திருத்தலங்கள்
Published:Updated:

ராசி பலன்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பி.வித்யாதரன்

ஆகஸ்ட் 9 முதல் 22-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த... ஆகஸ்ட் 9 முதல் 22-ம் தேதி வரையிலான துல்லியமான ராசிபலன்கள்!

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்: சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், உங்களின் செல்வாக்கு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம் கூடி வரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும்.

17-ம் தேதி பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சி பெறுவதால் பிள்ளை களால் மகிழ்ச்சியுண்டு. மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். குரு பகவான் சஞ்சார நிலையால், எதிர்பாராத செலவுகள் வரக் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில், உயரதிகாரி பாராட்டும்படி செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வரும்.

யதார்த்தமான பேச்சால் காரியம் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

ரிஷபம்: சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாருக்கு இருந்துவந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வெடிக்கும். இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வங்கியில் லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாள்கள் கொஞ்சம் முரண்டுபிடிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். பழைய சம்பளபாக்கி கைக்கு வரும்.

சிந்தனைத் திறனால் சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்: ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தாரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் கசப்பு உணர்வு விலகும். சொந்த பந்தங்களால் வீடு களைகட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருக்கிறார். தடைப்பட்ட காரியங்களைப் பிரபலங்களின் உதவியால் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும்.

2-ல் நிற்கும் சூரியனால் கண் வலி, முன்கோபம், பேச்சால் பிரச்னை வரக்கூடும். 17-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால் தடைப்பட்ட பணிகளை முடிக்க மாற்றுவழி கிடைக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத் துடன் காணப்படுவர். வியாபாரத்தில் வி.ஐ.பிகளின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் தங்குதடையின்றிப் பணிகளை முடிப்பீர்கள். கலைஞர் களின் ஆசைகள் பூர்த்தியாகும். சம்பளபாக்கி கைக்கு வரும்.

பழைய பிரச்னைக்குத் தீர்வு காணும் தருணம் இது.

ராசி பலன்

கடகம்:செவ்வாய் வலுவாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ராசிக்கு 9-ம் வீட்டில் குரு தொடர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்களை அரசு அதிகாரிகளின் துணை யுடன் முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் காரியங்கள் தடையின்றி முடியும்.

சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். உத்தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவ தால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். கலைத் துறை யினரின் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் நேரம் இது.

ராசி பலன்

சிம்மம்:சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய நகையை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 17-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று அமர்வதால் கௌரவம், புகழ் கூடும். கன்னிப்பெண்கள் சிந்தித்துச் செயல்படவும்.

8-ல் நிற்கும் குருவால் வீண்பழி, கெட்டபெயர் வரும். பிரபலங்களிடம் பகைமை ஏற்படும். வாகனம் செலவு வைக்கும். மனநிறைவுக்காக ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளைப் பக்குவமாக வசூலியுங்கள். வேலையாட்களின் தொந்தரவு ஒருபுறம் இருந் தாலும் மறுபுறம் ஆறுதலாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுகப் போட்டிகள் வரத்தான் செய்யும். மேலதிகாரியின் குறைநிறைகளை விமர்சித்துப் பேசவேண்டாம். கலைத்துறையினரைப் பற்றிய கிசுகிசுக்கள் வந்துபோகும். சம்பள விஷயத்தில் கறாராக இருக்காதீர்கள்.

பொறுமையாக இருந்து சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

கன்னி:சுக்கிரனும் ராசிநாதன் புதனும் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். புதுத் தெம்பு பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. 16-ம் தேதிவரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். 17-ம் தேதி முதல் 12-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வ தால் திடீர் பயணங்கள் உண்டு.

குருபகவான் 7-ம் வீட்டில் தொடர்வதால் குடும்பத்தில் ஓரளவு அமைதி உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். மேலதிகாரியுடனான மனக்கசப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்பட்டாலும் வருமானம் இருக்காது.

வாக்கு சாதுர்யத்தால் சாதிக்க வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

துலாம்:சூரியன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் எதிர்பார்த்த வகை யில் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுப் பொறுப்புகள் தேடி வரும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். காணாமல் போன சொத்து ஆவணங்கள் கிடைக்கும்.

புதன் 11-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் புத்திசாலித்தனத்துடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குருவால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்தியோகத்தில் வீண் டென்ஷன் அதிகரிக்கும்; பணிகளில் இழுபறி உண்டு. கலைத்துறையினருக்குச் சின்னச் சின்ன அவமானங்கள் வந்து நீங்கும்.

அலைச்சலோடு காரியம் சாதிக்கவேண்டிய காலம் இது.

ராசி பலன்

விருச்சிகம்: சூரியன் 17-ம் தேதி முதல் 10-ல் ஆட்சிபெற்று அமர்வதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படும். மகனின் கல்வி சம்பந்தமாக முக்கிய பிரபலங்களிடம் சிபாரிசு கேட்பீர்கள். கன்னிப்பெண்களுக்கு மனப் போராட்டம் ஓயும்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் பணவரவு திருப்தி தரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் கைகூடி வரும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். உத்தியோகத்தில் தடுமாற்றம் நீங்கும். உயரதிகாரி உங்களின் திறமை யைப் பாராட்டுவார். பதவி உயரும். வேறு சில வாய்ப்புகளும் கிடைக்கும். கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு உண்டு.

தடைகளைத் தகர்த்து முன்னேறும் நேரம் இது.

ராசி பலன்

தனுசு: ராசிக்கு 9-ம் வீட்டில் புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்களின் சந்திப்பால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். சூரியனால் வீண் செலவுகள், மன உளைச்சல் வரக்கூடும். ஆனால் 17 - ம் தேதி முதல் சூரியன் 9 - ல் ஆட்சிப்பெற்று அமர்வதால், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வராது என்றிருந்த பணம் வரும். மின்னணுப் பொருள்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் வருகையால் கொள்முதல் அதிகம் போடுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்; உயரதிகாரி பாராட்டுவார். சம்பளப் பிரச்னை தீரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரம் இது.

ராசி பலன்

மகரம்: புதன் 8-ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தடைகள் விலகும். நெடுநாள் திட்டங்களை இப்போது செய்து முடிப்பீர்கள். 3-ல் குரு சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். வருங்காலம் பற்றிய கற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

சூரியன் சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு கள் வரக்கூடும். மருத்துவச் செலவுகளால் சேமிப்பு கரையும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பலனடைவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு மாறும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விடுப்பு காரணமாக வேலைப்பளு கூடும். மேலதிகாரி உங்களின் செயலை உற்று நோக்குவார். கலைஞர்களைப் பழைய நிறுவனம் அழைத்துப் பேசும்.

கனிவான பேச்சால் காரியம் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

கும்பம்: குரு 2-ல் தொடர்வதால் ஒளிந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு.

7 - ல் புதன் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. 17-ம் தேதி முதல் சூரியன் ராசியைப் பார்ப்பதால் மன உளைச்சல் வரக்கூடும்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித் துப் போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்களை நினைத்து வருந்தாமல் கடமையைச் செய்யுங்கள். மேலதிகாரி உங்கள்மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பார். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

தடுமாற்றம் நீங்கி சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

மீனம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர் கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால் பண வரவு சீராக இருக்கும். எதிர்ப்புகள் குறையும். சொத்து விவகாரங்களைப் பேசித் தீர்க்கப் பாருங்கள். புதனும், குருவும் சரியில்லாததால் வீண் பழி, டென்ஷன், வேலைச்சுமை, உடல் வலி வந்து போகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எனினும் பெரிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை முடிக்க அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களைக் குறைகூறிக் கொண்டு இருக்காதீர்கள். கலைத்துறையினருக்குச் சின்னச் சின்னத் தடைகள் வந்தாலும் வெற்றியுண்டு.

அனுபவ அறிவால் வெற்றி காண வேண்டிய நேரம் இது.