தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பி.வித்யாதரன்

டிசம்பர் 27 முதல் ஜனவரி 9-ம் தேதி வரை

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணிப்பில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 9-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்: சூரியன் 9-ல் அமர்ந்திருப்பதால் தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அவருடன் மனஸ்தாபம் வந்து போகும். பிள்ளைகளால் சின்னச் சின்ன செலவுகள் ஒரு பக்கம் இருந்து கொண்டேயிருக்கும். சேமிப்புகளும் கரையும். ஆனால் புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

செவ்வாய் 2 - ல் நிற்பதால் குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களால் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் நேரம் இது.

ராசி பலன்

ரிஷபம்: புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நட்பு வட்டம் விரியும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் எப்போதும் ஒரு படபடப்புடன் காணப்படுவீர்கள்.

8-ல் சூரியனும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். நெஞ்சு எரிச்சல், சொத்துப் பிரச்னை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினருக்கு உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும்.

சமூகத்தில் பாராட்டுகளைப் பெறும் நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்: சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். மனஇறுக்கங்கள் நீங்கும். நட்பு வட்டம் விரியும். காது வலி, முதுகு வலியிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, இளமை திரும்பும். சூரியன் 7-ல் நுழைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தூக்கமின்மை, இளைய சகோதர வகையில் பகை வரக்கூடும். கன்னிப்பெண்கள் பெற்றோரைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது.

12-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் அலைச்சல்களும், செலவீனங்களும் வந்து போகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பிச் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

நினைத்ததை முடித்துக் காட்டும் காலம் இது.

ராசி பலன்

கடகம்: சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்ததால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. வேலை அமையும். ஆனால் சுக்கிரனும், புதனும் சாதகமாக இல்லாததால் உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம் இது.

ராசி பலன்

சிம்மம்: சூரியன் 5-ல் நுழைந்ததால் பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பதவிகள் தேடி வரும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

செவ்வாய் 10 - ல் வலுவாக இருப்பதால் செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர் தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய காலம் இது.

ராசி பலன்

கன்னி: சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளை சமயோஜிதமாக சமாளிப்பீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

செவ்வாய் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரை உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

புதிய பாதை தெரியம் நேரம் இது.

ராசி பலன்

துலாம்: சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகமும் 3-ம் வீட்டில் அமர்ந்ததால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினர், நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

செவ்வாய் 8-ல் நிற்பதால் பணஇழப்புகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள், தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி கிடைக்கும்.

புதிய பொறுப்புகள் தேடி வரும் காலம் இது.

ராசி பலன்

விருச்சிகம்: சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. புதனும் சாதகமாக இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சோர்வு, கண் வலி, தொண்டை வலி நீங்கும்.

சூரியன் ராசியிலிருந்து விலகி 2-ல் அமர்வதால் குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் 7-ல் சாதகமாக இருப்பதால் சகோதரர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நாவடக்கம் தேவைப்படும் நேரம் இது.

ராசி பலன்

தனுசு: சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் ராசிக்குள் நுழைந்ததால் சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

செவ்வாய் பகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

சேமிப்பை அதிகப்படுத்தும் நேரம் இது.

ராசி பலன்

மகரம்: சுக்கிரனும், புதனும் ஓரளவு வலுவான வீடுகளில் அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். நிம்மதி கிடைக்கும். நீண்டநாள்களாகத் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேற்று மதத்தவர்களின் ஆதரவுக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.

சூரியன் 12-ல் மறைந்ததால் கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவீர்கள்.

தடைப்பட்ட வேலைகள் முடியும் நேரம் இது.

ராசி பலன்

கும்பம்: சூரியனும், புதனும், சுக்கிரனும் மூன்று கிரகங்களும் லாப வீட்டில் அமர்ந்ததால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

செவ்வாய் 4-ல் நிற்பதால் பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்கள் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். நியாயத்தைப் பேசப்போய் பெயர் கெடும். கலைத்துறையினர் எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.

தைரியமாக முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணம் இது.

ராசி பலன்

மீனம்: சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். சூரியனும், புதனும் 10-ம் வீட்டில் அமர்ந்ததால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் குறையும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

3-ம் வீட்டில் செவ்வாய் பலமாக இருப்பதால் பிரபலங்களின் சந்திப்பு நிகழும். சகோதரர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் கடனையுணர்வுடன் செயல்படுவார்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

வெற்றிக்கனியை சுவைக்கும் நேரம் இது.