரம் இது.

ராசி பலன்

மீனம்:

சூரியன் 3-ல் நிற்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஜன்ம குருவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்பு, காய்ச்சல், வீண் பழி வந்து செல்லும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறை யினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

திட்டமிட்ட செயல்பாடுகளால் சாதிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism