Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை

ராசிபலன்

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் துல்லியமாக கணித்த - ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையிலுமான ராசிபலன்கள்.

ராசிபலன்

மேஷம்:

ங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

புதன் வலுவான வீடுகளில் நிற்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் வலுவாக இருப்பதால் பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. ராசிநாதன் ராசிக்குள் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத் தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

புது முயற்சிகளில் வெற்றி காணும் நேரம் இது!

ராசிபலன்

ரிஷபம்:

சூரியன் 3-ல் நிற்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். பூர்வ புண்ணியாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளை களிடம் இருந்த பிடிவாதம் விலகும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுர்யமாகப் பேசிப் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். குருபகவான் 11 - ல் நிற்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. இழுபறியாக இருந்த காரியம் முடியும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும் நேரம் இது!

ராசிபலன்

மிதுனம்:

செவ்வாயும் புதனும் சாதகமான வீடுகளில் நிற்பதால் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத் தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு, மனை வாங்கக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சூரியன் 2-ல் தொடர்வதால் நாவடக்கம் தேவை.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களை உரிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வாடிக்கை யாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவார்கள்.

தொட்டது துலங்கும் காலம் இது!

ராசிபலன்

கடகம்:

புதன் சாதகமாக இருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்க ளாவார்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் சில நேரங்களில் கண் எரிச்சல் அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிக்கு 12-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் ஓரளவு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு உண்டு.

குருபகவான் சாதகமாக இருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களாலும் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

விடாப்பிடியாகச் செயல்பட்டு விட்டதைப் பிடிக்கும் நேரம் இது

ராசிபலன்

சிம்மம்:

புதன் சாதகமாக இருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆனால் அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி, லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

வெற்றியாளர்களைச் சந்திக்கும் காலம் இது!

ராசிபலன்

கன்னி:

சூரியன் 11-ம் வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழியில் ஆதரவு பெருகும். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலை அமையும். பிரபல யோகாதிபதி சுக்கிரன் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சிலருக்குப் பதவிகள் தேடி வரும்.

குரு ராசியைப் பார்ப்பதால் தோற்றப்பொலிவு கூடும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். வேலையாட்கள் பிரச்னை ஓயும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது!

ராசிபலன்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல், செலவுகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள் எல்லாம் நீங்கும். அரைகுறை யாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். சூரியன் 10-ல் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர் உதவுவார். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலை அமை யும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத்துறையினரின் மதிப்பு, மரியாதை கூடும்.

போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் காலம் இது!

ராசிபலன்

விருச்சிகம்:

புதன் சாதகமான வீட்டில் நிற்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். தடைப்பட்ட சில காரியங்களை வி.ஐ.பிகளின் உதவியால் விரைந்து முடிப்பீர்கள். 9-ல் சூரியன் நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவு, அவருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். அக்கம்பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சுக்கிரன் 8-ல் மறைவதால் வாழ்க்கைத்துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். மாமனார், மாமியார் வகையில் ஆதரவு பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. ஷேர் வகைகளால் பணம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். குரு 5-ல் நிற்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் காலம் இது!

ராசிபலன்

தனுசு:

சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். புதன் வலுவாக இருப்பதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். சூரியன் 8-ல் நிற்பதால் அரசு வேலைகளை அலைச்சலுடன் முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.

கேது லாப வீட்டில் நிற்பதால் அனுபவ அறிவால் விட்டதைப் பிடிப்பீர் கள். கோயில் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். வேலை யாள்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் நேரம் இது!

ராசிபலன்

மகரம்:

புதன் வலுவடைந்து இருப்பதால், புதிய சிந்தனைகள் தோன்றும். தந்தை வழியிலிருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்னைகளும் வரக்கூடும்.

ராசிக்கு 7-ல் சூரியன் நிற்பதால் கொஞ்சம் படபடப்பு வரும். வாழ்க்கைத்துணைக்குச் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் வரக் கூடும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினருக்கு இருந்த கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் எல்லாம் நீங்கும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் காலம் இது!

ராசிபலன்

கும்பம்:

சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் இடர்ப்பாடுகள், சிக்கல்களை சமாளிக்கும் சக்தி உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். சுக்கிரனும், 29 - ம் தேதி முதல் புதனும் வலுவாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். தெய்விகச் சிந்தனை மனதை மலரவைக்கும்.

குருபகவான் அருளால் வீட்டில் விசேஷங்கள் நடந்தேறும். பாதியில் நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் வேளை இது!

ராசிபலன்

மீனம்:

புதன் 28-ம் தேதி வரை 5-ல் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 29-ம் தேதி முதல் புதன் சாதகமாக இல்லாததால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அண்டை வீட்டாருடன் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.

சூரியன் 5-ல் நிற்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். பெண்களுக்குச் சுப காரியங்கள் ஏற்பாடாகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

விருப்பங்கள் நிறைவேறும் காலம் இது!