அங்கலட்சணம் குறித்து நம் ஞான நூல்கள் பலவும் விரிவாக விளக்கியுள்ளன. ஒரு முடியைக் கொண்டு, அதற்கு உரியவரின் ஒட்டுமொத்த உருவம், அவரின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று கணித்துச் சொன்ன மகான்கள் பலர் வாழ்ந்துள்ளனர். மேலும், நம் ஜோதிட நூல்கள், ராசிகளின் அடிப்படையிலும் உரிய அங்க லட்சணங்கள் மற்றும் குணாதி சயங்களை விளக்கியுள்ளன. அதுபற்றிய விவரங்களை இங்கே காண்போம்.

மேஷம்:

நீண்ட கழுத்து, நீண்ட கரங்கள், கால்கள் மற்றும் சற்று மெலிந்த உடலமைப்பை அங்கலட்சணமாகக் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்களின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். முன்கோபமும் முரட்டு சுபாவமும் இவர்களின் உடன்பிறந்த குணங்கள். பக்தியிலும் ஞானத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். புகழ், செல்வம், சுகம் ஆகியவை இவர்களைத் தேடிவரும்.

ரிஷபம்:

பருத்த உடலும் அதற்கேற்ற தோற்றமும் இவர்களுக்கு அமைந்திருக்கும். தங்களின் பேச்சாலும் நடத்தையாலும் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடும் தன்மையுள்ளவர்கள். பொறுமையுடன் எல்லா செயல்களையும் செய்வார்கள். எதிலும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பார்கள். குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் இவர்களுக்கு அதிகமிருக்கும். மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. நல்ல ஆரோக்கியமான உடலமைப்பும் இளமையும் மிக்கவர்கள்.

மிதுனம்:

நல்ல உயரமும் அழகிய கண்களும் கொண்ட உடல் அமைப்பு உடையவர்கள். கண்டிப்பு நிறைந்த இவர்கள் கலை, இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள். சாமர்த்தியமாகப் பேசுவதில் வல்லவர்கள். துணிச்சலும் சுயநலமும் கொண்டிருப்பார்கள். சுயமுயற்சியால் வாழ்க்கையில் உயரக்கூடியவர் கள். மென்மையான சுபாவமுள்ள இவர்கள், சுடுசொற்களைத் தாங்க மாட்டார்கள்.

கடகம்:

சிவந்த நிறம், அளவெடுத்தது போன்ற அங்க அமைப்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். புத்திக்கூர்மை மிகுந்தவர்கள். தற்புகழ்ச்சியை விரும்பும் அன்பர்கள். பழைமையான பழக்க வழக்கங்களில் விருப்பம் உள்ளவர்கள். நல்ல பேச்சாளர்களாகத் திகழ்வார்கள். மனச்சஞ்சலம் இவர்களின் உடன்பிறந்த குணமாக இருக்கும்.

சிம்மம்:

இவர்களில் பெரும்பாலானவர்கள் எடுப்பான முகம், ஒளி மிக்க கண்கள், அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். உணவு வகைகளை ரசித்து, ருசித்துச் சாப்பிடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தெய்வபக்தியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபக்காரர்கள். வெளிப் படையான குணமுள்ளவர்கள். மனத்தில் உள்ளதை யோசிக்காமல் பேசிவிட்டு, பின்னர் வருந்துவார்கள்.

கன்னி:

மெலிந்த உயரமான சரீர அமைப்பு கொண்டவர்கள். நீண்ட முக அமைப்பும் எடுப்பான நாசியும் மாநிறமும் கொண்டிருப்பார்கள். புத்திக்கூர்மையும் கேள்வி ஞானமும் மிக்கவர்கள். எதிலும் நுட்பமான பார்வையுள்ளவர் களாகத் திகழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இயல்பிலேயே அமையப் பெற்றிருப்பார்கள். நேர்மையான போக்கும் சத்தியம் தவறாத குணமும் இவர்களின் சிறப்பு அம்சங்கள்.

துலாம்:

வசீகரமான தோற்றமும், நல்ல நிறமும், அளவு எடுத்தது போன்ற அங்க அமைப்புகளும் பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், எடுப்பான நாசியும், ஒளிமிக்க கண்களும் இவர்களுடையவை. வெளிப்படையான பேச்சும் பாரபட்சமற்ற போக்கும் இவர்களின் தனித்துவ குணங்கள். எளிதில் எல்லோரிடமும் கலந்து பழகி நட்பை உருவாக்கிக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக அதிகம் சிந்திப்பார்கள். இறையுணர்வும் தார்மிக நோக்கமும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.

விருச்சிகம்:

நல்ல உயரமும், மாநிறமும், வட்ட வடிவான முகமாகும் பெற்றவர்களாக விருட்சிக ராசிக்காரர்கள் இருப்பார்கள். பெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் இவர்கள், பற்றும் பாசமும் அதிகமுள்ளவர்கள். வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ்வார்கள். நெற்றியின் மத்தியில் மேலும் கீழுமாக கூடும் கோடுகள் விழுந்தால், பெரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். நீண்ட கைகளும் அகன்ற புஜமும் உடையவர்கள்.

தனுசு:

நல்ல அங்கலட்சணங் களுடன் எடுப்பான தோற்றமும் நிறமும் கொண்டவர்கள். வில் போன்ற புருவமும், கூர்மையான கண்களும், சற்று பருத்த காதுகளும், நீண்ட மூக்கும் இவர்களுடையவை. இவர்கள் எப்போதும் என் வழி நேர் வழி எனச் செல்வார்கள். அடிமை வாழ்வு வாழ்வதையும் பிறரால் கட்டுப்படுத்தப்படுவதையும் விரும்பமாட்டார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் எத்தனை சோதனைகள் வந்தாலும் சலிக்கவே மாட்டார்கள். அறிவுக்கூர்மையும் தர்ம சிந்தனையும் அதிகமாக இருக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்கள். அகன்ற பெரிய கண்களும், உயரமான தோற்றமும், நல்ல நிறமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் உடலில் மச்சங்கள் அதிகம் இருக்கும். உயரத்துக்கேற்ற பருமனும் இருக்கும். சாதுர்யமாகப் பேசுவதில் கெட்டிக் காரர்கள். ரசனையுடன் எதையும் நிதானமாகச் செய்வார்கள். சிக்கனம் இவர்களின் பலம்.

கும்பம்:

சிவந்த நிறமும் மெலிந்த உடல்வாகும் உள்ளவர்கள். இவர்களின் முகம் வட்டவடிவமாக இருக்கும். எவரையும் எளிதில் கவர்ந்திழுக்கும் புன்னகை இவர்களுக்குச் சிறப்பு அணிகலன். இவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்வர். ஆனாலும் இவரின் பேச்சிலிருக்கும் உண்மைத் தன்மையை எல்லோரும் விரும்புவர். பாரம்பர்யம், பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மீனம்:

சற்று உயரம் குறைவாகவும் பருத்த உடலும் கொண்டவர் களாக இருப்பார்கள். உடல் பளபளப்பாக இருக்கும். தலை பெரியதாகவும் நெற்றி உயர்ந்தும் காணப்படும். கவர்ச்சிகரமாக இருக்கும் கண்கள் நீல நிறத்தில் சிறியதாகக் காணப்படும். தங்க நகைகள் அணிவதில் பேராவல் கொண்டவர்களாக இருப்பார்கள். கைவிரல்கள் நீளமாகவும் உள்ளங்கை மிருதுவாகவும் இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்துச் செய்யக்கூடியவர்கள்.