Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 12 முதல் 25-ம் தேதி வரை

ராசிபலன்

ஜூலை 12 முதல் 25-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த ஜூலை 12 முதல் 25-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

ராசிபலன்

மேஷம்:

புதன் 4-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். 16 - ம் தேதி முதல் சூரியன் 4 - ல் அமர்வதால் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். புது வேலை கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு வேற்றுமாநிலத்தில் வேலை அமையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

ராசிபலன்

சுக்கிரன் 3 - ல் நிற்பதால் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 12-ல் குரு நிற்பதால் செலவுகளும், அலைச்சல்களும் வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

தகுதி, கௌரவம் உயரும் காலம் இது!

ராசிபலன்

ரிஷபம்:

சூரியன் 16-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் கோபதாபம் குறையும். சாதுர்யமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய சொந்த பந்தங்கள் தேடி வரும். நட்பு வட்டம் விரியும்.

சுக்கிரன் 2-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிகாணும் நேரம் இது!

ராசிபலன்

மிதுனம்:

ராசிக்குள் உட்காந்து கொண்டு பல வேலைகளையும் முடிக்க முடியாமல் இழுத்த சூரியன் 16-ம் தேதி முதல் ராசியை விட்டு விலகுவதால் யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். மனஇறுக்கம் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ராசிநாதன் புதன் வலுவடைந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்து போகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

பக்குவமாகப் பேசி சாதிக்கும் காலம் இது!

ராசிபலன்

கடகம்:

ராசிக்குள்ளேயே புதன் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் 16-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் வேலைச்சுமை இருக்கும்.

சுக்கிரன் 12-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினர் கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் நேரம் இது!

ராசிபலன்

சிம்மம்:

சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். புதன் 12 - ல் மறைந்ததால் வழக்கில் வெற்றி உண்டு. சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள்.

16-ம் தேதி முதல் சூரியன் 12 - ல் மறைவதால் யாருக்காவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 8 - ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை, வீண் பழி, பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வெற்றிக்கனியைச் சுவைக்கும் நேரம் இது!

ராசிபலன்

கன்னி:

ங்கள் ராசிநாதன் புதன் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வீடு மாறுவீர்கள்.

சுக்கிரனும், குருவும் சாதகமாக இருப்பதால் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

வாழ்வில் முன்னேற்றப் பாதை புலப்படும் தருணம் இது!

ராசிபலன்

துலாம்:

பாக்கியாதிபதி புதன் கேந்திர பலம் பெற்று வலுவாக நிற்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உதவுவார்கள். புது வேலை அமையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். 16-ம் முதல் சூரியன் 10-ல் அமர்வதால் இழுபறி நிலை மாறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு வாங்குவது, கட்டுவதற்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால் வீண் சந்தேகம், மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் இரட்டிப்பு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பழைய பிரச்னைகள் தீரும் காலம் இது!

ராசிபலன்

விருச்சிகம்:

சுக்கிரன் 8 - ல் நிற்பதால் புதிய எண்ணங்கள் மனதில் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். புதன் வலுவாக இருப்பதால் புரோக்கரேஜ், கமிஷன் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள்.

சூரியன் 16-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால் தந்தைக்கு உடல்நலக் கோளாறுகள் வந்து விலகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து பேசுவார். கலைத்துறையினர் சம்பள பாக்கி கைக்கு வரும்.

வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கும் காலம் இது!

ராசிபலன்

தனுசு:

சூரியன் 16-ம் தேதி முதல் 8-ல் மறைவதால் முன்கோபம் விலகும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சுக்கிரன் 7-ல் நிற்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். எதிரிகளால் ஆதாயம் உண்டு.

8-ல் புதன் மறைந்திருப்பதால் இதமாகப் பேசி சாதிப்பீர்கள். 4-ம் வீட்டில் குரு நீடிப்பதால் விபத்து, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். கலைத்துறையினரின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

அனைவராலும் மதிக்கப்படும் காலம் இது!

ராசிபலன்

மகரம்:

புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிமனசில் இருந்த போராட்டம் நீங்கும். அலட்சியப் போக்கு மாறும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். செல்வாக்கு, புகழ் கூடும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.

16-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால் வாழ்க்கைத் துணைக்கு உடல் நலக்குறைவுகள் வரக்கூடும். குரு 3 - ல் நிற்பதால் மூச்சுப் பிடிப்பு, மூச்சுத் திணறல், வேலைச்சுமை வந்து போகும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைஞர்கள் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய நேரம் இது!

ராசிபலன்

கும்பம்:

16-ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால் தடைகள் நீங்கும். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நாடாளுபவர்களால் ஆதாயமடைவீர்கள். யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நிம்மதி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும்.

புதன் 6 - ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினரை உதாசினப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது!

ராசிபலன்

மீனம்:

4-ல் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகள் உதவுவார்கள். பழைய வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். சூரியன் 5-ல் நுழைவதால் பிள்ளைகளால் பிரச்னை, நிம்மதியின்மை, டென்ஷன் வந்து போகும். வழக்கில் நிதானம் அவசியம். 5-ல் புதன் நிற்பதால் மனைவிவழியில் செலவுகள், அலைச்சல் வந்து நீங்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும்.

ராசிக்குள் நிற்கும் குரு சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைக் கொஞ்சம் காட்டுவார். யாருமே உங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று புலம்புவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புகழடைவீர்கள்.

ஒசைப்படாமல் உச்சத்தைத் தொடும் காலம் இது!