திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

ராசிபலன்

மேஷம்:

ங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சிபெற்று நிற்பதால், பிள்ளைகள் பொறுப்பாகச் செயல்படுவார்கள். மகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

சுக்கிரனும் புதனும் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், முன்பு ஆதரவாகப் பேசியவர்களும் உங்களைக் கண்டு ஒதுங்குவார்கள். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். கோபப்பட்டு யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். குரு 11 - ல் நிற்பதால் புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி யின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தொட்டது துலங்கும் காலம் இது.

ராசிபலன்

ரிஷபம்

சுகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது, அரசாங்கத்திடமிருந்து ப்ளான் அப்ருவல் கிடைப்பது சாதகமாக முடியும். சிலருக்குப் புது உத்தியோகம் கிடைக்கும்.

சுக்கிரனும் புதனும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால், புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றுக் கடனைத் தந்து முடிப்பீர்கள். குரு 10-ல் நிற்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் உண்டு. வெளிவட்டாரத்தில் பகை வரக்கூடும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர், புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

நாவடக்கம் தேவைப்படும் நேரம்.

ராசிபலன்

மிதுனம்

ங்களின் தைரிய ஸ்தானமான 3 - ல் சூரியன் அமர்ந்திருப்பதால், குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். சுக்கிரனும் புதனும் 4-ம் வீட்டில் நிற்பதால் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புறநகர் பகுதியில் புது வீடு, மனை வாங்குவீர்கள். 8-ல் சனி நிற்பதால் வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

குரு 9-ல் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வது பற்றி நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

ஆழம் அறிந்து காலை விட வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

கடகம்

ங்களின் தனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் பணம் வரும். ஆரோக்கியம் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.

ராகு சாதகமாக இருப்பதால் வேற்று மொழியினரால் உதவிகள் கிடைக்கும். அரசாங்கப் பணிகளில் இனி அலட்சியம் இருக்காது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாள்களால் வியாபாரத் தின் தரம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்; முன்னேற்றம் உண்டு.

வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் காலம் இது.

ராசிபலன்

சிம்மம்

ங்கள் ராசிநாதன் சூரியன் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று வலுவாக நிற்பதால், தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணம் வரும். பதவிகளும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஆரோக்கியம் கூடும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றுக் கடனைத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அதிரடியாக மாற்றுவீர்கள். ராகு 10-ல் நிற்பதால் நிற்பதால் உத்தியோகத் தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

செல்வம் - செல்வாக்கு கூடும் காலம் இது.

ராசிபலன்

கன்னி

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புதன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் 12-ல் நிற்பதால் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் கட்டுவீர்கள். தூக்கமின்மை வந்து போகும். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். 6 -ல் குரு நிற்பதால், வெளிவட்டாரத்தில பகைமை வந்து போகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ அடைவார்கள்.

முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் காலம் இது.

ராசிபலன்

துலாம்

சூரியன் லாப வீட்டில் நிற்பதால், மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பதில் கிடைக்கும். 12 - ல் சுக்கிரனும் புதனும் நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். நகைச்சுவையாகப் பேசுவீர்கள். நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். 5-ல் குரு நிற்பதால் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தடைகளைத் தாண்டி சாதித்துக் காட்டும் காலம் இது.

ராசிபலன்

விருச்சிகம்

சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அழைப்பு வரும். புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு.

நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 4 - ல் குரு நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, வருமானம் உயர வழி பிறக்கும்.

உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

தனுசு

சூரியன் வலுவாக இருப்பதால் பண வரவு உண்டு. செல்வாக்கு கூடும். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். கலைப்பொருள்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் கல்யாணம் கூடிவரும். புதன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளால் நன்மை உண்டாகும்.

குரு பகவான் சாதகமாக இருப்பதால், இளைய சகோதரி வகையில் நல்லது நடக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்குப் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

தள்ளிப்போன விஷயங்கள் விரைந்து முடியும் நேரம் இது.

ராசிபலன்

மகரம்

சூரியன் 8-ல் மறைந்தாலும் அவர் ஆட்சி பெற்றிருப்பதால், சுபப் பயணங்கள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். முகம் மலரும். தெளிவு அடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

புதன் சாதகமான வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். வேலையாள்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்குச் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

வளைந்துகொடுத்து வளரவேண்டிய தருணம் இது.

ராசிபலன்

கும்பம்

சூரியன் ஓரளவு சாதகமாக இருப்பதால், அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வழக்கில் நிதானம் அவசியம். சுக்கிரன் 8 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் பணவரவு இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். மனைவியின் ஆரோக்கியம் சீராகும்.

புதன் 8 - ம் வீட்டில் நிற்பதால் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலருக்கு திடீர் வெளிநாட்டுப் பயணம் அமையும். ராசிக்குள் குரு நிற்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

அறிவுபூர்வமாக முடிவெடுக்க வேண்டிய காலம் இது.

ராசிபலன்

மீனம்

சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசியை சுக்கிரனும் புதனும் பார்த்துக் கொண்டிருப்ப தால் சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள்.

உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும். பணவரவு திருப்தி தரும். திடீர்ப் பயணங்களால் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

அதிரடி திட்டங்களால் வெற்றி பெறும் காலம் இது.