Published:Updated:

ராசி பலன்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை

ராசி பலன்

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரையிலும் பன்னிரு ராசிகளுக்குமான துல்லிய பலன்கள்

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்: பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பழுதடைந்த குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் நிற்பதால் பழைய வீட்டை இடித்துப் புது வீடு கட்டுவீர்கள். புறநகர்ப் பகுதியில் புது வீடு, மனை வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ஆனால் வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

28-ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவற்றைச் சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தொட்டது துலங்கும் நேரம் இது.

ராசி பலன்

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். புதனும் சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.

சுகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது தொடர்பான அரசாங்க அனுமதி கிடைப்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

அளவோடு பேசி செயலில் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

மிதுனம்: உங்களின் தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

உங்கள் ராசிநாதன் புதனும், சுக்கிரனும், சாதகமாக அமர்ந்திருப்பதால் உயர்கல்வி, போட்டித் தேர்வு, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களைக் கலந்தாலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

கடகம் : சுக்கிரன் வலுவாக நிற்பதால் செயலில் வேகம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் ஈகோ விலகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புது வேலை கிடைக்கும். தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் தொட்டது துலங்கும். பேச்சிலே தெளிவு பிறக்கும்.

புதன் சாதகமாக அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கலைத்துறையினருக்குத் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்

சிம்மம்: ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அழகு, இளமைக் கூடும். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். புதனும் வலுவாக நிற்பதால் நகைச்சுவையாகப் பேசுவீர்கள். நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். பணம் வரும். ஆரோக்கியம் கூடும்.

சுக்கிரன் சாதகமாக நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும் நேரம் இது.

ராசி பலன்

கன்னி: புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். சொந்த- பந்தங்கள் தேடி வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க முயல்வீர்கள்.

சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தூக்கமின்மை வந்து போகும். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசி பலன்

துலாம்: ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். கலைப் பொருள்கள் வாங்குவீர்கள். கல்யாணம் கூடி வரும். புதன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளால் நன்மை உண்டாகும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

விருச்சிகம்: சுக்கிரன் வலுவாக நிற்பதால் வேலைச்சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். முகம் மலரும். தெளிவடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். புதன் 10-ம் வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

சூரியன் ஆட்சி பெற்று பலமாக நிற்பதால் நிர்வாகத் திறமைக் கூடும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் சில நேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் காலம் இது.

ராசி பலன்

தனுசு: சூரியனும் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் கடினமான, சவாலான வேலைகளையும் உடனே முடிப்பீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு இருக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும்.

புதன் சாதகமாக நிற்பதால் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு திடீர் வெளிநாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் காலம் இது.

ராசி பலன்

மகரம்: உங்கள் ராசியை 1 - ம் தேதிவரை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். பணவரவு திருப்தி தரும். ஆனால் வாழ்க்கைத் துணை கொஞ்சம் அலுத்து, சலித்துக் கொள்வார். அவருடன் கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் பேசுவது நல்லது.

புதன் சாதகமாக நிற்பதால் திடீர் பயணங்களால் திருப்பம் உண்டாகும். 8-ல் சூரியன் மறைந்திருப்பதால் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறியும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் போட்டிகள் அதிகரிக்கும்.

அமைதியாகச் செயல்பட்டு வெற்றி பெறும் நேரம் இது.

ராசி பலன்

கும்பம்: புதன் வலுவாக இருப்பதால் தந்தைவழியிலிருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தை ஆதரிப்பார். 1-ம் தேதிவரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் முன்பு ஆதரவாகப் பேசியவர்களெல்லாம் உங்களைக் கண்டு ஒதுங்குவார்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சூரியன் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குடும்பத்திலிருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் சுமாராகத் தான் இருக்கும். வேலையாட்களால் விரயம் வரும். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரை உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

கறாராகப் பேசி சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

மீனம்: சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு, புகழ் கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 1-ம் தேதிவரை சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

28-ம் தேதி முதல் 6-ல் புதன் இருப்பதால் பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன விமர்சனங்கள் வரக்கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் நேரம் இது.