Published:Updated:

ராசிபலன்!

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை

ராசிபலன்!

செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை

Published:Updated:
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த... செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரையிலும் பன்னிரு ராசிகளுக்குமான துல்லிய பலன்கள்!

ராசிபலன்!

மேஷம்: சூரியன் 6-ல் நுழைந்திருப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புது வேலை அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதன் 5-ம் வீட்டில் இருப்பதால் உங்கள் ரசனை மாறும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.

ராசிபலன்!

சுக்கிரன் 25 - ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து அமையும். ஆடை, ஆபரணம் சேரும். 2-ல் செவ்வாய் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பற்றிய வதந்திகள் வரும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெற வேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

ரிஷபம்: சூரியன் 5-ல் நிற்பதால் முன்கோபம் வரும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். புதன் சாதகமாக இருப்பதால் புகழ், கௌரவம் உயரும். அழகு, இளமை கூடும். பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தவறானவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

மிதுனம்: சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாய்வழியில் ஆதரவு பெருகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். செவ்வாய் 12-ல் நிற்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும்.

குருபகவான் 10 - ல் அமர்ந்திருப்பதால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தள்ளிப் போகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினரின் திறன் வளரும்.

தொட்டது துலங்கும் காலம் இது.

ராசிபலன்!

கடகம்: சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வராது என்றிருந்த பணம் வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். புதனும், சுக்கிரனும் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும். மனஇறுக்கம் நீங்கும்.

செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

திடீர் முடிவுகளால் புகழடையும் நேரம் இது.

ராசிபலன்!

சிம்மம்: சுக்கிரன் வலுவாக நிற்பதால் வாகனப் பழுது சரியாகும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். புதனும் வலுவாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, அறிவு கூடும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். செவ்வாய் 10-ல் நிற்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நிர்வாகத் திறன் கூடும்.

2 - ல் சூரியன் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. உங்களால் குடும்பத்தில் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்!

கன்னி: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதன் 12-ல் நிற்பதால் பழைய சொந்தங்கள் தேடி வரும். பூர்வீக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்து போகும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

செவ்வாய் 9-ல் நிற்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். புதிய சொத்துக்குப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும்.

பலவீனத்தைச் சரி செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

துலாம்: லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பாராத வெற்றி கிட்டும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

விருச்சிகம்: புதன் சாதகமாக நிற்பதால் வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மை உண்டு. திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வாகனம் வாங்குவீர்கள். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும்.

7-ல் செவ்வாய் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மேலதிகாரியின் தவற்றைச் சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்!

தனுசு: சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். பணத்தட்டுப்பாடு குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம் நீங்கும். சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. தந்தை உங்களை ஆதரிப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

6-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வீண் டென்ஷன் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி புகழ்வார். எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது வரும். கலைத்துறையினரை உதாசீனப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

ஆளுமைத் திறன் அதிகரிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

மகரம்: புதனும், சுக்கிரனும் சாதகமாக நிற்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வாழ்க்கைத்துணைக்கு அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்துபோகும். புதியவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும்.

செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் பிரச்னை, செலவுகள் வந்து போகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

நெருக்கடிகளிலிருந்து விடுபடும் காலம் இது.

ராசிபலன்!

கும்பம்: சூரியன் 8-ல் நிற்பதால் சோர்வாகக் காணப்படுவீர்கள். சில நேரங்களில் கடுமையாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். முன்பு போல நீங்கள் இல்லையென்றும், அடிக்கடி நீங்கள் கோபப்படுவதாகவும் சிலர் உங்களை விமர்சித்துப் பேசுவார்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல் நலம் சீராகும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஓரளவு பணம் வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். எனினும் விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினர் பற்றிய வதந்திகள் வரும்.

அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும் காலம் இது.

ராசிபலன்!

மீனம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்களுடன் மனஸ்தாபம்,வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் பணப்பற்றாக் குறை, வாகனச் செலவுகள், எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும்.

செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அடிப்படை வசதிகள் உயரும் தருணம் இது.