Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

செப்டம்பர் 6 முதல் 19-ம் தேதி வரை

ராசிபலன்!

செப்டம்பர் 6 முதல் 19-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த செப்டம்பர் 6 முதல் 19-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

ராசிபலன்!

மேஷம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மதிப்பார்கள். சூரியன் 17-ம் தேதிவரை ஆட்சிபெற்று நிற்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ராசிபலன்!

புதன் 5-ல் தொடர்வதால் பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால் முன்கோபம், பேச்சில் தடுமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விடுமுறைக் காரணங்களால் வேலைப்பளு கூடும். மேலதிகாரி உங்களின் செயலை உற்றுநோக்குவார். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.

ராசிபலன்!

ரிஷபம்: புதனும், சூரியனும் வலுவடைந்திருப்பதால் அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் வேலைச்சுமை, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும்.

செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிப் பின் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

பேச்சைக்குறைத்து வெற்றியைக் குவிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

மிதுனம்: ராசிநாதன் புதன் சூரியனுடன் நிற்பதால் தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாங்குவது கட்டுவது சாதகமாகும். வாகனம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும்.

செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் கால் வலி, கழுத்து வலி குறையும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கலைத்துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்!

கடகம்: செவ்வாய் லாப வீட்டில் தொடர்வதால் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் அயல்நாட்டு செல்லும் வாய்ப்பு வரும். சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புதன் வலுவாக இருப்பதால் கமிஷன், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப்பொருள்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் காலம் இது.

ராசிபலன்!

சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் 17 - ம் தேதிவரை ஆட்சி பெற்று நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதை கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

10-ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கப் புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விவாதம், போட்டிகளில் வெற்றி பெறும் நேரம் இது!

ராசிபலன்!

கன்னி: ராசிநாதன் புதன் 12-ல் நிற்பதால் வேலைச்சுமை, மனக்குழப்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சுக்கிரனால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு மாறுவது, 17-ம் தேதி வரை சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை வந்து விலகும். சுக்கிரன் சாதகமாக நிற்பதால் வீடு, மனை வாங்க லோன் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

செவ்வாய் 9-ல் அமர்வதால் மனஇறுக்கம் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். கலைஞர்கள் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

அதிரடி செயல்பாடுகளால் முன்னேறும் காலம் இது!

ராசிபலன்!

துலாம்: புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ராசிநாதன் சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் தடைப்பட்ட கல்யாணம் முடியும். வாகனம் வாங்குவது நல்ல விதத்தில் முடியும்.

சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். செவ்வாய் 8-ல் மறைவதால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும், ஏமாற்றங்களும் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் காலம் இது.

ராசிபலன்!

விருச்சிகம்: செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். விரும்பிய பொருள்களை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் இருந்து வரும் மோதல்கள் விலகும்.

உங்கள் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் தைரியம் பிறக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். புதன் சாதகமாக இருப்பதால் தூரத்து சொந்தங்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்மறை எண்ணம் விலகி முன்னேறும் காலம் இது.

ராசிபலன்!

தனுசு: செவ்வாய் பகவான் 6-ல் அமர்வதால் திடீர் வெற்றி கிட்டும். தள்ளிப் போன வழக்கில் திருப்பம் உண்டாகும். புதன் 9-ல் வலுவாக நிற்பதால் புதிய முயற்சிகள் நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் செல்வாக்கு உயரும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு மாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வரும். கலைத்துறையினர் குறித்த வதந்திகள் வரக்கூடும்.

செல்வாக்கு, கௌரவம் ஒருபடி உயரும் நேரம் இது.

ராசிபலன்!

மகரம்: புதன் 8-ல் மறைந்திருந்தாலும் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு எதிர்பார்த்த வகையில் உண்டு. மகளுக்குத் திருமணம் கூடி வரும். சுக்கிரன் கொஞ்சம் வலுவிழந்திருப்பதால் செலவுகள் துரத்தும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும்.

சூரியன் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் உள்ள போராட்டங்கள் மற்றவர்களுக்குப் புரியவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர், படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

காரியத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறவேண்டிய காலம் இது.

ராசிபலன்!

கும்பம்: சூரியனும், புதனும் 7-ல் நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். புது வேலை அமையும். சிலர் வேறு ஊர் மாறுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணவரவு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

செவ்வாய் 4 - ம் வீட்டில் கேந்திர பலம் பெற்றிருப்பதால் சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய காலம் இது.

ராசிபலன்!

மீனம்: சூரியன் 6-ல் நிற்பதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்களுடன் மனஸ்தாபம்,வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் பணப்பற்றாக் குறை, வாகனச் செலவுகள், எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும்.

செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அடிப்படை வசதிகள் உயரும் தருணம் இது.