Published:Updated:

ராசி பலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஆகஸ்ட் 10 முதல் 23-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 10 முதல் 23-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்
மேஷம்
மேஷம்

மேஷம்

புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், புது வழியில் சில முயற்சிகள் செய்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீட்டில் அமைதி நிலவும். 17-ம் தேதி முதல் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சி பெறுவதால், பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

12-ம் தேதி முதல் 6-ல் சுக்கிரன் நிற்பதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, சகோதர வகைச் சிக்கல்கள் வரக்கூடும். மனைவியின் உடல்நலனில் அக்கறை தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு. எனினும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். உயரதிகாரி பாராட்டும்படியாக சில விஷயங்களை இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வரும்.

யதார்த்தமான பேச்சால் காரியம் சாதிக்கும் காலம் இது.

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்:

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாரின் தேக நலன் மேம்படும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகன்- மகளுக்கான கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். சுக்கிரன் வலுவாக இருப்பதால், கற்பனைத்திறன் அதிகரிக்கும். பால்ய சிநேகிதர்களின் சந்திப்பு நிகழும். ராகு, கேது சரியில்லாததால் முன்கோபம், வீண் அலைச்சல் வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

சிந்தனைத் திறனால் சாதிக்கும் நேரம் இது.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்!

ராசி நாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தாரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் கசப்பு உணர்வு விலகும். ஆடம்பரச் செலவுகள் குறையும்.

சுக்கிரன், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்கவைப்பார். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். 2-ல் நிற்கும் சூரியனால் கண் வலி, முன்கோபம், பேச்சால் பிரச்னை வரக்கூடும். 17-ம் தேதி முதல் சூரியன் 3 - ல் நுழைவதால் தடைப்பட்ட பணிகளை முடிக்க மாற்று வழி கிடைக்கும். 9-ல் குரு நிற்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் வி.ஐ.பிகளின் சந்திப்பும் ஆதாயமும் கிட்டும். உத்தியோகத்தில், தங்கு தடையின்றி பணிகளை முடிப்பீர்கள். கலைத்துறையினரின் ஆசைகள் பூர்த்தியாகும்.

பழைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் தருணம் இது.

கடகம்
கடகம்

கடகம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

சூரியன் 17-ம் தேதி முதல் ராசியை விட்டு விலகி, சொந்த வீட்டில் அமர்வதால் உடல் நலம் சீராகும். தள்ளிப்போன காரியங்கள் முடியும். லாப வீட்டில் ராகு நிற்பதால் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்க மாக இருந்தாலும், உடன்பணிபுரிவோர் குறை கூறவே செய்வார்கள். கலைத்துறையினர் பிரச்னைகளை மீறி சாதிப்பார்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நேரம் இது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்

ராசிக்குள் நிற்கும் புதனால் இதமான பேச்சு, மாறுபட்ட அணுகுமுறை யால் வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியங்களை முடித்துவிட வேண்டும் எனும் வைராக்கியம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி உண்டு. மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 17-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று அமர்வதால் கௌரவம், புகழ் கூடும். பெண்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 7-ல் குரு நிற்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் பாக்கிகளைப் பக்குவமாக வசூலியுங்கள். உத்தியோகத்தில் மறைமுகப் போட்டிகள் உண்டு. கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கண்டிப்பு காட்டவேண்டாம்.

பொறுமையால் சாதிக்க வேண்டிய நேரம் இது.

கன்னி
கன்னி

கன்னி

ராசிநாதன் புதன் சாதகமாக நிற்பதால் எதிலும் வெற்றி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும்.

16-ம் தேதி வரை சூரியன் 11-ல் இருப்பதால், வழக்கு சாதகமாகும். 17-ம் தேதி முதல் அவர் 12-ல் மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கேது வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த் தியம் பிறக்கும். வெளிநாட்டுப் பயணம் சாதகமாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபம் அடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

சாமர்த்தியமான செயல்பாடுகளால் சாதிக்கும் நேரம் இது.

துலாம்
துலாம்

துலாம்:

சூரியன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

புதன் 11-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் புத்திசாலித்தனத்துடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். விரய வீடான 12-ல் சுக்கிரன் நிற்பதால் ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள் வரக் கூடும். எவரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். 5-ல் குரு நிற்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். கடன் கொடுக்காதீர்கள். நம்பிக்கைக்கு உரியவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் டென்ஷன் அதிகரிக்கும். பணிகளில் இழுபறி நிலை ஏற்படும். கலைத் துறையினருக்குச் சின்னச் சின்ன அவமானங்கள் வந்து நீங்கும்.

திட்டங்களை நிறைவேற்றி வெல்லும் காலம் இது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை பெருகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். புதுத் திட்டங்கள் நிறைவேறும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் 10-ல் ஆட்சிபெற்று அமர்வதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மகனின் கல்வி தொடர்பாக முக்கிய பிரபலங்களிடம் சிபாரிசு கேட்பீர்கள். மனப்போராட்டம் ஓயும். ராகு-கேது சரியில்லாததால் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வளைந்து கொடுத்து வெற்றி பெற வேண்டிய தருணம் இது.

தனுசு
தனுசு

தனுசு:

ராசிக்கு 9-ல் புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்களின் சந்திப்பால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். 8-ல் நிற்கும் சூரியனால் வீண் செலவுகள், மன உளைச்சல் வரக்கூடும். 17-ம் தேதி முதல் சூரியன் 9-ல் ஆட்சிப்பெற்று அமர்வதால், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். மதிப்பு கூடும்.

12-ம் தேதி முதல் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் வலுவாக இருப்ப தால் எதையும் சமாளிக்கும் திறனைப் பெறுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்; உயரதிகாரி பாராட்டுவார். கலைத் துறையினரின் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் காலம் இது.

மகரம்
மகரம்

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வராது என்றிருந்த பணம் வரும். வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்து அதிருப்தி, மோதல்கள் விலகும். புது நட்பு மலரும்.

17-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். மனைவியின் உடல் நிலை சீராகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிநாட்டுப் பயணம் அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனம் அமையும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகக்தில் மேலதிகாரி நேசக் கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கலைத்துறையினர், போராடி படைப்புகளை வெளியிடுவார்கள்.

எதிர்ப்புகளைக் கடந்து ஏற்றம் பெறும் தருணம் இது.

கும்பம்
கும்பம்

கும்பம்

புதன் வலுவாக இருப்பதால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. 17-ம் தேதி முதல் சூரியன் ராசியைப் பார்பதால் கண் எரிச்சல், மன உளைச்சல் வரக்கூடும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்லைக் கேட்டு நடப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்குக் காரியவெற்றி உண்டு.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பழுதான டிவி, வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களை மாற்றிவிட்டு, புதுசு வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில், குறை சொல்லிக் கொண்டிருப்பவர்களை நினைத்து வருந்தாமல், கடமையைச் செய்யுங்கள். மேலதிகாரி உங்கள்மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பார். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

தடுமாற்றங்களுக்கு இடையே சாதித்துக் காட்டும் நேரம் இது.

ராசி பலன்கள்

மீனம்

சூரியன் 17- ம் தேதி முதல் 6-ல் நுழைவதால் பண வரவு சீராக இருக்கும். எதிர்ப்புகள் குறையும். சொத்து விவகாரங்களில் வீண் பிரச்னைகள் வேண்டாம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள். ராசிக்கு 7-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு நிம்மதி உண்டு. பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள்.

புதன் 6-ல் நிற்பதால் உறவினர்கள், நணபர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். இளைய சகோதரர்களால் அலைச்சல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெரிய முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களிடம் வளைந்துகொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்க அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். கலைத் துறையினர், தடைகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.

அனுபவ அறிவால் முன்னேறும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism