ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பி.வித்யாதரன்

நவம்பர் 29 முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த நவம்பர் 29 முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை - பன்னிரு ராசிகளுக்குமான துல்லிய பலன்கள்.

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்: புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். சூரியன் 8-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சுக்கிரன் ஓரளவு சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

குரு 12 - ல் மறைந்து நிற்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள்.

ஆழம் அறிந்து நிதானித்து முன்னேற வேண்டிய காலம் இது.

ராசி பலன்

ரிஷபம்: குரு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள், பிரபலமானவர்களின் நட்பு கிடைத்து அதில் ஆதாயமும் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் சவாலான காரியங்களைக் கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். புதன் 8 - ல் நிற்பதால் பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

சூரியன் 7- ல் அமர்வதால் கொஞ்சம் கோபப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். புத்துணர்ச்சியுடன் போராடி வெல்லும் நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்: 6-ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 7-ம் தேதிவரை சுக்கிரன் 6 - ல் மறைந்து கிடப்பதால் கழுத்து வலி வரக்கூடும். சைனஸ் தொந்தரவுகள் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்வது நல்லது. 10-ல் குரு நீடிப்பதால் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சூழச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மனநிறைவுடன் செயல்படும் நேரம் இது.

ராசி பலன்

கடகம்: குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சொந்த - பந்தங்கள் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். 7-ம் தேதிவரை சுக்கிரன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புது வீட்டிற்கு மாறுவீர்கள். புதன் 6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமை, ஆரோக்கியக் கோளாறுகள் வந்து செல்லும். உறவினர், அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். சில நேரங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கர்ப்பிணிகள் பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் சம்பள பாக்கி கைக்கு வரும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

அலைச்சலும் அதற்கான பலனும் கிடைக்கும் நேரம் இது.

ராசி பலன்

சிம்மம்: சுக்கிரன் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழி சொத்து கிட்டும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். குரு மறைந்திருப்பதால் ஒருவிதப் படபடப்பு வந்து போகும். சேமிப்புகள் கரையும். சூரியன் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள்.

மெல்ல மெல்ல முன்னேறும் காலம் இது.

ராசி பலன்

கன்னி: சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆட்சியாளர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். சுக்கிரனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் நீங்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு 7-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் வெற்றியடையும். நல்ல செய்திகள் வரும். புதன் 4-ல் நிற்பதால் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். பழைய சொத்தை விற்க வேண்டி வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் குறைகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

சிந்தித்து செயல்படும் நேரம் இது.

ராசி பலன்

துலாம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக நிற்பதால் இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்த பணத்தையும் நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வீடு அமையும். குருபகவான் 6-ல் மறைந்திருந்தாலும் ஓரளவு பணம் வரும் என்றாலும் அங்கும் இங்குமாகக் கைமாற்றாகவும் வாங்க வேண்டியிருக்கும்.

3-ல் புதன் மறைந்து நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

புதிய பயணத்தைத் திட்டமிடும் காலம் இது.

ராசி பலன்

விருச்சிகம்: குருபகவான் 5 -ம் வீட்டிலேயே தொடர்வதால் பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து செல்லும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

நினைத்திருந்த காரியங்களைச் செயல்படுத்தும் நேரம் இது.

ராசி பலன்

தனுசு: சுக்கிரன் சாதகமாக நிற்பதால் அத்தியாவசியச் செலவுகளே அதிகமாகும். உறவினர் வீட்டு திருமணம், காது குத்து நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு நல்ல விதத்தில் முடியும். 4-ல் நிற்கும் குருவால் அவ்வப்போது சோர்ந்து போவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையும். வருங்காலத்தை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள்.

சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன், செலவுகள் வந்து போகும். புதன் ராசிக்குள்ளேயே நிற்பதால் மனநிம்மதி, மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

எதிர்பார்ப்புகளின்றி உழைத்து நற்பெயர் பெறும் காலம் இது.

ராசி பலன்

மகரம்: சுக்கிரன் வலுவான வீடுகளில் நிற்பதால் பணம் எதிர்பார்த்த வகையில் வரும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளை உற்சாகப்படுத்தக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மூத்த சகோதரர்கள் மதிப்பார்கள். குரு 3-ல் தொடர்வதால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். பூர்வீகச் சொத்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட லாபம் அதிகரிக்கும். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குப் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

சோர்ந்திருந்த முகத்தில் புன்னகை மலரும் காலம் இது.

ராசி பலன்

கும்பம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் நிற்பதால் புது வேலை அமையும். திடீர் பயணங்கள் உண்டு. விரும்பியப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். 2-ல் குரு இருப்பதால் கனிவாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் அமையும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள்.

சூரியன் 10-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதனும் வலுவாக நிற்பதால் நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

திறமையால் சாதித்துக்காட்டும் தருணம் இது.

ராசி பலன்

மீனம்: சூரியன் 9-ல் நிற்பதால் பழைய கடன் தீர்க்க வழி பிறக்கும். ஆனால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள் சுக்கிரனும் சாதகமாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளுக்கு வேலை கிடைக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

ஜன்ம குருவால் அவ்வப்போது குழப்பம், தாழ்வுமனப்பான்மை ஏற்படும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

அனுபவ அறிவால் சவால்களை சமாளித்து சாதிக்கும் நேரம் இது.